உடலின் நோய்களை தீர்க்கும் வெந்தய குழம்பு செய்யும் முறை

venthayam

பொதுவாக காரக்குழம்பு வகைகளை நாம் அடிக்கடி உண்பதால் பலருக்கும் அல்சர் போன்ற பல பிரச்சனைகள் நம் வயிற்றில் ஏற்படும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வெந்தய குழம்பு உதவும். வெந்தயத்தினை வெறும் வயிற்றில் உட்கொண்டால் வயிறு குளிரும் என்பது நமது முன்னோர்கள் நமக்கு கூறிய வைத்யமாகும்.

venthayam_1

வெந்தய குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
கடலை எண்ணெய் – தேவையான அளவு
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் – 100 கிராம்
பூண்டு – 10 பல்
கருவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – 1
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
தனியா தூள் – 3/4 ஸ்பூன்
சீரகப்பொடி – 1/4 ஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
புளி – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு

வெந்தய குழம்பு செய்முறை:

முதலில் கடாயில் நல்லெண்ணெய் விட்டு பிறகு அதனுடன் கடலை எண்ணையை சேர்த்து நன்றாக சூடாக்கவும். அதன்பிறகு அதில் வெந்தயம் மற்றும் கடுகு போட்டு நன்றாக தாளிக்கவும். வெந்தயம் கருகாமல் இருக்கவேண்டும்.

venthayam_2

- Advertisement -

பிறகு அதனுடன் சாம்பார் வெங்காயம் சேர்க்கவேண்டும். வெங்காயத்தினை பொடியாக அறியாமல் பாதியாக போடவேண்டும். பிறகு பூண்டு மற்றும் தக்காளி அறிந்து போடவேண்டும். பிறகு அதனுடன் மிளகாய்த்தூள்,தனியாதூள் மற்றும் சீரகப்பொடி போட்டு நன்றாக கலக்கவும்.

venthayam_3

பிறகு அதனுடன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து ஊறவைத்த புளிக்கரைசல் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு கொதித்ததும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி எடுத்தால் சுவையான வெந்தய குழம்பு தயார்.

venthayam_4

சமைக்க ஆகும் நேரம் – 15 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
சப்பாத்தி டால் செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Here we have Venthaya kuzhambu recipe in Tamil. It is also called as Venthaya kuzhambu seimurai or Venthaya kuzhambu seivathu eppadi in Tamil or Venthaya kuzhambu preparation in Tamil.