- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வெறும் 4 பொருள் போதுங்க. காரசாரமான சூப்பரான வெங்காய தொக்கு 10 நிமிடத்தில் ரெடி.

வெறும் 4 பொருள் போதுங்க. காரசாரமான சூப்பரான வெங்காய தொக்கு 10 நிமிடத்தில் ரெடி.

- Advertisement -

கோதுமை தோசைக்கு, இட்லி, தோசை, சப்பாத்திக்கு, பூரிக்கு, சுடச்சுட சாதத்தில், எதற்கு வேண்டுமென்றாலும் இந்த வெங்காய தொக்கை போட்டு சாப்பிடலாம். அவ்வளவு ருசியாக இருக்கும். காரசாரமாக, பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊற வைக்கக் கூடிய இந்த தொக்கு ரெசிபியை மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க. பக்குவமா இந்த தொக்கை செய்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால் ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாது. சரி சூப்பரான இந்த பாரம்பரிய ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோமா.

onion

முதலில் 1/2 கிலோ அளவு வெங்காயத்தை எடுத்து தண்ணீரில் போட்டு தோல் உரித்து, தோல் உரித்த முழு வெங்காயங்களை ஒரு காட்டன் துணியில் போட்டு நன்றாக துடைத்துவிட வேண்டும். வெங்காயத்திற்கு மேலே தண்ணீர் இருக்கக்கூடாது. இந்த வெங்காயங்களை நான்கு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் இஷ்டம் போல எப்படியோ கொஞ்சம் பெரிய துண்டுகளாக கூட வெட்டிக் கொள்ளலாம். இதை மிக்ஸியில் போட்டு அரைக்கத் தான் போகின்றோம்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வெட்டி வைத்திருக்கும் வெங்காயங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வெங்காயத்துடன் தனி மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன், புளி எலுமிச்சை பழ அளவு, சிறிய துண்டு வெல்லம், உப்பு தேவையான அளவு, இந்த 4 பொருட்களை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் விழுதுபோல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் உப்பு சேரும் போது தானாகவே தண்ணீர் விடும். அரைத்து இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.

இப்போது இந்தத் தொக்கை தாளிக்கலாம். அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன் போடவேண்டும். கடுகு பொரிந்தவுடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதை கடாயில் ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். (ஒருமுறை உப்பு காரம் சரிபார்த்துக் கொள்ளுங்கள், தேவை என்றால் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்.)

- Advertisement -

வெங்காயத்தின் பச்சை வாடை முழுமையாக நீங்கி, வெங்காயத்தின் சிடசிடப்பு அடங்கி, நாம் ஊற்றிய நல்லெண்ணெய் அனைத்தும் பிரிந்து வரவேண்டும். வெங்காய விழுது, தொக்கு பதத்திற்கு வந்தவுடன், அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான். சூப்பரான வெங்காய தொக்கு தயார்.

onion-thokku4

பின்குறிப்பு: இதில் உங்களுக்கு மிளகாய் தூள் அதிகமாக தேவைப்பட்டால், மிளகாய் தூளை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். இந்த தொக்கில் நாம் வெல்லம் சேர்த்து இருக்கின்றோம். இதனால் உப்பு காரம் புளிப்பு அனைத்தும் சரியான பக்குவத்தில் கிடைக்கும். உங்களுக்கு வெல்லம் பிடிக்கவில்லை என்றால், வெல்லத்தை தவிர்த்து கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம். மிஸ் பண்ணாதீங்க. இந்தத் தொக்கை ட்ரை பண்ணி பாருங்க. காரசாரமான ரொம்ப ரொம்ப ஈசியான ரெசிபி.

சற்று முன்