72 தலைமுறை புண்ணியம் செய்தவர் மட்டுமே ஜபிக்க கூடிய காளி மந்திரம்

0
6412
kali
- விளம்பரம் -

சக்தியின் அம்சமாக போற்றப்படும் காளி காலங்களை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவள். அவளை முழு மனதோடு வழிபடுவதன் மூலம் நம் இலட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று கூறியுள்ளனர் ஆன்றோர்கள். கிடைப்பதற்கரிய செல்வங்களையும் புகழையும் தரவில்லை ஒரு சிறப்பான காளி மந்திரத்தை இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

kaali

மந்திரம்:
ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்
ஹ்ரூம் ஹ்ரூம்
தக்ஷிணே காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்
ஹ்ரூம் ஹ்ரூம் ஸ்வாஹா||

Advertisement

மேலே உள்ள மந்திரமானது சாதாரண மந்திரம் அல்ல. 72 தலைமுறைகளாக தொடர்ந்து புண்ணியம் செய்த ஒருவராலேயே இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபிக்க முடியும் என்று கூறுகிறது காளிகா புராணம்.

kaali

சிகப்பு நிற ஆடை அணிந்து, சிகப்பு நிற பூக்களை அர்ச்சனைக்கு வைத்து, காளிக்கு சிகப்பு நிற மாலை அணிவித்து, தினமும் 108 முறை சிகப்பு நிற மணி கொண்டு இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக உலகத்தாரால் அரிது என்று சொல்லக்கூடிய பல செல்வங்கள் கிடைக்கும். அதோடு பேர் புகழ் என அனைத்தும் வந்து சேரும் என்று கூறுகிறது காளிகா புராணம்.

kaali

இதையும் படிக்கலாமே:
அமாவாசை நல்ல நாளா ? கெட்ட நாளா ? – ஒரு ஆன்மீக ஆய்வு

காளி மாதாவை மனதில் நிலை நிறுத்தி யவர் ஒருவர் இந்த மந்திரத்தை ஜபித்தாலும் அவர்களின் எதிரிகள் அழிந்து போவர். அறிவு கூர்மை அதிகரிக்கும், வாக்கு பலிக்கும். ஆனால் இந்த மந்திரத்தை எந்த ஒரு தீயவராலும், தீய வினை புரிவதற்காக தொடர்ந்து ஜபிக்கவே முடியாது அப்படியே மீறி ஜபித்தாலும் அதில் எந்த பயனும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement