இனி பார்லர் சென்று அதிக செலவு செய்ய தேவையே இல்லை. வீட்டிலே செய்து கொள்ளலாம் பெடிக்யூர்.

- Advertisement -

இப்போதெல்லாம் பாதங்களை அழகாகவும், மிருதுவாகவும் பெடிக்யூர் என்ற முறையை இன்றைய தலைமுறையினர் பெருமளவு பயன்படுத்தி வருகிறார்கள். இதில் ஆண்கள், பெண்கள் இருவரும் இதை செய்து கொள்கிறார்கள். பெரும்பாலும் இந்த போன்று விஷயங்களை நாம் ஆரம்பத்தில் இருந்து சிறு சிறு வீட்டு குறிப்புகளை தொடர்ந்து செய்தாலே போதும் பாதங்களை அழகாக்கி கொள்ளலாம். இருந்தாலும் இப்போது இந்த பெடிக்யூர் பெருமளவில் பெருகி விட்டபடியால், பழைய முறைகளை பின்பற்ற யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதே பெடிக்கியூரை நாம் வீட்டிலும் செய்து கொள்ளலாம். இதற்காக பார்லர் சென்று அதிக அளவில் பணத்தை செலவழிக்க தேவையில்லை அந்த பெடிக்யூர்யை எப்படி செய்வது என்பது பற்றிய ஒரு பதிவு தான் இது.

இந்த பெடிக்யூர் செய்ய முதலில் பாதங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் உங்கள் பாதம் மூழ்கும் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் சமையல் சோடா, இரண்டு ஸ்பூன் உப்பு, இரண்டு ஸ்பூன் ஷாம்பு, ஒரு எலுமிச்சை பழ சாறு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்த பிறகு அதில் உங்கள் பாதங்களை வைத்து 15 நிமிடம் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வெளியே எடுத்து உங்கள் பாதங்களை நன்றாக ஒரு டவல் வைத்து துடைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு ஒரு சின்ன பவுலில் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, கலந்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டில் எலுமிச்சை பழ தோலை தொட்டு உங்கள் பாதங்களை சுற்றி நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள். விரல் இடுக்குகள் நகங்கள் குதிகால்கள் என அனைத்து இடத்திலும் தேய்த்த பிறகு, விரல் இடுக்கில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் போக டூத் பிரஷ் வைத்து தேய்த்துக் விடுங்கள். பாதங்களில் தேய்பதற்கு பிரஷ்கள் இப்போது இருக்கிறது அது இருந்தால் தேய்த்துக் கொள்ளுங்கள், இல்லை என்றால் இந்த உப்பு காகிதம் இருந்தாலும் அதை வைத்து லேசாக தேய்த்துக் கொள்ளுங்கள் மிகவும் அழுத்தி தேய்க்க வேண்டாம். பிறகு நகம் வெட்டிக் கொண்டு உங்கள் நகத்தை சுற்றியுள்ள அழுக்குகளை நீக்கி நகத்தையும் உங்களுக்கு விருப்பமான ஷேப்பில் வெட்டி கொள்ளுங்கள். நீங்கள் உபயோகிக்கும் எந்த ஒரு மாஸ்டரைசர் கிரீம் இருந்தாலும் அதை உங்கள் பாதங்களில் மீது நன்றாக தடவி கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் கால்களை மறுபடியும் ஒரு 15 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் வைத்து பாதத்தை நீரில் இருக்கும் போதே நன்றாக தேய்த்து சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பாதங்களை தண்ணீரில் இருந்து எடுத்த பிறகு நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இதற்கு ஒரு பேக் தயார் செய்து கொள்ளுங்கள். அரிசி மாவு ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், இரண்டையும் நன்றாக கலந்து உங்கள் பாதங்களை சுற்றி ஒரு பத்து நிமிடம் வரை பேக் போல் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் கழித்து உங்கள் பாதங்களை நன்றாக அலம்பி துடைத்து விடுங்கள். இப்போது அதே போல் மறுபடியும் ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து உங்கள் பாதங்களை ஒரு ஐந்து நிமிடம் வைத்தாலே போதும் அதன் பிறகு எடுத்து நன்றாக துடைத்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வெறும் 2 நிமிடத்தில் கோல்டன் பேஷியல் செய்தது போல உங்களுடைய முகம் பளபளன்னு ஜொலிக்க வேண்டுமா? மலிவான இந்த டிப்ஸை யாரும் மிஸ் பண்ணாதீங்க.

பாதம் நன்றாக ஈரம் காய்ந்த பிறகு உங்களுக்கு விருப்பமான நெயில் பாலிஷ் வைத்து உங்கள் பாதங்களை அழகாக்கி கொள்ளுங்கள். இது மிக மிக எளிமையான ஒரு முறை தான் அதிகபட்சம் அரை மணி நேரம் செலவாகும். ஆனால் இதற்காக நீங்கள் பார்லரை சென்று செலவழிக்கும் தொகையை நினைத்துப் பார்த்தால், இந்த அரை மணி நேரம் எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. ஓய்வு நேரத்தில் இதைப் போல செய்து உங்கள் பாதங்களை நீங்களே அழகாக்கி கொள்ளலாம் அல்லவா.

- Advertisement -