வீட்டில் சனியின் ஆதிக்கம்மா? குருவின் யோகமா என்பதை முடிவு செய்வது உங்களின் இந்த செயல் தான் தெரியும்மா?

sani bhagavan guru bhagavan
- Advertisement -

நவகிரகங்களில் முக்கியமானவர் எனில் அவர் சனி பகவான் தான். சனி பகவானை நினைத்தாலே அனைவருக்கும் ஒருவித அச்சம் தோன்றுவதும் இயற்கை தான். ஏனெனில் அவர் நன்மைக்கே எப்படி பல மடங்கு நன்மையை திருப்பித் தருகிறாரோ, அதே போல் தீமைக்கும் பல மடங்கு தீமையை திருப்பித் தருவார். ஆகையால் தான் சனி பகவானை நாம் எப்போதும் அருகில் வைத்துக்கொள்ள யோசிக்கிறோம்.

அதே போல் நவகிரகங்களில் நமக்கு செல்வ வளத்தையும் ஞானத்தையும் அந்தஸ்தையும் தேடித் தருபவர் குரு பகவான். குரு ஒருவருடைய ஜாதகத்தில் உச்சத்தில் இருந்தால் அவருடைய வாழ்க்கையில் ஜாக்பாட் அடித்தது போல முன்னேறி கொண்டே செல்வார். இது போல நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் உள்ளது.

- Advertisement -

இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம் வீட்டில் குரு பகவான் ஆதிக்கம் செய்து நம்முடைய வாழ்க்கை நிலையை உயர்த்துவதும் சனி பகவான் ஆதிக்கம் செய்து நம்முடைய துன்ப நிலையை அதிகரிக்க செய்வதும் நம் செய்யும் சில காரியங்களால் தான் நடைபெறுகிறது என்று சொல்லப்படுகிறது. அது என்ன எப்படி அதை சரி செய்யும் வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் குருவின் ஆதிக்கம் அதிகரித்து செல்வம் பெருக

இதற்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான முதல் காரியம் என்னவெனில் வீட்டு வாசலில் காலணிகளை கழட்டி விடுவது தான். இன்று நேற்று அல்ல நம் முன்னோர்கள் காலம் முதலில் வீட்டு வாசற்படியில் காலணிகளை கழற்றி விடக் கூடாது. ஓரமாக விட வேண்டும் என்று சொல்ல கேள்வி பட்டிருப்போம்.

- Advertisement -

இதற்கு காரணம் செருப்பு சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த பொருள்களில் ஒன்று. அதை வாசலில் விடும் போது அவருடைய ஆதிக்கம் தான். நம் வீட்டில் நிலைத்திருக்கும் மற்ற தெய்வங்களும் மற்ற கிரகங்களின் அனுகிராகம் நமக்கு எளிதில் கிடைக்காது. அதே போல் வாசல் ஆனது மகாலட்சுமி தாயார் குடியிருக்கும் இடமாக கருதப்படுகிறது. அதற்கு தெய்வ அம்சம் அதிகமாக உள்ளது.

அதுமட்டுமின்றி மரமானது குருபகவானின் ஆதிக்கம் கொண்டது. நம் வீட்டில் இருக்கும் நிலை வாசலும் இதே போல் மரத்தினால் ஆனதாக தான் இருக்கும். இப்படி குருபகவானின் ஆதிக்கம் உள்ள அந்த பொருளை வாசலில் வைத்து விட்டு சனியின் ஆதிக்கத்தையும் வைக்கும் போது சனியின் ஆதிக்கமே அதிகரிக்கும். குருவின் ஆதிக்கம் அங்கு வேலை செய்யாது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.

- Advertisement -

அதுமட்டுமின்றி வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் முடிந்த வரையில் மரத்தில் ஆனதை பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்களிலும் சனியின் ஆதிக்கம் இருப்பதால் அந்த பொருட்கள் நம் வீட்டில் அதிகரிக்க அதிகரிக்க சனியின் ஆதிக்கம் அதிகரிக்கும். முன் காலத்தில் அமரும் நாற்காலி, டேபிள், போன்றவை எல்லாம் பெரும்பாலும் மரத்திலால் ஆனதாகவே இருந்தது.

இப்போது நாகரீகத்தின் சாயலாக இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அனைத்தும் இரும்பினாலும் பிளாஸ்டிக்கில் ஆனா பொருட்களாக மாறி வருகிறது. இதனால் வீட்டிற்கு நிச்சயம் கஷ்டங்கள் வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வீட்டில் முடிந்த வரையில் பயன்படுத்தும் பொருட்களை மரத்திலானதும் குறிப்பாக பணம் வைக்கும் பெட்டி, பூஜை செய்யும் இடங்களில் எல்லாம் மரத்திலான பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

இதையும் படிக்கலாமே:

ஆகையால் உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் பொருட்களை வைத்து தான் உங்களுக்கு குருவின் யோகமா அல்லது சனியின் ஆதிக்கமா என்று முடிவு செய்யப்படுகிறது. இந்த பதிவில் உள்ள தகவல்களில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் இதிலுள்ள மாற்றங்களை செய்து பார்த்து பலனடையலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -