இதோ, இப்படி திரும்பி பார்ப்பதற்குள் தலைமுடியை கடகடவென வளர்க்க ப்ரோட்டீன் ரிச் ஹேர் பேக், மலிவான ஹேர் பேக் இதோ உங்களுக்காக.

hair15
- Advertisement -

இதோ திரும்பி பார்ப்பதற்குள் நம்முடைய முடியை அழகாக அடர்த்தியாக வளர்த்து விடலாம். அது ரொம்ப ரொம்ப சுலபம்தான். ஆனால் அதற்குண்டான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். தலைமுடிக்கு தேவையான சத்துக்களை ஹேர் பேக்கில் கொடுக்க வேண்டும். உங்களுடைய உடலுக்கு தேவையான சத்துக்களை நீங்கள் உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்‌. இன்று நாம் பார்க்கக் கூடிய இந்த ஏர்பேக் ப்ரோட்டீன் சத்து நிறைந்த ஹர்பேக். இந்த ஹேர் பேக்குக்கு தேவையான பொருட்கள் முளைகட்டிய பச்சைப் பயிறு, புளித்த தயிர், முட்டை, விளக்கெண்ணெய்‌. இதில் உங்களுக்கு முட்டை சேர்க்க விருப்பமில்லை என்றால் தவிர்த்துக் கொள்ளலாம்.

தலை முடியை வளர்க்க ப்ரோட்டீன் சத்து நிறைந்த ஹேர் பேக்:
முதலில் ஒரு கைப்பிடி அளவு பச்சை பயிரை தண்ணீரில் போட்டு 8 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு வெள்ளை காட்டன் துணியில் இந்த பச்சை பயிரை போட்டு முடிச்சு போட்டு வைத்தால் அடுத்த எட்டு மணி நேரத்தில் முளைகட்டி வந்துவிடும். 24 மணி நேரம் கூட வைத்து இந்த பச்சை பயிரை முளை கட்ட வைக்கலாம்.

- Advertisement -

முளைகட்டிய பச்சை பயிறு நம்மிடம் இருக்கிறது. அது அப்படியே இருக்கட்டும். அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முளைகட்டிய பச்சைப் பயிரை போடுங்கள். இதை அரைப்பதற்கு தேவையான அளவு கொஞ்சம் புளித்த தயிரை ஊற்றி, நைஸ் ஆக அரைத்து இதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு கொஞ்சம் லிக்விட் ஆக ஊட்டச்சத்து நிறைந்த ஹேர்பேக் கிடைத்திருக்கும் அல்லவா. இதில் முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி விளக்கெண்ணெயை ஒரு ஸ்பூன் ஊற்றி நன்றாக அடித்து கலந்தால் சூப்பரான ஹேர் பேக் தயார்.

இந்த ஹேர் பேக்கை கொஞ்சம் கவனம் செலுத்தி உங்களுடைய ஸ்கேல்பில் படும்படி வைத்து ஐந்து நிமிடம் நன்றாக மசாஜ் செய்யுங்கள். மீதம் இருக்கும் அந்த ஹேர் பேக்கை முடியின் நுனி வரை நன்றாக தடவி விடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். உங்களுடைய முடி சூப்பர் சாஃப்ட் சில்கியாக மாறி இருக்கும்.

- Advertisement -

வாரத்தில் ஒரு நாள் இந்த பேக்கை முடிக்கு மேல போடுங்க. வாரத்தில் ஒரு நாள் அந்த பச்சை பயிரை முளைகட்டி சேலட் ஆகவோ வேகவைத்தோ சாப்பிடுங்கள். முட்டையையும் தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். இதோடு சேர்த்து உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய விட்டமின் சி சத்து நிறைந்த, பயோட்டின் சத்து நிறைந்த பொருட்களை சாப்பிட்டு வர தலைமுடி உதிர்வு முதலில் நிற்கும் பிறகு தலைமூடி போஷாகோடு வளர தொடங்கும்.

இதையும் படிக்கலாமே: கொத்துக் கொத்தாக தலை வாரும் பொழுது சீப்போடு முடி வருகிறதா? கவலையே படாதீங்க நம் பாட்டி சொன்ன இந்த ஹெர்பல் டானிக்கை ட்ரை பண்ணி பாருங்க ஒரு முடி கூட கொட்டாது!

பிறகு மூன்று மாதத்திற்குள், தலைமுடி நிச்சயம் அழகாக அடர்த்தியாக நீளமாக வளர்ந்து இருக்கும். அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -