ஒரு கைப்பிடி வேர்க்கடலை இருந்தா இப்படி வித்தியாசமா இந்த சட்னி அரைச்சு பாருங்க. இது வரைக்கும் இப்படி ஒரு சட்னி அரைக்கலாம்னு நீங்க நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டீங்க

Boiled Peanut chutney
- Advertisement -

இந்த வேர்க்கடலை சட்னி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அரைப்பார்கள். ஆனால் இந்த சமையல் குறிப்பு பதிவில் வேர்க்கடலை வைத்து ரொம்பவே வித்தியாசமான முறையில் எப்படி சட்னி அரைப்பது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை -1 , பெரிய வெங்காயம் – 2, தக்காளி -2, பூண்டு – 1கைப்பிடி, காய்ந்த மிளகாய் – 5, காஷ்மீரி மிளகாய் – 3, கடுகு -1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை -1 கொத்து, எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி செய்ய வெங்காயம், தக்காளி இவைகளை நல்ல பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் பூண்டையும் தோலுரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து இட்லி பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் மேலே இட்லி தட்டை வைத்த பிறகு அரிந்து வைத்த வெங்காயம், தக்காளி, பூண்டு, காய்ந்த மிளகாய், அனைத்தும் வைத்து மூடி பத்து நிமிடம் வேக விடுங்கள். 10 நிமிடம் இவை எல்லாம் வெந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு இட்லி தட்டை தனியாக எடுத்து வெளியே வைத்து விடுங்கள். தக்காளி சூடு ஆறியவுடன் அதன் தோலை மட்டும் நீக்கி விட்டு இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்ந்து உப்பு சேர்த்து நல்ல பையன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக அரைத்த இந்த சட்னியை பவுலுக்கு மாற்றிய பிறகு ஒரு தாளிப்பு கரண்டை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு போட்டு பொரிந்த பிறகு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேரித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த தாளிப்பை சட்னியில் சேர்த்து விடுங்கள். சுவையான அதே நேரத்தில் வித்தியாசமான வேர்க் கடலை சட்னி தயார்.

பொதுவாக வேர்க்கடலையை தேங்காய் சேர்த்து அரைப்பார்கள் அல்லது வெங்காயம், தக்காளி எல்லாம் வதக்கி அத்துடன் சேர்த்தும் அரைப்பார்கள். ஆனால் இந்த முறையில் ரொம்பவே வித்தியாசமாக அனைத்தையும் வேக வைத்து அரைக்கும் பொழுது அதிக எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் வேகவைக்கும் போது வேர்க்கடலையின் சத்துக்கள் முழுவதுமாக நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வெறும் மூன்று பொருள் இருந்தால் போதும். வீட்டிலேயே இந்த சீம்பால் கடம்பு செய்து விடலாம். அசல் சீம்பால் போலவே இதோட சுவை, சும்மா நச்சுன்னு இருக்கும்.

இந்த சட்னி சுட சுட இட்லியுடனும், தோசையுடனும் வைத்து சாப்பிட ரொம்பவே பிரமாதமாக இருக்கும். இதை கெட்டியாக துவையல் போல அரைத்து சாதத்துடன் வைத்து சாப்பிடவும் பிரமாதமாக இருக்கும். கண்டிப்பாக நீங்க ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -