உங்கள் எதிரிகளையும், தோரோகிகளையும் உங்கள் வழிக்கு கொண்டுவர வேண்டுமா? இந்த ஆலயத்திற்கு ஒரு முறை சென்று வாருங்கள். எப்பேர்ப்பட்ட எதிரியும், துரோகியும் உங்களிடம் சரணடைவார்கள்.

kaali amman

நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறாக இருக்கலாம் ஆனால் இந்த தெய்வத்தின் தீர்ப்பு மிகச் சரியானதாக இருக்கும். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்ற வாக்கியத்திற்கு ஏற்றார்போல் விளங்கும் சிவகங்கை மாவட்டம் வெட்டுடையார் காளி. அசுரனை வதம் செய்தபடி தனது காலை மடித்து அமர்ந்து எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள் அன்னை. “நாணயம் தவறியோர்க்கு நாணயம் வெட்டிப் போடு” என்று இந்தக் கோவிலைச் சுற்றியுள்ள கிராமத்தினர் சொல்வது வழக்கமான ஒன்றாகும். கொலை, கொள்ளை ஆகிய சம்பவத்திற்கு ஆளானவர்கள், நீதி கிடைக்காதவர்கள், கடன் கொடுத்துவிட்டு அதை மறுபடியும் வசூல் செய்ய இயலாதவர்கள் இந்த அம்பிகையின் சன்னிதியில் வந்து காசு வெட்டிப் போட்டு வேண்டிக்கொண்டால் அம்பிகையானவள் அநீதிகளை தட்டிக் கேட்பாள் என்பது மக்களின் நம்பிக்கை. அநீதிகளுக்கு எதிராக நீதி வழங்குவதால் இவளுக்கு நீதி அம்பிகை என்ற பெயரும் உண்டு.

kali

வழிபாட்டு முக்கியத்துவம்:
கணவன் ஏதேனும் நோய்வாய்ப்பட்டு இருந்தால், அக்கணவனின் மனைவியானவள் இங்கு வந்து தனது கணவனின் நோயை குணப்படுத்தினால் தாலியை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக் கொள்கின்றனர். அதுபோல் அப்பெண்களின் கணவனின் நோய்களும் சரியாகிறது. கடனைக் கொடுத்து விட்டு அதனை வசூல் செய்ய இயலாமல் தவிக்கும் மக்களும் இங்கு வந்து காசு வெட்டிப் போட்டு வேண்டிக் கொண்டு சென்றால் கொடுத்த கடன் சீக்கிரமே வசூலாகும். தான் எந்த தவறும் செய்யாமல், யாரோ ஒருவர் செய்த தவறுக்காக பழியை சுமப்பவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் தவறு செய்தவர்களை இந்த காளி தண்டிப்பார் என்பது நம்பிக்கை.

குறிப்பாக பிறருக்கு செய்வினை செய்பவர்கள் மற்றும் பிறரை துன்புறுத்தி வாழ்பவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு எதிராக இங்கு வந்து இந்த காளியிடம் வேண்டிக்கொண்டால் காளியானவள் அத்துன்பத்திற்க்கு காரணமானவர்களை தண்டிப்பார். நீதி கேட்டு காளியிடம் சென்று வேண்டிக் கொள்பவர்களுக்கு நீதியை கொடுப்பாள். நம் மனதை வருத்துபவர்களை, அவர்கள் வருந்தும்படியும் செய்வாள்.

Libra zodiac sign

குழந்தையின்மை, திருமணத்தடை, கணவன் மனைவிக்கு இடையே சுமூகமான நிலையின்மை போன்றவற்றிற்கு தீர்வாக இக்காளியம்மன் விளங்குகிறார். கண் திருஷ்டி நீங்க காளி அம்மனின் பாதத்தில் பூஜை செய்த தேங்காயை வீட்டின் முன் கட்டுவதும் வழக்கம்.

- Advertisement -

பொருட்களை திருடிக்கொண்டு போனவர்கள் தானே திரும்பி வந்து பொருளை திருப்பி கொடுப்பது என்பது இந்த ஆலயத்தில் நாள்தோறும் நடக்கின்றன. அன்னையின் சந்நிதிக்குப் பின்புறமுள்ள சிறிய பீடத்தில் வெட்டிப் போடப்பட்ட காசுகள் எண்ண முடியாதவை. ஒரு கூண்டுக்குள் நிறைந்து கிடக்கும் காசுகளைத் தொடுவதற்கே மக்கள் அஞ்சுகிறார்கள். வறுமை மாறவும் தொழில் வளமுறவும் செய்யும் அன்னை, கொடியவர்களை வதைத்துக் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய்த் காட்சியளிக்கிறாள். இங்கே பொய்யாகச் சத்தியம் செய்தவர்கள் பிழைத்ததாகச் சரித்திரம் இல்லை. ஒன்றுக்கும் இல்லாத சிறிய விஷயத்திற்கெல்லாம் விட்டுக்கொடுக்காமல் தான் செய்வதே சரி என்று எண்ணி பிரிந்தவர்கள் பலர். இவர்கள் மீண்டும் ஒன்று சேர வழிபடும் பிரதான தலம் இது. பிரச்சினையால் பிரிந்து விட்டு மீண்டும் சேர விரும்பும் தம்பதியர், உறவினர், சகோதரர்கள் இங்கு “கூடுதல் வழிபாடு” என்னும் பிராத்தனை செய்கின்றனர். பிரிந்து சென்றோர் இங்கு வந்து அம்பாளுக்கு பொங்கல் வைத்து அதை அம்பிகை சன்னதி முன் வைத்து ஒன்றாகக் கூடுகின்றனர்.

kovil

வராலாறு:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் தெய்வமாக விளங்குகிறார் அய்யனார். தீய சக்திகள் ஊருக்குள் வரவிடாமலிருக்க அந்த ஊர் மக்களால் ஊர் எல்லையில் அய்யனார் சிலை நிறுவப்பட்டு வணங்கப்படுவது வழக்கம். முற்காலத்தில் பக்தர் ஒருவர் கணவில் தோன்றிய அய்யனார் ஒரு ஈச்சமர தோப்பிற்க்குள் தான் சிலை வடிவில் இருப்பதாக உணர்த்தினார். அதன்படி அந்த பக்தர் ஈச்சமர தோப்பிற்குள் தோண்டும்போது, கோடரியால் வெட்டப்பட்டு அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதனால் இவருக்கு வெட்டுடை அய்யனார் என்ற பெயர் வந்தது. பிறகு அங்கேயே அவருக்கு கோவில் அமைக்கப்பட்டு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Amman

அய்யனார் சன்னிதிக்கு அருகில் ஒரு நள்ளிரவில் பேரொளி மின்னுவதை மக்கள் கண்டனர். மறுநாள் காலை அந்த இடத்தில் அம்பிகையின் யந்திரமும் கண்டெடுக்கப்பட்டது. எனவே அங்கு அம்பிகைக்கு ஒரு தலம் எழுப்பட்டது, வெட்டுடையார் அய்யனார் சந்நிதிக்கு அருகில் அமையப் பெற்றதால் அவருக்கு வெட்டுடையார் காளி என்ற பெயர் வந்தது.

சில மாதங்கள் கழித்து, ஒருநாள் அய்யனாருக்கு பூஜை செய்துகொண்டிருக்கையில் அய்யனார் சன்னிதிக்கு எதிரில் இருந்த மணற்பரப்பில் திடீரெண்டு சில எழுத்துக்கள் தோன்ற, அவை காளிக்கு உரியது என்று நம்பி அந்த இடத்தில் காளிக்கு ஒரு சன்னிதியை எழுப்பினார். இதுவே வெட்டுடையார் காளி கோவிலாகவும் மாறியது. ஈச்சமரக்காட்டில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு வந்ததால் வெட்டுடையார் அய்யனார் எனவும் காளிக்கு வெட்டுடையார் காளி எனவும் பெயர் வந்தது.

oom

அமைவிடம்:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இருந்து நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில் உள்ளது இந்த கோவில். மெயின் ரோட்டில் இருந்து உள்ளே 2கிமீ சென்றால் இக்கோவிலை அடையலாம்.