இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கும் செடிகள், கொடிகள், மரங்கள் அனைத்தும் உயிர் சக்திகள், இவைகளுக்கும் உயிர் உண்டு. சாதாரண மரம் தானே என்று வேப்ப மரத்தை வெட்டியவர்களுக்கு துன்பமும் வந்ததுண்டு. மிகப்பெரிய பலம் வாய்ந்த தேக்கு மரத்தை வெட்டியவர்களுக்கு பணமும் சேர்ந்ததுண்டு. ஒவ்வொரு மரத்திற்கும் தனித்துவம் உண்டு. இந்த மரம், செடி, கொடிகளில் எதையெல்லாம் வீட்டில் வளர்க்கவே கூடாது துரதிருஷ்டம் வரும்? எதையெல்லாம் வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம் வரும்? என்பதை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.
அகத்தியர் ஒரு பாடலில் வளர்க்க கூடாத மரங்களின் பட்டியலை பற்றி பாடியிருப்பார். அப்பாடலில் முதலில் இடம்பெற்றது “பருத்தி”. பருத்தி மரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது. பருத்தியில் இருந்து பஞ்சு வெடித்து சிதறினால் வீட்டில் இருப்பவர்களுக்கு பிரச்சனை வரும் என்று தான் அவ்வாறு கூறப்படும். அகத்தியை வீட்டில் வளர்க்க கூடாது, இது பித்ருகளுக்கு உரியது.
இந்த வகையில் பனைமரம், நாவல் மரம், அத்திமரம், எருக்கஞ்செடி, வெள்ளருக்கு போன்றவற்றையும் வீட்டில் வளர்க்கக்கூடாது. இதெல்லாம் நல்ல வகையான செடிகள் என்றாலும், வெளியில் ரோட்டில் தான் வளர்க்க வேண்டும், வீட்டில் வைக்கக் கூடாது. கள்ளி, புளிய மரம், கருவேலம், கரு ஊமத்தை, ருத்ராட்சம், வில்வம், இலவம், உதிர வேங்கை, கல்யாண முருங்கை, முருங்கை ஆகியவற்றையும் வீட்டில் வளர்க்கக்கூடாது.
இதில் மற்ற செடிகளை பெரிதாக யாரும் வளர்ப்பதில்லை. ஆனால் முருங்கை மரம் எல்லோர் வீட்டிலும் இருக்கிறது. முருங்கை மரம் எளிதில் உடையும் கிளைகளைக் கொண்டுள்ளதால், திடீரென உடைந்து விழுந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆபத்து வரும் என்று அவ்வாறு கூறப்பட்டுள்ளது. வீட்டில் அதிர்ஷ்டம் தரும் மரங்களாக நெல்லி மரம், மாதுளை, மல்லி, ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, வாழை, தென்னை, கொய்யா, பப்பாளி, பொன் அரளி ஆகிய தாவரங்களை கூறலாம். அதுமட்டுமல்லாமல் மூலிகை செடிகளை வீட்டில் வளர்த்தால் அதை விட அதிர்ஷ்டம் உங்களுக்கு எதுவுமே இருக்க முடியாது.
துளசி, கருந்துளசி, கற்பூரவல்லி, குப்பைமேனி, வேப்பிலை, தூதுவளை, சோற்றுக்கற்றாழை, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நிலவேம்பு, நேத்திரப்பூண்டு, ஓமவள்ளி, பூலாங்கிழங்கு, ஆடாதொடை, அருகம்புல், பூனை மீசை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ஆகிய மூலிகை குணங்கள் நிறைந்த இந்த செடி வகைகள் வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் தானாகவே தேடி வரும். இந்த மூலிகை செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான குண நலன்களை கொண்டுள்ளது. பல நோய்களுக்கு அருமருந்தாக இருக்கக் கூடிய இந்த எளிய மூலிகை செடிகளை வீட்டில் வளர்த்து வந்தால், வந்த பிணிகள் வந்த வழியே செல்லும், அதிர்ஷ்டம் நம் வீட்டுக் கதவை தட்டும்.
இதையும் படிக்கலாமே:
கடன் தீர கால பைரவர் பரிகாரம்
கண்ட கண்ட அழகு செடிகளை வீட்டில் வளர்த்து பராமரித்து வருபவர்கள், இது போன்ற மூலிகை செடிகளையும் வளர்த்து இனி பயன்பெறலாமே! எல்லா வகையான செடி, கொடிகளை வீட்டில் இஷ்டத்திற்கு வளர்த்து விட முடியாது. ஒவ்வொரு செடிகளும் மகத்துவமான பலன்களை கொண்டுள்ளது. இதில் விஷ செடிகள், முட்செடிகள் போன்றவற்றிலிருந்து வீட்டை பாதுகாப்பது அவசியமாகும். நல்ல மனம் தரும் பூச்செடிகள், சமையலுக்கு பயன் தரும் காய், கனி செடிகள், உயிர் காக்கும் மருந்து செடிகள் போன்றவற்றை வீட்டில் வளர்த்து நன்மைகள் பெறலாம்.