கனவிலும் இனி உங்களுடைய முடி கொட்டாது. 10 ரூபாய்க்கு இந்த எண்ணெயை வாங்கி தேய்த்து தான் பாருங்களேன்.

hair4
- Advertisement -

நம்மில் எல்லோருடைய மனதிலும் இப்படி ஒரு எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. நிறைய காசு கொடுத்து காஸ்லியான எண்ணெய், ஷாம்பூவை வாங்கி போட்டால் தான் தலை முடி அடர்த்தியாக வளரும் என்று. அப்படி எல்லாம் கிடையாது. இயற்கையாக மலிவாக நமக்கு கிடைக்கக்கூடிய சில பொருட்களில் கூட சத்துக்கள் அதிகம். காசு குறைவு என்பதற்காக அந்த பொருட்களை எல்லாம் நாம் ஒதுக்கி வைக்கின்றோம். அப்படி மலிவாகக் கிடைக்கக்கூடிய, அண்ணாச்சி கடையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பத்து ரூபாய்க்கு அண்ணாச்சி கடையில் வேப்ப எண்ணெய் கிடைக்கும் அல்லவா. வேப்ப எண்ணெயை எத்தனை பேர் தலையில் வைப்போம். பத்தில் ஒருத்தர் கூட இன்று தலைமுடிக்கு வேப்ப எண்ணெயை பயன்படுத்துவது கிடையாது. பின்பு பேன் தொல்லை பொடுகு தொல்லை என்று கெமிக்கல் கலந்த ஷாம்புவை நிறைய காசு கொடுத்து வாங்கி தலையில் போட்டு நல்லா இருக்கும் தலை முடியைக் கூட கொட்ட செய்கின்றோம். சரி வேப்ப எண்ணெயை தலைக்கு எப்படி பயன்படுத்துவது தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வேப்ப எண்ணையை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு, யாரெல்லாம் இந்த வேப்பெண்ணெயை பயன்படுத்தக்கூடாது என்று தெரிந்துகொள்வோம். ரொம்பவும் உடல் சூடு, உடல் உஷ்ணம் உள்ளவர்கள் வேப்ப எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது. கர்ப்பமாக இருப்பவர்கள், குழந்தை பிறக்க முயற்சி செய்பவர்கள் வேப்ப எண்ணெய்யை தலைமுடிக்கு பயன்படுத்தக் கூடாது. உங்களுடைய முகத்தில் முகப்பரு அதிகமாக இருக்குமென்றால் முகத்தில் எண்ணெய் வடியும் அளவிற்கு நிறைய வேப்ப எண்ணெயை வைத்துக் கொள்ளக் கூடாது.

ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான வேப்ப எண்ணெய் 2 ஸ்பூன், சுத்தமான தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன், இந்த இரண்டு எண்ணெயையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பின்பு வேப்பெண்ணெய் கலந்த தேங்காய் எண்ணெயை உங்களுடைய தலையில் ஸ்கால்ப்பில் எல்லா இடத்திலும் படும்படி நன்றாக மசாஜ் செய்யுங்கள். அதன் பின்பு முடியின் கீழ் பக்கம் வரை இந்த எண்ணெய் தடவினாலும் நல்லது. உங்களுக்கு விருப்பமில்லை. வேப்ப எண்ணெயில் நிறைய வாசம் வருகிறது என்றால் மயிர் கால்களில் மட்டும் நன்றாக எண்ணெய்யை தடவி விடுங்கள்.

- Advertisement -

முந்தைய நாள் இரவே இந்த எண்ணெயை தடவி விட்டு மறுநாள் காலை நன்றாக ஷாம்பு போட்டு குளித்து விட வேண்டும். வேப்ப எண்ணெயில் வாசம் கொஞ்சம் அதிகப்படியாகவே இருந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முடியின் தடிமனையும் அதிகரிக்க செய்யக் கூடிய சக்தி இந்த எண்ணெய்க்கு உள்ளது. முடி பட்டு பட்டுன்னு உடையும் பிரச்சனையை சரிசெய்ய, முடி ஸ்ட்ராங்காக வளர, இந்த வேப்ப எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும். (வெறும் வேப்பெண்ணெயை மட்டும் அப்படியே நேரடியாக தலையில் அப்ளை செய்யாதிங்க. தேங்காய் எண்ணெயோடு கலந்து தான் வேப்பெண்ணையை அப்ளை செய்யவேண்டும்.)

ஒரு முறைக்கு இரண்டு முறை கொஞ்சம் நிறைய ஷாம்புவை போட்டு தலையை அலசினால் தலையில் இருக்கும் வேப்பெண்ணை வாடை சுத்தமாக நீங்கி விடும். வாரத்தில் இரண்டு நாட்கள் வேப்பெண்ணெயை தலையில் வைக்கலாம். இரவு முழுவதும் வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால் 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரையாவது வேப்பெண்ணெயை தலையில் வைத்துவிட்டு தலையை அலசிக் கொள்ளுங்கள். நிச்சயம் முடிக்கு நல்லது.

- Advertisement -