இந்த அசத்தலான 6 குறிப்புகளை தெரிந்து கொண்டால் போதும். வீட்டு வேலைகளை சுலபமாக செய்து முடித்துவிட்டு ஒய்யாரமாக டிவி பார்க்கலாம்

kitchen
- Advertisement -

காலை முதல் மாலை வரை வீட்டு வேலைகளை செய்வதிலேயே பெண்களுக்கு நேரம் அதிகமாக செலவாகும். அவர்களுக்கென்று தனிப்பட்ட நேரம் எதுவும் கிடைப்பதில்லை. அப்படி அவர்களுக்கென்று கொஞ்சம் நேரம் ஓய்வு கிடைத்தாலும் அந்த நேரத்திலும் ஏதாவது ஒரு வேலையை செய்ய தொடங்கிவிடுவார்கள். இவ்வாறு தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தை சிறிதளவு வீணாக்காமல் ஏதேனும் வேலையை செய்து கொண்டிருப்பவர்களுக்காக நேரத்தை மிச்சப்படுத்தி வீட்டில் இருக்கும் கடினமான வேலைகளை எவ்வாறு சுலபமாக செய்து முடிக்க வேண்டும். என்பதற்கான ஆறு குறிப்புகளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

women1

குறிப்பு: 1
நாம் எவ்வளவு தேய்த்துக் கழுவினாலும் பாத்ரூமில் பயன்படுத்தும் பக்கெட் மற்றும் மக் இவற்றில் படிந்திருக்கும் விடாப்பிடியான உப்பு கரைகளை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். இது போன்ற விடாப்பிடியான கரைகளை எளிதில் சுத்தம் செய்ய புளித்த தயிருடன் 2 ஸ்பூன் சோடா உப்பை சேர்த்து ஒன்றாக கலந்து அதனை ஒரு ஸ்க்ரப்பரை பயன்படுத்தி லேசாக தொட்டு பக்கெட் மற்றும் மக்கை தேய்த்துவிட்டு 10 நிமிடம் ஊறவைத்து அதன் பின்னர் கழுவினால் கரைகள் அனைத்தும் சுத்தமாகி பக்கெட் மற்றும் மக் பளிச்சென்று மாறிவிடும்.

- Advertisement -

குறிப்பு: 2
ஆடையின் மீது மருதாணி கரை படிந்து விட்டால் அவற்றை எளிதில் நீக்க முடியாது. இதற்காக துணியில் எந்த இடத்தில் மருதாணி கரை படிந்துள்ளதோ அந்த இடத்தை மட்டும் நன்றாக காய்ச்சிய பாலில் 20 நிமிடம் ஊற வைத்து, அதன் பின்னர் தண்ணீரில் அலசி, குளியல் சோப்பை பயன்படுத்தி நன்றாக தேய்த்து அலசினால் போதும். மருதாணி கறை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

maruthani

குறிப்பு: 3
துணியில் ரத்தக் கறை படிந்திருந்தால் அவற்றை எளிதில் நீக்க நன்றாக கொதித்த சுடு தண்ணீரில் ஒரு கைப்பிடி கல் உப்பை சேர்த்துக் கொண்டு அதில் கறை படிந்த துனியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, அதன் பின்னர் குளியல் சோப்பை பயன்படுத்தி துணியைத் சுத்தம் செய்தோம் என்றால் ரத்தக் கரை முழுவதுமாக அகன்றுவிடும்.

- Advertisement -

குறிப்பு: 4
ஒரு துணியின் மீது மற்றொரு துணியின் கறை படிந்துவிட்டால் அவற்றை எளிதில் அகற்ற சமையலுக்கு பயன்படுத்தும் வினிகரை அந்தக் கறை படிந்த இடத்தில் ஒரு மூடி ஊற்றி கைகளால் நன்றாக தேய்த்து, 20 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு குளியல் சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்தோம் என்றால் அதில் இருக்கும் காரை முழுவதுமாக மறைந்து விடும்.

blood-stain-in-cloth

குறிப்பை: 5
சமையலறையில் சமைக்கும் இடத்திற்கு பின்புறமுள்ள சுவரில் விடாப்பிடியான எண்ணெய் கரைகள் படிந்திருக்கும். இவற்றை சுத்தம் செய்ய சிறிதளவு தண்ணீரில் பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் லிக்விடை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, எண்ணெய் கரை இருக்கும் இடத்தில் லேசாக ஸ்ப்ரே செய்து, பின்னர் ஒரு துணியை வைத்து துடைத்து விட்டாலே போதும். கரைகள் அனைத்தும் எளிதில் சுத்தமாகிவிடும்.

tap

குறிப்பு: 6
சமையலறையில் பாத்திரம் துலக்கும் சிங்க் மற்றும் பாத்ரூமில் இருக்கும் தண்ணீர் குழாய்கள் மீது அதிகமான உப்பு கறைகள் படிந்திருக்கும். இவற்றை சுலபமாக நீக்குவதற்காக எண்ணெய் கரையை சுத்தப் படுத்துவதற்காக நாம் செய்து வைத்துள்ள லிக்விடை இது போன்ற இடங்களில் ஸ்ப்ரே செய்துவிட்டு, அதன் மீது லெமன் சால்டை தூவி விட்டு, 10 நிமிடங்கள் கழித்து ஸ்க்ரப்பரை பயன்படுத்தி தேய்த்து கழுவினால் போதும். உப்பு கரைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து சிங்க் மற்றும் தண்ணீர் குழாய்கள் புதியது போல் பளபளவென்று மாறிவிடும்.

- Advertisement -