சோப்பு, தண்ணி எதையும் பயன்படுத்தாமல் உங்க வீட்ல இருக்க பழைய எவர்சில்வர் பாத்திரத்தெல்லாம் புதுசு போல மாத்த இத கொஞ்சம்பாத்திரங்கள் மேல தூவி விட்ருங்க போதும்.

kitchen cooking ware newspaper computer samburani
- Advertisement -

நம்முடைய அன்றாட வீட்டு வேலைகளை பார்த்து பார்த்து செய்தாலும் கூட சில நேரங்களில் சில வேலைகள் சலிப்பு தட்டி விடும். ஏனென்றால் நாம் என்ன தான் பார்த்து பார்த்து சுத்தம் செய்தாலும் கூட மறுபடியும் அது பழையபடி அழுக்காக மாறி விடும். இவற்றையெல்லாம் சுலபமாக சரி செய்ய சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். நம்முடைய பெரிய வேலைகளை கூட சுலபமாக செய்துவிடலாம் அப்படியான குறிப்புகளை பற்றி தான் இந்த வீட்டுக் குறிப்பு குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த சில்வர் பாத்திரங்களை சுத்தம் செய்து வைப்பது எப்படி என்று பார்ப்போம். எல்லார் வீட்டிலும் எவர்சில்வர் பாத்திரங்கள் இருக்கத் தான் செய்கிறது. அதில் நாம் மளிகை பொருட்கள் போட்டு வைப்பது போக மீதி உள்ள பாத்திரங்களை எடுத்துக் கட்டி வைப்போம். இவை எல்லாம் நாம் தேய்த்து எடுத்து வைத்தால் கூட மறுபடியும் பழைய பாத்திரம் போல மாறி விடும். அப்படி ஆகாமல் இருக்க ஒரு அருமையான ஐடியாவை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

நம் எல்லோர் வீட்டிலும் ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி போன்றவற்றை பயன்படுத்துவோம். அதிலிருந்து விழும் சாம்பலை நாம் வீணாகத் தான் தூக்கி கீழே போட்டு விடுவோம் .இப்போது அந்த சாம்பலை பயன்படுத்தி தான் இந்த சில்வர் பாத்திரங்களை சுத்தப்படுத்தப்படுத்த போகிறோம். உங்கள் வீட்டில் இருக்கும் எத்தனை பழைய சில்வர் பாத்திரங்களாக இருந்தாலும் அதன் மேல் இந்த சாம்பலை கொஞ்சம் தூவி டிஷ்யூ பேப்பர் அல்லது ஏதாவது காட்டன் துணி வைத்து துடைத்து விடுங்கள். பாத்திரங்கள் பாலிஷ் போட்டது போல பளச்சென்று மாறி விடும். இதற்கு சோப்பு லிக்விட் எதையும் பயன்படுத்த வேண்டாம். தண்ணீர் போட்டும் தேய்க்க வேண்டாம். லேசாக துடைத்து வைத்தாலே போதும்.

இதே போல வீட்டில் வெள்ளிப் பாத்திரங்களை நாம் எடுத்து வைக்கும் போதும், தேய்த்து முடித்த பிறகு கொஞ்சமாக கற்பூரத்தை தூள் செய்து அதில் சிறிதளவு விபூதியும் கலந்து இந்த பவுடரை வெள்ளி பாத்திரங்களின் மீது தேய்த்த பிறகு துடைத்து எடுத்து விட்டால் எத்தனை நாள் ஆனாலும் வேலை பார்த்து இருந்து பாலிஷ் செய்தது போல் பளிச்சென்று இருக்கும்

- Advertisement -

அடுத்து நம் வீட்டில் இருக்கும் மிகப்பெரிய தொல்லை இந்த எறும்பு பூச்சி போன்றவை தான். வீட்டில் ஏதாவது இனிப்பு செய்து வைத்தாலும் சரி அல்லது பருப்பு தானியங்கள் கொட்டி வைக்கும் பாத்திரமாக இருந்தாலும் எப்படியாவது எறும்புகளும் இந்த குட்டி குட்டி பூச்சிகளும் ஈக்களும் வந்து விடும். இவற்றையெல்லாம் தடுக்க ஒரு கிண்ணத்தில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்து அதில் பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரத்தை சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் காட்டன் துணியை முக்கி அதை ஸ்வீட் பாக்ஸ் பருப்பு கொட்டி வைக்கும் டப்பாக்களின் மீது தேய்த்து விட்டால் இந்த பூச்சி எறும்பு தொல்லைகள் எதுவும் இருக்காது.

பொதுவாக எல்லோர் வீட்டிலும் கோரப்பாய் பயன்படுத்துவார்கள் அதிலும் ஒன்று இரண்டு பாயாவது வீட்டிற்கு விருந்தாளிகள் வரும் நேரத்தில் பயன்படுத்த எடுத்து வைத்திருப்போம். இந்தப் பாயை பொறுத்த வரையில் வெயில் காலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. மழைக்காலத்தில் பாய் முழுவதும் பூஞ்சான் பிடித்தது போல ஆகி விடும். இதில் இருந்து ஒரு வித வாடையும் வீசும். இப்படி ஆகாமல் இருக்க நீங்கள் சுருட்டி வைக்கும் பாயின் உள்ளே பெரிய நியூஸ் பேப்பர் ஒன்று வைத்து அதோடு சேர்த்து சுருட்டி வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் பாயில் ஈரப்பதம் இருக்காது. இதனால் பூஞ்சை தொந்தரவும் வராது.

இதையும் படிக்காலமே: சமையல் செய்யும் பொழுது பொங்கி வழிந்து கவனக்குறைவால் கேஸ் ஸ்டவ் நாசமாகிவிட்டதா? ஸ்டவ் முதல் பர்னர் வரை ரொம்ப ஈசியாக சுத்தம் செய்வது எப்படி?

இந்தப் பதிவில் உள்ள குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனில் நீங்களும் உங்கள் வீட்டில் இதையெல்லாம் பயன்படுத்தி பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -