ஆடி மாதத்தின் வளர்பிறை சஷ்டி என்பது ஜூலை மாதம் 30ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. அன்றைய நாளில் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பலரும் குழந்தை பாக்கியம் வேண்டி முருகப்பெருமானை வளர்பிறை சஷ்டியில் வழிபாடு செய்வார்கள். அப்படி வழிபாடு செய்வதன் மூலம் முருகனின் அருளால் கரு வளர ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் நமக்கு வெற்றிகள் கிடைப்பதற்கு கூற வேண்டிய முருகனின் திருநாமத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வெற்றிகளைத் தரும் முருகனின் திருநாமம்
ஒவ்வொரு தெய்வத்திற்கும் பலவிதமான சூட்சமமான திருநாமங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு திருநாமத்திற்கும் ஒவ்வொரு விதமான அர்த்தங்கள் இருக்கிறது. எந்த நேரத்தில் எந்த திருநாமத்தை கூறுகிறோமோ அதற்கு ஏற்றார் போல் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் முருகனுக்கும் ஏராளமான திருநாமங்கள் இருக்கின்றன. தன்னை நினைத்து முழு மனதோடு யார் ஒருவர் எப்படி அழைத்தாலும் முருகன் ஓடோடி வந்து விடுவார், இருப்பினும் அவருடைய திருநாமங்களை கூறி நாம் அவரை வழிபாடு செய்யும்பொழுது அவர் மனம் மகிழ்ந்து நாம் கேட்ட அனைத்தையும் தருவார். அந்த வகையில் வெற்றிகள் கிடைப்பதற்கு கூற வேண்டிய முருகனின் திருநாமத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த திருநாமத்தை ஆடி மாதத்தின் வளர்பிறை சஷ்டியான ஜூலை மாதம் 30ஆம் தேதி புதன்கிழமை அன்று காலையில் வெறும் வயிற்றில் கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. விரதம் இருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இந்த நாமத்தை அன்றைய தினம் முழுவதும் கூறிக்கொண்டே இருக்கலாம். எவ்வளவு தூரம் நாம் இந்த திருநாமத்தை கூறிக் கொண்டே இருக்கிறோமோ அவ்வளவு தூரம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும், தோல்விகளும், சங்கடங்களும் நீங்கி நாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் நமக்கு வெற்றிகள் உண்டாகும். விரதம் இருக்க இயலாதவர்கள் உணவு சாப்பிடுவதற்கு முன்பாகவே இந்த திருநாமத்தை கூறி விட வேண்டும். குறைந்தபட்சம் ஆறுமுறையோ அதிகபட்சம் தங்களால் இயன்ற அளவு கூறலாம்.
சுத்தமாக இருப்பவர்கள் வீட்டு பூஜை அறையில் காலையிலேயே முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தரையில் ஒரு விரிப்பை விரித்து வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு கையில் கற்கண்டு, துவரம் பருப்பு, பச்சைப் பயிறு, பச்சரிசி போன்ற ஏதாவது ஒரு பொருளை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறுங்கள். வீட்டில் சுக்கு இருக்கும் பட்சத்தில் சுக்கை வைத்துக் கொண்டு கூட இந்த மந்திரத்தை கூறலாம். இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு தானியங்களையும் கற்கண்டையும் வைத்திருப்பவர்கள் எறும்புகள் மற்றும் பறவைகள் இருக்கும் இடத்தில் போட்டு விட வேண்டும். சுக்கை வைத்து மந்திரம் கூறியவர்கள் பணம் வைக்கும் இடத்தில் இந்த சுக்கை வைத்துக்கொள்ள வேண்டும்.
முருகனின் திருநாமம்
“வெற்றி வேலனுக்கு அரோகரா”
இதையும் படிக்கலாமே: ஆடி அம்மன் மாலை
விரதம் இருந்தாலும் இருக்காவிட்டாலும் முருகப்பெருமானை நினைத்து இந்த திருநாமத்தை முழுமனதோடு மனதார கூறுபவர்களுக்கு முருகனின் அருளால் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.