கண் திருஷ்டி நீக்கும் ‘வெண்கடுகு’! இப்படி போட்டால் உங்களை சுற்றியிருப்பவர்களின் பொறாமை பார்வைகள் சுக்குநூறாகிவிடும்.

venkadugu-amman

நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் கடுகை போலவே இருக்கும் இந்த வெண்கடுகு மிகவும் விசேஷமான சக்திகளைக் கொண்டுள்ளது. இது வெண்மை நிறத்தில் இருப்பதால் வெண்கடுகு என்று கூறப்படுகிறது. ஆன்மீக பரிகாரங்கள் செய்ய வெண்கடுகு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் திருஷ்டிகள் நீக்கக்கூடிய பேராற்றல் இதற்கு இருப்பதால் வீட்டில், கடைகளில், தொழில் ஸ்தாபனங்கள் போன்ற இடங்களில் திருஷ்டி சுற்றி போட வெண்கடுகு பயன்படுகிறது. தெய்வீக ஆற்றல் மிகுந்த வெண்கடுகு வைத்து என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

venkadugu

அதர்வண வேத பாடல்களில் வெண்கடுகை பற்றிய சிறப்புரை பல இதற்கு சான்றாக கூறலாம். வெண்கடுகு பேய்களை விரட்டுவதற்கு முந்தைய காலங்களில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது பேய்கள் என்றால் நம்மை சுற்றி இருக்கும் கெட்ட அதிர்வலைகள், துஷ்ட சக்திகளை மற்றும் கண் திருஷ்டிகளையும் நீக்க வல்லது என எடுத்துக் கொள்ளலாம்.

புறநானூற்றுப் பாடல்:
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்!

sambrani

இப்பாடலில் ‘ஐயவி’ புகைப்பவும் என்று உள்ளது அல்லவா? ஐயவி என்பது வெண்கடுகை குறிக்கிறது. வீட்டில் வெண்கடுகு சேர்த்து தூபம் போட்டால் வீட்டில் இருக்கும் துஸ்ட சக்திகள் அனைத்தும் விலகுவதாக ஐதீகம் உள்ளது. வீட்டில் திருஷ்டிகள் நீங்க செய்யக்கூடிய சிறுசிறு பரிகாரங்கள் உண்டு. வீட்டில் கெட்ட சக்திகள் விலக வேப்ப மர இலைகளை எடுத்து வந்து கதவில் சொருகி வைக்க வேண்டும்.

- Advertisement -

வெண்கடுகு சாம்பிராணி தூபம் போட வேண்டும். வீட்டில் யாழ் இசைத்தால் எந்த ஒரு துர்தேவதைகளும் அணுகுவது இல்லை என்று கூறப்படுகிறது. ஆம்பல் குழல் ஊதுவது, மணி அடிப்பது, காஞ்சி பாடுவது, அகில் புகை போடுவது, வெண்கடுகை நெய்யுடன் சேர்த்து நெற்றியில் வைத்துக் கொள்வது போன்ற விஷயங்களை செய்யும் பொழுது வீட்டிலும், நம்மையும் சுற்றியுள்ள திருஷ்டிகள் பொறாமை கண்கள் அத்தனையும் விலகும் என்று நம்பப்படுகிறது.

dhoopam

வாரம் ஒருமுறையாவது நீங்கள் சாம்பிராணி போடும் பொழுது வெண்கடுகை அதில் தூவி விடுங்கள். இதனை தொழில் செய்யும் இடங்களிலும் செய்ய வியாபாரம் செழிக்கும். சிறிதளவு கையில் வெண்கடுகை எடுத்து கொண்டு வீட்டில் இருப்பவர்களை வரிசையாக கிழக்கு பார்த்து உட்கார வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு வலமிருந்து இடமாக மூன்று முறையும், இடமிருந்து வலமாக மூன்று முறையும் திருஷ்டி எடுக்க வேண்டும். பின்னர் புகைத்துக் கொண்டிருக்கும் சாம்பிராணியில் அதனை போட்டால் படபடவென்று வெடிக்க ஆரம்பித்து விடும். எந்த அளவிற்கு வெண்கடுகு வெடிக்கிறதோ! அந்த அளவிற்கு உங்கள் மேல் இருக்கும் பொறாமை பார்வைகள், திருஷ்டிகள் அனைத்தும் விலகும்.

venkadugu

வெண் கடுகை மைய அரைத்து அதனுடன் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மை போன்ற கலவையை கர்ப்பிணி பெண்கள் தினமும் இட்டுக் கொண்டால் கருச்சிதைவு ஏற்படுவது, தீய சக்திகள் அண்டுவது போன்ற பிரச்சனைகளை விலக்கும். வெண் கடுகு தாயத்து செய்து கர்ப்பிணி பெண்கள் அணிந்து கொண்டால் தீயசக்திகள் எதுவும் அவர்களை அண்டாது. குழந்தைப்பேறு சிறப்பாக அமையும். குழந்தை இல்லாதவர்கள் வெண்கடுகு தூபத்தை சுவாசித்து வரவும், வெண்கடுகு நெய்யுடன் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொண்டு வரவும் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. இதைப் பற்றிய குறிப்புகள் அதர்வண வேதம், புறநானூற்றுப் பாடல், திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய உரைகளில் குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.