பணம் எப்போதும் கையில் இருக்க வேண்டும் என்றால் பணத்தை சம்பாதிப்பது ஒரு புறம் என்றாலும் சம்பாதிக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருப்பதும் பணம் நம் கையில் இருப்பதற்கு சமம் தான். அது இரண்டிற்குமான ஒரு எளிய வித்தியாசமான பரிகாரத்தை தான் இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
பணம் கையில் தாராளமாக புரள வேண்டும் என்பதற்காக நாம் இதுவரை எத்தனையோ வகையான பரிகாரங்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த பரிகாரம் முற்றிலும் வித்தியாசமான அதே நேரத்தில் புதுமையான பரிகாரமாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை முயற்சி செய்து பாருங்கள்.
பணம் கையில் தாராளமாக புரள
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான முக்கியமான பொருள் கோதுமை. நம் எல்லோர் வீட்டிலும் கோதுமை மாவை வைத்திருப்போம். இந்த பரிகார செய்வதற்கு கோதுமையை கடையில் வாங்கி அதில் சில பொருட்களை சேர்த்து அரைக்க வேண்டும். அது என்ன பொருள் எந்த நாளில் எப்படி அழைக்க வேண்டும் என்பது தான் பரிகாரமே.
இந்த பரிகாரத்திற்கு கோதுமையை ஐந்து கிலோ அளவு எடுத்துக் கொண்டீர்கள் எனில், அதில் 100 கிராம் கருப்பு கொண்டைக்கடலை சேர்க்க வேண்டும். அத்துடன் இதில் துளசி இலையும் சேர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த துளசி இலையை நீங்கள் திங்கள்கிழமை அன்று காலையில் குளித்து முடித்த பிறகு 11 இலை பறிக்க வேண்டும்.
இந்த 11 இலையை வீட்டு நிழலில் நன்றாக காய வைக்க வேண்டும். சனிக்கிழமை அன்று கோதுமை கொண்டைக்கடலையுடன் இந்த 11 காய்ந்த துளசி இலையும் சேர்க்க வேண்டும். இத்துடன் நாககேசர் இரண்டு சேர்க்க வேண்டும். இந்த நாககேசர் என்பது வால்மிளகு போன்று இருக்கும். இது ஆன்லைனில் அதிக அளவு கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து சனிக்கிழமை அன்று அரைத்து வைக்க வேண்டும் இவ்வளவு தான் பரிகாரம். இதில் நாம் எடுத்திருக்கும் பொருளும், சேர்க்கும் நாளும் அரைக்கும் நாலும் தான் முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இதில் கோதுமை சூரிய பகவானுக்குரிய தானியமாக பார்க்கப்படுகிறது. அடுத்து இதில் சேர்க்கும் துளசி மகாலட்சுமி தாயார் அம்சம். நாக கேசரி என்பது சிவபெருமானின் மகாலட்சுமி தாயார் இருவரும் அனுகிரகம் பெற்ற பொருள் இத்துடன் சேர்க்கப்படும் கருப்பு கொண்டைக்கடலை குருபகவானுக்குரியது.
இதையும் படிக்கலாமே: வீட்டில் சனியின் ஆதிக்கம்மா? குருவின் யோகமா என்பதை முடிவு செய்வது உங்களின் இந்த செயல் தான் தெரியும்மா?
இப்படி தெய்வங்களுக்கு உரிய பொருள்களை ஒன்றாக சேர்த்து அரைத்து நம் சமையலறையில் வைக்கும் பொழுது பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகார முறை கேட்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் நல்ல பலன் அளிக்க கூடியதாக சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.