வேரிலிருந்து புதிய முடிகள் வேகவேகமாக வளர தொடங்கி, முட்டி கால் வரை தொடும். வெந்தய தண்ணீரோடு இந்த பொருளை சேர்த்து தலைக்கு போட்டால்.

hair13
- Advertisement -

வேரிலிருந்து முடி வளர்ச்சி என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும். சில பேருக்கு முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் வேகமாக ஸ்ட்ராங்காக வளர தொடங்கும். சில பேருக்கு புதிய முடிகள் வளர்வதில் சில சிக்கல்கள் இருக்கும். சில பேருக்கு புதிய முடி சீக்கிரம் வளரும். ஆனால், அந்த முடி ஸ்ட்ராங்காக இருக்காது. சீக்கிரமே உதிர தொடங்கி விடும். புதியதாக வளரக்கூடிய முடிகளை வேகமாக வளர செய்து, வளர்ந்த முடியை உதிராமல் நீளமாக வளர்ப்பதற்கு ஒரு சிறிய சுலபமான குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருள் வெந்தயம், பிங்க் நிறத்தில் இருக்கக்கூடிய வெங்காயம். அதாவது சிவப்பு வெங்காயத்தை தான் பயன்படுத்த வேண்டும். குறிப்புக்கு வெள்ளை வெங்காயத்தை பயன்படுத்தக் கூடாது. ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி 1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை போட்டு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வையுங்கள். வெந்தயத்தின் சத்து அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கி தண்ணீரின் நிறம் மாறும். இந்த தண்ணீர் கொதி வந்து தயாரானதும் அடுப்பை அணைத்து விட்டு வடிகட்டி சுட சுட இந்த வெந்தய தண்ணீரை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதற்குள் ஒரு வெங்காயத்தை எடுத்து தோல் சீவி, ஓரளவுக்கு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அரைத்து அந்த வெங்காயத்தை வடிகட்டியில் பிழுந்து வெங்காய சாரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது சூடாக இருக்கக்கூடிய வெந்தைய தண்ணீரோடு இந்த வெங்காய சாரை கலந்து அப்படியே வெதுவெதுப்பாக இருக்கும் போதே உங்களுடைய தலையில் தேய்க்க வேண்டும்.

வெதுவெதுப்பான இந்த தண்ணீரை தலையில் வேர்க்கால்களில் படும்படி வைப்பதன் மூலம் வேர்க்கால்களில் இருந்து புதிய முடியின் வளர்ச்சி வெகு சீக்கிரத்தில் தூண்டப்படும். அதுவும் வலிமையான முடி வளர்ச்சி இருக்கும். நன்றாக முன்பக்கம் பின்பக்கம் என்று இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்து கொடுத்து பத்து நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்தால் போதும். வெறும் தலைக்கு குளித்தால் கூட போதும். ஷாம்பு போட்டு அலச வேண்டும் என்று அவசியம் இல்லை. தேவைப்பட்டால் ஷாம்பு போட்டு கூட குளித்துக் கொள்ளலாம். (இந்த தண்ணீரை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தெல்லாம் பயன்படுத்தக்கூடாது. தேவைப்படும்போது உடனடியாக தயார் செய்து, அப்பவே அப்ளை செய்து கொள்ள வேண்டும்.)

- Advertisement -

வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குறிப்பை பின்பற்றி வர வளராத முடி கூட தலையிலிருந்து வளர்வதை பார்க்கலாம். ஒரே மாதத்தில் குட்டி குட்டி பேபி ஹேர் வளர்ந்து துண்டு துண்டுகளாக நிற்கும். ஆனால் அதோடு குறிப்பை நிறுத்தி விடக்கூடாது. அந்த முடியை வலுவாக வளர்க்க வேண்டும் என்றால் தொடர்ந்து இந்த ஒரு குறிப்பை நீங்கள் பின்பற்றி வர வேண்டும். சூடாக இந்த தண்ணீரை நாம் தலையில் தேய்ப்பதால் அவ்வளவு எளிதில் சளி பிடிப்பதற்கும், தலைபாரம் வருவதற்கும் வாய்ப்பு கிடையாது.

சூடாக தேய்க்க வேண்டும் என்றால் கொதிக்க கொதிக்க தண்ணீரை தலையில் கொட்டாதீங்க. கைப்பொருக்கும் சூடிற்கு இந்த தண்ணீரை தலையில் தடவினால் போதும். குழந்தைகளுக்கு கூட இந்த குறிப்பை போடலாம். ஆனால் குழந்தைகளுக்கு நிறைய நேரம் தலையில் இந்த தண்ணீரை ஊற வைக்க வேண்டாம். தலையில் போட்டு நன்றாக மசாஜ் செய்து இரண்டு நிமிடத்தில் தலைக்கு குளிப்பாட்டி விடுங்கள் போதும். உங்களுக்கு இந்த சுலபமான குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -