இந்த வெயில் காலத்தில் ஒரு முடிகூட தலையில் இருந்து கொட்டவே கொட்டாது. 3 மாதத்தில் முடிவில்லாத முடி வளர்ச்சி பெற, இந்த 3 பொருட்களை சேர்ந்து ஹேர் பேக் போடுங்க.

hair4
- Advertisement -

அடிக்கிற வெயிலில் சில பேருக்கு வியர்வை சூசி உடல் சூடு காரணமாக தலையிலிருந்து முடி அதிகமாக கொட்டத் தொடங்கும். இந்த வெயில் காலத்தில் நம்முடைய தலையை குளிரச் செய்து, முடி உதிர்வை கட்டுப்படுத்த ஏற்ற ஒரு ஹேர் பேக் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய காசு கூட செலவு செய்ய வேண்டாம். நம் வீட்டில் இருக்கக் கூடிய சில பொருட்களை வைத்தே இந்த ஹேர் பேக்கை தயார் செய்து கொள்ளலாம். வெயில் காலம் முடியும் வரை, அதாவது அடுத்த இரண்டு மாதத்திற்கு இந்த ஹேர் பேக்கை போட்டு வர உங்களுடைய முடி உதிர்வு நிற்கும். அதே சமயம் முடி வளர்ச்சியும் இரட்டிப்பாக அதிகரிக்கும்.

இந்த ஹேர் பேக்கை தயார் செய்ய நாம் பயன்படுத்தப் போகும் பொருட்கள். செம்பருத்தி பூ, வெந்தயம், சின்ன வெங்காயம். செம்பருத்தி பூ கிடைக்கவில்லை என்றால், அதற்கு பதில் செம்பருத்தி இலையை கூட நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். 2 ஸ்பூன்  வெந்தயத்தை 8 மணி நேரத்திற்கு முன்பே தண்ணீரில் போட்டு நன்றாக ஊறவைத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். வெந்தயம் ஊறவைத்த தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். 6 செம்பருத்திப் பூ, அல்லது இலை போட்டுக்கொள்ள வேண்டும். 6 லிருந்து 7 தோலுரித்த சின்ன வெங்காயத்தையும் போட்டு கொள்ள வேண்டும்‌. மிக்ஸி ஜாரில் சேர்த்த இந்த மூன்று பொருட்களையும் விழுது போல மைய அரைத்துக் கொள்ளுங்கள். கொழகொழவென பார்ப்பதற்கு இந்த ஹேர் பேக் சூப்பராக இருக்கும்.

இதை அப்படியே ஒரு காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டி கொள்ளவேண்டும். ரொம்பவும் தண்ணீராக பேக்கை அரைக்கக் கூடாது. கொஞ்சம் திக்காக ஜெல்லி போலவே இந்த ஹேர் பேக்கை தயார் செய்து கொள்ளுங்கள். வடிகட்டி எடுத்த இந்த பேக்குடன் 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து இதை மயிர் கால்களில் இருந்து முடியின் நுனி வரை அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன் பின் ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துப் பாருங்கள் உங்களுடைய தலைமுடி அவ்வளவு சாஃப்டா அழகாக மாறி இருக்கும். தலைக்கு குளிக்கும் போதே முடி உதிர்வதில் வித்தியாசம் தெரியும். வாரத்தில் இரண்டு நாள் அல்லது ஒரு நாள் இந்த ஹேர் பேக்கை தலைக்கு போடலாம். மற்ற ஹேர் பேக்குகளை முயற்சி செய்து பார்க்க வில்லை என்றாலும் பரவாயில்லை. வெயில் காலத்தில் இரண்டு மாதத்திற்கு தொடர்ந்து இந்த ஹேர் பேக்கை போட்டு வந்தால் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு புதிய முடி வளரும். முடி உதிர்வு உடனடியாக நிற்கும்.

வெயில் காலம் முடிந்து மழைக்காலம் தொடரும்போது ஹேர்பர்ட் போடவில்லை என்றாலும் உங்களுடைய முடியில் வளர்ச்சி இருக்கும். முடி உதிர்வு கட்டுக்குள் அடங்கும். இந்த சுலபமான ஹேர் பேக்கை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா அடர்த்தியான நீளமான முடி வளர வேண்டும் என்ற ஆசை நிறைவேறும்.

- Advertisement -