தலைமுடிக்கு வெந்தயம் சேர்த்தால் சளி பிடிக்கிறதா? அப்படின்னா வெந்தய கீரையை இப்படி சேர்த்து பாருங்கள் காடு மாறி உங்க முடி கருகருன்னு அடர்த்தியாக வளருமே!

venthaya-keerai-hair-growth
- Advertisement -

தலைமுடி உதிர்ந்து மீண்டும் வளராமல் போவதற்கு உடல் உஷ்ணம் ஒரு காரணமாக இருக்கிறது. இந்த உஷ்ண தன்மையை குறைத்து தலைமுடியின் வளர்ச்சியில் வேகமான மாற்றத்தை கொண்டு வரும் அற்புதமான அமினோ ஆசிட்ஸ் நிறைந்துள்ள வெந்தயத்தை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சிலருக்கு வெந்தயம் பயன்படுத்தினால் சளி பிடிக்க ஆரம்பித்து விடும். இப்படி வெந்தயம் பயன்படுத்துவதால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாதவர்கள் வெந்தய கீரையை எப்படி தலைமுடிக்கு பயன்படுத்துவது? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பகுதியின் மூலம் நாம் தொடர்ந்து இந்த அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வெந்தயத்தில் இருக்கக்கூடிய சத்துக்கள் அத்தனையும் தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. இழந்த முடியை மீண்டும் முளைக்க செய்யக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. மேலும் உடலை குளிர்ச்சியுற செய்து தலைமுடியில் இருக்கக்கூடிய வறண்ட தன்மையை நீக்கவும் வெந்தயம் உதவுகிறது. இத்தகைய வெந்தயம் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் வெந்தயத்திற்கு மாற்றாக வெந்தயக் கீரையை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.

- Advertisement -

வெந்தயத்தில் இருக்கக்கூடிய அத்தனை சத்துக்களும் வெந்தயக்கீரையிலும் இருக்கிறது. வெந்தயக் கீரையில் ஏராளமான நுண் ஊட்ட சத்துக்கள் உள்ளன. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். சாதாரண மண்ணிலேயே கொஞ்சம் வெந்தயத்தை போட்டு வைத்தால் பத்து நாட்களில் முளைவிட்டு வெந்தயக்கீரை தயாராகிவிடும். பின்பு அறுவடை செய்து நாம் சமையலுக்கு வீட்டிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த அளவிற்கு சுலபமான முறையில் வளர்க்கக்கூடிய இந்த வெந்தயக் கீரையை பெரும்பாலும் நாம் வளர்ப்பது கிடையாது.

வீட்டிலேயே நீங்கள் வெந்தயக் கீரையை வளர்த்து அதை அறுவடை செய்து வேரை மட்டும் வெட்டி விட்டு நன்கு சுத்தம் செய்து வெந்தயக் கீரைகளை கழுவி கொள்ளுங்கள். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். அரைத்து எடுத்த இந்த வெந்தயக் கீரை விழுதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை கையில் தட்டையாக தட்டி மொட்டை மாடியில் அடிக்கின்ற வெயிலில் நன்கு காய விட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கொஞ்சம் கூட ஈரப்பதம் இல்லாமல் மொரமொறவென்று வெந்தயக்கீரை அனைத்தும் காய்ந்து இருக்க வேண்டும். இந்த காய்ந்த வெந்தயக் கீரை வில்லைகளை நீங்கள் பயன்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற விடுங்கள். தேங்காய் எண்ணெயை டபுள் பாய்லிங் முறையில் நீங்கள் லேசாக காய வைத்து இந்த வெந்தய வில்லைகளை போட்டு காய்ச்சி வடிகட்டியும் பயன்படுத்தலாம். அல்லது நேரடியாக அப்படியே தேங்காய் எண்ணெயில் சேர்த்து ஒரு வாரம் வரை நன்கு ஊற வைத்து அதன் பிறகு அப்படியேவும் நீங்கள் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே:
இதோ, இப்படி திரும்பி பார்ப்பதற்குள் தலைமுடியை கடகடவென வளர்க்க ப்ரோட்டீன் ரிச் ஹேர் பேக், மலிவான ஹேர் பேக் இதோ உங்களுக்காக.

இந்த வெந்தயக் கீரை சேர்த்த எண்ணெயை தலைமுடிக்கு 10 நிமிடம் மசாஜ் செய்து நன்கு தடவி வர விரைவாகவே இழந்த முடியை நீங்கள் மீண்டும் அடையலாம். இந்த முறையில் நீங்கள் வெந்தயத்தை பயன்படுத்தும் பொழுது சளி பிடிக்காது. மேலும் தலைமுடியின் வளர்ச்சியும் ரொம்பவே அபரிமிதமாக இருக்கும். காடு மாதிரி உங்க முடியும் அடர்த்தியாக கருகருன்னு நன்கு வளரும். ஸ்கேல்ப் பகுதியில் இருக்கக் கூடிய டேமேஜ்களை சரி செய்து முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய அற்புதமான வெந்தயக் கீரையை இதே மாதிரி நீங்களும் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

- Advertisement -