- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெற்றி தரும் வேல் மந்திரம்

வெற்றி தரும் வேல் மந்திரம்

- Advertisement -

வெல் என்ற வினைசொல் தான் வேல் என்ற பெயர் சொல்லாக மாறி இருக்கிறது. வேல் என்ற வார்த்தைக்கு வெற்றி என்று அர்த்தம். வேல் வழிபாடு செய்பவர்கள் ஒவ்வொருவரும் வீட்டிலும் வேலாயுதம் வந்து காவலாக நிற்பான். உங்கள் குடும்பத்தை கஷ்டத்தில் இருந்து மீட்டெடுப்பான். அந்த சக்தி தேவி தன்னிடம் இருக்கக்கூடிய சக்தியை எல்லாம் ஒரு வேலுக்கு கொடுத்து, அந்த வேலை முருகன் கையில் கொடுத்துள்ளார்கள்.

அறிவு ஞானம் இன்பம் செல்வம் எல்லாம் இந்த வேலுக்குள் அடக்கம். இந்த வேலை, வேலாயுத்தை நினைத்து தினமும், வீட்டில் வேல் வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் வெற்றி மேல் வெற்றி குவியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. தினமும் வேல் வழிபாடு செய்து வேலவனை கும்பிட்டு பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு வேல் எப்போதும் துணையாக நிற்கும்.

- Advertisement -

வெற்றி உங்கள் பின்னால் வரும். கோழைத்தனம் உங்களை விட்டு வெகு தூரம் சென்று விடும். எதிரிகளால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. கெட்ட சக்தியாலும் உங்களுக்கு எந்த ஒரு பாதிப்புகளும் வராது. அந்த முப்பெரும் தேவர்களின் ஆசிர்வாதமும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். தினமும் நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரம் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

வேல் மந்திரம்

வெற்றிவேல் வீரவேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல்
ஞான சக்திவேல்

- Advertisement -

ஆதிசக்தி அன்னை தந்த ஞானவேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீரவேல்

மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றிவேல்
தெய்வ பக்தி உள்ளவர்களுக்கு கை கொடுக்கும் வீரவேல்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் முருகப்பெருமானது திருவுருவப்படம் மட்டும் தான் இருக்கிறது என்றாலும், அந்த திருவுருவப்படத்திற்கு முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த மந்திரத்தை சொல்லலாம். எங்களுடைய வீட்டில் வேல் இருக்கிறது என்றால் ரொம்பவும் சிறப்பு. அந்த வேலுக்கு அபிஷேகம் செய்து சந்தன குங்குமம் பொட்டு வைத்து ஏதாவது ஒரு பிரசாதம் நெய்வேதியம் வைத்து வேலுக்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை சொன்னால், அந்த வேலைக்கு இருக்கும் அத்தனை சக்தியையும் உங்களால் பெற முடியும்.

தினமும் இந்த வழிபாட்டை செய்ய முடியாது என்பவர்கள் வாரத்தில் ஒரு நாள், செவ்வாய்க்கிழமை செய்யுங்கள். அதுவும் முடியாது என்பவர்கள் சஷ்டி கிருத்திகை போன்ற முருகனுக்கு உகந்த தினங்களில் இந்த வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு வாய்ந்த பலன்களை தரும். நின்ற இடத்தில் இருந்தே உங்களுக்கு ஏதோ ஒரு பயம் வந்துவிட்டது.

இதையும் படிக்கலாமே: நவராத்திரி தீப வழிபாடு

துணையாக யாரும் இல்லை என்று உணருகிறீர்கள். உடனடியாக இந்த மந்திரத்தை சொல்லுங்கள். முருகனின் வேல் அந்த இடத்திலேயே உங்களுக்கு துணையாக வந்து நிற்கும் வெற்றியைத் தரும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்