சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள வட இந்திய டால் செய்யும் முறை

Daal
- Advertisement -

டால் என்பது வடமாநில உணவு வகையாகும். பொதுவாக சப்பாத்தி சாபிபிடும் போது அதிகமாக அவர்கள் டால் விரும்பி சாப்பிடுவார்கள். டால் உடலுக்கு மிகுந்த சக்தியை குடுக்கும் ஒரு உணவு. சோர்வினை போக்கும் தன்மை டால்க்கு உண்டு. அப்படிப்பட்ட டால் எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

Daal 1

டால் செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

பாசிப்பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சைமிளகாய் – 3
கடுகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
நெய் – சிறிதளவு

டால் செய்முறை:

ஒரு குக்கரில் ஊறவைத்த பாசிப்பருப்பு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை போட்டு அதனுடன் தக்காளி, பச்சைமிளகாய் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி நன்றாக வேகவைக்க வேண்டும்.

- Advertisement -

Daal 2

நன்றாக 4 விசில் வரை வெந்தவுடன் உப்பு சேர்த்து நன்றாக கடையவும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டி எடுத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் சீரகம் , கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கடைந்த தாளில் ஊற்றவும்.

தாளித்த பொருட்களை தாளில் ஊற்றியதும் சுவையான டால் தயார். இதனை அனைத்து டிபன் வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

- Advertisement -

Daal3

சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 2

இதையும் படிக்கலாமே:
இட்லி, தோசைக்கு கொத்தமல்லி சட்னி செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English Overview:
Here we have Daal recipe in Tamil. It is also called as Daal seimurai or Daal seivathu eppadi in Tamil or Daal preparation in Tamil.

- Advertisement -