சுட சுட மாலை நேர டீயுடன் வெங்காய போண்டா செய்ய 10 நிமிஷம் கூட ஆகாது! நாலே பொருளில் நாவூரும் வெங்காய போண்டா எப்படி செய்வது?

onion-bonda-vadai
- Advertisement -

மாலை நேரத்தில் சுட சுட டீ அல்லது காபியுடன் சாப்பிடுவதற்கு வெங்காய போண்டா வைத்துக் கொடுத்தால் எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க. வெங்காய போண்டா மாலையில் செய்வதற்கு 10 நிமிடம் கூட எடுக்காது! வீட்டிலேயே சாதாரணமாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே ரோட்டோர கடைகளில் கிடைக்கக் கூடிய சுவையான வெங்காய போண்டா நாமே ஆரோக்கியமான முறையில் நம் கைகளால் தயாரித்து விடலாம்! நாவூறும் வெங்காய போண்டா எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வெங்காய போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 4, கடலை மாவு – அரை கப், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை – 2 கொத்து, சமையல் எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

வெங்காய போண்டா செய்முறை விளக்கம்:
வெங்காய போண்டா செய்வதற்கு முதலில் பெரிய வெங்காயம் நான்கு என்கிற எண்ணிக்கையில் எடுத்து அதன் தோலை உரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ரொம்பவும் மெல்லியதாக பச்சடிக்கு வெட்டுவது போல நீளவாக்கில் எல்லா வெங்காயத்தையும் நறுக்கி தனித்தனியாக கைகளால் உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நீளவாக்கில் நறுக்கும் பொழுது தான் அதை சாப்பிடும் பொழுது ரொம்பவே சுவையாக இருக்கும்.

நறுக்கி வைத்த வெங்காயத்துடன் அரை கப் அளவிற்கு கடலை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். கடலை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு வெறும் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் பதார்த்தங்கள் செய்யும் பொழுது கண்டிப்பாக பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். கால் டீஸ்பூன் க்கும் குறைவாக கொஞ்சமாக பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய்களை எடுத்து காம்பு நீக்கி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காய போண்டா என்றாலே கருவேப்பிலையின் வாசம் நன்கு வீச வேண்டும். 2 கொத்து கறிவேப்பிலையை பச்சை பசேலென உருவி பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து போண்டா மாவு பதத்திற்கு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகள் பிடிக்க வேண்டும்.

சிறு சிறு உருண்டைகளாக நன்கு அழுத்தம் கொடுத்து பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் உருண்டைகள் பிடித்த பின்பு அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மீடியமாக வைத்து கொண்டு ஒவ்வொரு உருண்டைகளையும் போட்டு பொறுமையாக எல்லா புறமும் ஒன்று போல சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த வெங்காய போண்டா சுவையில் கொஞ்சமும் குறை இருக்காது. ஈஸியான மொறுமொரு வெங்காய போண்டா இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -