சுவாமிக்கு படைத்த வெற்றிலையை இனி வீணாக குப்பை தொட்டியில் போட வேண்டாம். வெற்றிலையை வைத்து வெற்றி திலகம் தயாரிப்பது எப்படி தெரிந்து கொள்வோமா?

poojai-room
- Advertisement -

வெற்றியை கொடுக்கக்கூடிய மகத்துவமான பொருள் என்றால் அதில் இந்த வெற்றிலைக்கு முதலிடம் உண்டு. வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய பரிகாரங்கள் அனைத்திலும் நிச்சயமாக நல்ல பலனை நம்மால் பெற முடியும். நம்முடைய இந்து சாஸ்திரப்படி எந்த மங்கள காரியமாக இருந்தாலும், எந்த பூஜை புனஸ்காரங்கள் ஆக இருந்தாலும், அதில் கட்டாயமாக இருக்கக்கூடிய பொருளில் இந்த வெற்றிலையும் ஒன்று. இத்தனை மகத்துவங்களைக் கொண்ட வெற்றிலையை வீட்டில் பூஜைக்காக பயன்படுத்திவிட்டு அதை, அந்த தாம்பூலத்தை தறிப்பதற்கு ஆளில்லை என்றால் வாடிய வெற்றிலைகளை குப்பையில் தூக்கி போடுகின்றோம். இது மிகப்பெரிய தவறு.

thambulam-1

வெற்றிலைகளை ஒருபோதும் குப்பையில் தூக்கி போடவே கூடாது என்பார்கள். அதே சமயம் உங்கள் வீட்டின் அருகில் ஆடு மாடு இருந்தால் வெற்றிலை பசுமையாக இருக்கும் போதே, பூஜை செய்த வெற்றிலையை, வாயில்லா ஜீவன்களுக்கு சாப்பிட கொடுத்து விடலாம். வயதானவர்களுக்கு சாப்பிடவும் தானமாக கொடுக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால் பூஜை செய்த வெற்றிலையை குப்பையில் மட்டும் போடக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

சரி, பின்பு பூஜை செய்த அந்த வெற்றிலையை என்னதான் செய்வது. வெற்றிலை அனைத்தையும் ஒரு சிறிய மண் சட்டியில் அல்லது சிறிய மண் பானையில் போட்டு சேகரித்து வாருங்கள். அந்த வெற்றிலை அப்படியே இருக்கட்டும். ஒரு 50 வெற்றிலைகள் மொத்தமாக சேரட்டும். நீண்ட நாட்களாக சேகரித்து வரும் வெற்றிலை என்பதால் அந்த வெற்றிகள் அனைத்தும் காய்ந்துவிடும்.

vetrilai pakku

காய்ந்த இந்த வெற்றிலைகளை வைத்துதான் வெற்றி திலகத்தினை தயார் செய்யப் போகின்றோம். அதே மண் சட்டியில் காய்ந்த வெற்றிலைகளுடன், கொஞ்சமாக தர்ப்பைப் புல்லை போட்டு, ஒரு பச்சை கற்பூரம் போட்டு எரித்து விடுங்கள். தர்ப்பைப் புல்லும் வெற்றிலைகளும், எரிந்து கருப்பு நிறத்தில் சாம்பலாக மாறி இருக்கும். இந்த சாம்பலை அரகஜாவடன் போட்டு கலந்து தினம்தோறும் நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த திலகம் தான் வெற்றி திலகம். நீங்கள் வெளியே செல்லும் போது இந்த திலகத்தை இட்டுக் கொண்டு வெளியே சென்றால் நீங்கள் செல்லும் காரியம் நிச்சயமாக 100% வெற்றி அடையும். தோல்விக்கு இடமிருக்காது. சிலபேருக்கு இந்த இடத்தில் சந்தேகம் வரும்.

agal-vetrilai

வெற்றிலைகளை வீட்டில் வாட விடலாமா என்று, இந்த திலகத்தை செய்வதற்காக வெற்றிலையை வாட வைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. வாடிய வெற்றிலைகளை நாம குப்பைத்தொட்டியில் போடவில்லை, வசிய திலகம் செய்ய பயன்படுத்திக் கொள்ளப் போகின்றோம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -