- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசுக்கிரனை வசியம் செய்யும் சுவிட்ச் வேர்ட்

சுக்கிரனை வசியம் செய்யும் சுவிட்ச் வேர்ட்

- Advertisement -

இன்று சுக்கிரனை வசியம் செய்து, நம் பிடியில் வைத்துக்கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பு. சுக்கிரனை கைது செய்து நம்மோடு வைத்துக்கொள்ள முடியாது. பாசத்தால் கட்டி போட்டு நம்மோடு வைத்துக் கொள்ளலாம். சுக்கிரன் என்பவர் ஒரு நட்சத்திரம். அந்த ஸ்டார் நமக்கு நல்லது செய்தால் நாம் சூப்பர் ஸ்டாராக மாறலாம். சுக்கிர நட்சத்திரத்திற்கு உரிய எண் 6.

இன்று 666 பிரபஞ்ச வசிய நாள் அல்லவா. இந்த நாளில் அந்த சுக்கிர பகவானை வசியம் செய்யக்கூடிய ஒரு வசிய வார்த்தையை சொல்லவில்லை என்றால் எப்படி? இந்த நாள் நிச்சயம் முழுமை அடையாது. சுக்கிர பகவானுக்கு உரிய பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு சுவிட்ச் வேர்ட் பற்றிய தகவலைத்தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

இந்த வார்த்தையை இன்று இரவு தூங்க செல்லும் போது, நீங்கள் சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா? அந்த சுக்கிர பகவானுக்கு கஷ்டம் வரும்போது, அவருக்கு நீங்கள் பண உதவி செய்யலாம். அந்த அளவுக்கு செல்வ செழிப்பில் நீங்கள் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். சரி சரி கதை சொன்னதெல்லாம் போதும். அந்த வார்த்தை என்ன அதை சொல்லுங்கள் முதலில் என்று நீங்கள் யோசிப்பது நன்றாக புரிகிறது.

சுக்கிரனை வசியம் செய்யும் ஸ்விட்ச் வேர்ட்

“Venus Sanction Abundance” நேரத்தை கடத்தாமல் இந்த வார்த்தையை நீங்களும் தெரிந்து கொண்டீர்களா. இருங்க இதோடு முடிந்துவிடவில்லை. இந்த வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம். ஓரளவுக்கு கிழியாத பிரியாணி இலையாக பார்த்து ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் பச்சை நிற பேனா, ஸ்கெட்ச் பென்சில் ஏதாவது இருந்தால் அதில், மேலே சொல்லப்பட்டிருக்கும் இந்த மந்திர வார்த்தையை, சுவிட்ச் வேர்டை பிரியாணி இலை மேல் எழுதி விடுங்கள்.

- Advertisement -

பச்சை நிற பேனா இல்லை என்றால் நீல நிற பேனாவில் கூட எழுதிக் கொள்ளுங்கள் கருப்பு நிறம் பயன்படுத்த வேண்டாம். பிறகு இந்த வார்த்தையை 6 முறை படித்துவிட்டு, சுக்கிரன் எனக்கு வசியமாக வேண்டும். நான் நிறைய பணத்தை சம்பாதிப்பேன். பணத்தை ஈர்க்கும் சக்தி எனக்குள் அதிகம் இருக்கிறது, என்று நேர்மறையான வார்த்தைகளை சொல்லிவிட்டு, இந்த பிரியாணி இலையை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கி விடுங்கள். இவ்வளவுதான் பரிகாரம்.

இன்று வெள்ளிக்கிழமை. சுக்கிரனை பற்றி பேசுவதே பெரும் பாக்கியம். அந்த சுக்கிரனை வசியம் செய்ய ஒரு வார்த்தையை கற்றுக் கொண்டது மிகப்பெரும் பாக்கியம். மறுநாள் காலை இந்த பிரியாணி இலையை எடுத்து உங்கள் தலையை மூன்று முறை சுற்றி நெருப்பில் பொசிக்கி விடுங்கள். பரிகாரம் முடிந்தது.

இதையும் படிக்கலாமே: நாளை 7-6-2025 செய்ய வேண்டிய நரசிம்மர் வழிபாடு

தினம் தினம் தூங்க செல்வதற்கு முன்பு மனதை அமைதிப்படுத்தி இந்த வார்த்தையை மட்டும் சொன்னால் போதும். பணத்தை ஈர்க்கும் ரகசியம் உங்களுக்கு தெரிந்துவிடும். இவ்வளவு அற்புதமான வழிபாடும், மந்திர வார்த்தையும் உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மனமகிழ்ச்சியுடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்