உங்களுக்கு அதிக தனலாபங்களை உண்டாக்கும் அற்புத போற்றி மந்திரம் இதோ

tirupati

தற்போதைய உலகில் மனிதன் நன்றாக வாழ்வதற்கு பணம் தான் மிகவும் முக்கியமாக இருக்கிறது. அதே போன்று சிறப்பான இல்லற வாழ்க்கை, ஆரோக்கியமான குழந்தை பாக்கியம், நோய்நொடி இல்லாத வாழ்க்கை போன்றவையும் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய செல்வங்களாக கருதப்படுகிறது. பக்தர்கள் வேண்டியவை தந்திட திருமலையில் வெங்கடேசன் ரூபத்தில் பெருமாள் நின்றிருக்கிறார். அந்த திருப்பதி திருமலை வெங்கடேஸ்வர பெருமாளுக்குரிய இந்த வெங்கடேஸ்வர போற்றி மந்திரம் துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Perumal

வெங்கடேஸ்வர போற்றி துதி

ஓம் அனந்த நாதா போற்றி
ஓம் அயோத்தி ராஜா போற்றி
ஓம் அச்சுதா போற்றி
ஓம் அழகர்மலை அழகா போற்றி
ஓம் அனந்த சயனா போற்றி
ஓம் அநந்தாயா போற்றி
ஓம் ஆலிலைக் கண்ணா போற்றி
ஓம் ஆதிசேஷா போற்றி
ஓம் ஆதித்யா போற்றி
ஓம் இலட்சுமிவாசா போற்றி
ஓம் கார்வண்ணா போற்றி
ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் கமலக்கண்ணா போற்றி
ஓம் கோவிந்தா போற்றி
ஓம் கோபாலா போற்றி
ஓம் கோபிநாதா போற்றி
ஓம் கோவர்த்தனா போற்றி
ஓம் கோகுலவாசா போற்றி
ஓம் கோபியர் நேசா போற்றி
ஓம் கேசவா போற்றி
ஓம் மாதவா போற்றி
ஓம் மதுசூதனா போற்றி
ஓம் மதுராநாதா போற்றி
ஓம் மாமலைவாசா போற்றி
ஓம் மலையப்பா போற்றி
ஓம் மணிவண்ணா போற்றி
ஓம் மாயவா போற்றி
ஓம் முகுந்தா போற்றி
ஓம் மோகனசுந்தரா போற்றி
ஓம் பத்மநாபா போற்றி

ஓம் பரமாத்மா போற்றி
ஓம் பரந்தாமா போற்றி
ஓம் பரபிரம்மா போற்றி
ஓம் பக்தவச்சலா போற்றி
ஓம் பார்த்தசாரதி போற்றி
ஓம் பாலச்சந்திரா போற்றி
ஓம் பாற்கடல்வாசா போற்றி
ஓம் நவநீத கிருஷ்ணா போற்றி
ஓம் நந்த கோபால போற்றி
ஓம் நந்த முகுந்தா போற்றி
ஓம் நந்த குமாரா போற்றி
ஓம் நரசிம்மா போற்றி
ஓம் நாராயணா போற்றி
ஓம் நமோ நாராயணா போற்றி
ஓம் திரு நாராயணா போற்றி
ஓம் லட்சுமி நாராயணா போற்றி
ஓம் தேவகி நந்தனா போற்றி
ஓம் தாமோதரா போற்றி
ஓம் திருவிக்கிரமா போற்றி
ஓம் ராமகிருஷ்ணா போற்றி
ஓம் ராஜகோபாலா போற்றி
ஓம் ஸ்ரீராமச்சந்திரா போற்றி
ஓம் ரகுநாதா போற்றி
ஓம் வேணுகோபாலா போற்றி
ஓம் தீனதயாளா போற்றி
ஓம் சத்திய நாராயணா போற்றி
ஓம் சூரிய நாராயணா போற்றி
ஓம் நமோ நாராயணா போற்றி
ஓம் ஸ்ரீதரா போற்றி
ஓம் திருவேங்கடா போற்றி

Perumal

ஓம் திருமலைவாசா போற்றி
ஓம் முரளீதரா போற்றி
ஓம் வைகுந்தவாசா போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமி நாதா போற்றி
ஓம் வாஸுதேவா போற்றி
ஓம் யஸோத வத்சலா போற்றி
ஓம் வாமனா போற்றி
ஓம் திருவரங்க நாதா போற்றி
ஓம் ஹயகிரீவா போற்றி
ஓம் சக்கரத்தாழ்வாரே போற்றி
ஓம் தன்வந்த்ரியே போற்றி
ஓம் ஜெகன்நாதா போற்றி
ஓம் கலியுகவரதா போற்றி
ஓம் வரதராஜா போற்றி
ஓம் சௌந்தரராஜா போற்றி
ஓம் குருவாயூரப்பா போற்றி
ஓம் சாரங்கபாணியே போற்றி
ஓம் யசோதை மைந்தனே போற்றி
ஓம் பலராமா போற்றி
ஓம் பரசுராமா போற்றி
ஓம் ஜெயராமா போற்றி
ஓம் பாலமுகுந்தா போற்றி
ஓம் பாண்டுரங்கா போற்றி
ஓம் பண்டரிநாதா போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் பக்த நாதா போற்றி
ஓம் கோகிலநாதா போற்றி
ஓம் பாஸ்கரா போற்றி
ஓம் விஷ்ணவே போற்றி
ஓம் ஸ்ரீரங்கனாதா போற்றி

- Advertisement -

Lord Perumal

ஓம் பசுபாலகிருஷ்ணா போற்றி
ஓம் நரநாராயணா போற்றி
ஓம் துளஸீதாசா போற்றி
ஓம் முரளீதரா போற்றி
ஓம் தயாநிதியே போற்றி
ஓம் யஸோத வத்ஸலா போற்றி
ஓம் க்ருக்ஷிகேசா போற்றி
ஓம் வாமனா போற்றி
ஓம் வராகா போற்றி
ஓம் நாகராஜனே போற்றி
ஓம் பத்ரி நாராயணா போற்றி
ஓம் ஸத்ய நாராயணா போற்றி
ஓம் ஹரி நாராயணா போற்றி
ஓம் ஸச்சிதானந்தனே போற்றி
ஓம் துஷ்ட ஸம்ஹாரக போற்றி
ஓம் துரித நிவாரண போற்றி
ஓம் ஸ்ரீ வேங்கடேசா போற்றி போற்றி

திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் போற்றி துதி இது. இந்தத் துதியை தினமும் 108 முறை உச்சரிப்பது பெருமாளின் அருளை உங்களுக்கு கிடைக்கச்செய்யும். மேலும் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளின் படத்திற்கு மலர்கள் சமர்ப்பித்து, தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி இம்மந்திரத்தை 108 முறை துதிக்க நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் தவித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணமாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல அழகான அறிவாற்றல் மிக்க குழந்தை பேறு கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி நல்ல லாபங்கள் உண்டாகும். நீண்டகால நோய் பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். வெங்கடேஸ்வர பெருமாள் சனி பகவானின் அம்சமாக கருதப்படுவதால் சனி கிரக தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

perumal

மனிதர்களாக பிறந்து விட்டாலே நாம் எந்த அளவிற்கு இன்பங்கள் அனுபவிக்கிறோமோ அதே அளவு துன்பங்களையும் அனுபவிக்கிறோம். மும்மூர்த்திகளில் பக்தர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டு அவர்களை எப்போதும் காப்பவராக இருப்பது மகாவிஷ்ணுவாகிய திருமால் தான். செல்வத்தின் முழு உருவான கருணை குணம் அதிகம் கொண்ட லட்சுமி தேவியை தனது இதயத்தில் வைத்திருந்து திருப்பதி திருமலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரராக அருள்பாலிக்கிறார். அப்படியான வெங்கடேச பெருமாளின் மீது இயற்றப்பட்ட இந்த போற்றி துதியை தினமும் துதித்து வருவதால் நலங்கள் பல ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
செவ்வாய் காயத்ரி மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் படிக்க எங்களுடன் இனைந்து இருங்கள்

English Overview:
Here we have Venkateswara potri in Tamil. This is also called as Perumal slogam in Tamil or Perumal manthiram in Tamil or Vishnu manthirangal in Tamil or Thirumanam seekiram nadakka manthiram in Tamil.