இந்த பொருளை, ஒருமுறை அம்மன் கோவிலுக்கு தானமாக கொடுத்து விட்டால் போதும். உங்களுடைய வண்டி வாகனம் அடிக்கடி விபத்துக்குள்ளாகாமல் இருக்கும்.

amman2
- Advertisement -

இப்போது ஒரு வீடு என்று எடுத்துக் கொண்டால், அந்த வீட்டில் உள்ளவர்கள் பைக், கார் என்று ஆளுக்கு ஒரு வாகனத்தை வைத்துள்ளார்கள். சாலையில் செல்வதற்கு இடம் இல்லாத அளவிற்கு இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்கள் வேகவேகமாக முந்திக்கொண்டு செல்கின்றது. இந்த சூழ்நிலையில் நம்முடைய வண்டி வாகனம் அடிக்கடி பழுதடையாமல், அடிக்கடி விபத்துக்குள்ளாகாமல் இருப்பதற்கு ஆன்மீக ரீதியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய சில பரிகார முறையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். ‌

முதலாவதாக எதை தொடங்குவதாக இருந்தாலும் முதலில் நாம் வணங்க வேண்டிய கடவுள் விநாயகர். நீண்டதூரம் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் விநாயகரை வணங்கிவிட்டு ஒரு சிதறுதேங்காய் விட்டு, அதன் பின்பு உங்களுடைய பயணத்தை தொடங்குங்கள். உங்களுடைய பயணம் எந்த தடையும் இல்லாமல் இனிதே நடக்கும். பெரும்பாலும் இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் முதல் முக்கியத்துவமான விஷயம் இதுதான்.

- Advertisement -

அடுத்தபடியாக உங்களுடைய வாகனத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்திருக்கும் படி ஒரு சிறிய படமோ அல்லது சிலை கிடைத்தாலும் வைத்துக்கொள்ளலாம். இருசக்கர வாகனங்களில் சிறிய அட்டை வடிவில் இந்த முருகர் விநாயகர் படம் சேர்ந்து இருக்கும்படி வைத்துக் கொண்டால் கூட உங்களுடைய வண்டி அடிக்கடி விபத்து நடக்காமல் இருக்கும். அதாவது சில பேர் வண்டியிலிருந்து அடிக்கடி கீழே விழுந்து கைகால்களை உதைத்துக் கொள்வார்கள். வண்டியை கொண்டு அடுத்த வண்டியின் மேல் மோதி வண்டியை அடிக்கடி பழுது செய்துகொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வு.

பயணத்தின்போது விநாயகர் வழிபாட்டிற்கு எப்படி நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போல ஹனுமன் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். வீட்டிலிருந்து வெளியே 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது எனும் பட்சத்தில் ஒரு ஹனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு துளசி மாலை சாத்தி விட்டு, ஹனுமன் கழுத்தில் இருக்கும் ஒரு துளசியை வாங்கிய உங்களுடைய வண்டி வாகனத்தில் வைத்துவிட்டு அதன் பின்பு பயணம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

- Advertisement -

என்னதான் செய்தாலும் எங்களுடைய வண்டி வாகனம் அடிக்கடி பழுதடைந்து கொண்டே இருக்கின்றது. என்னதான் செய்தாலும் வண்டி வாகனம் ஏதாவது ஒரு சூழ்நிலையில் விபத்தில் சிக்கி, வண்டி ஓட்டுபவர்களுக்கு, நடக்கும் விபத்தில் உடல் உறுப்புகள் இழப்பு கூட ஏற்படுகிறது என்று சொல்பவர்கள் ஒரு அம்மன் கோவிலுக்கு திரிசூலத்தை தானமாக கொடுக்க வேண்டும். ஒரே ஒரு முறை மனதார அம்மனிடம் வேண்டிக் கொண்டு இந்த திரிசூலத்தை கோவிலுக்கு, கோவிலில் இருக்கும் அம்பாளுக்கு தானம் செய்ய வேண்டும்.

அம்மன் கோவிலுக்கு திரிசூலத்தை தானமாக கொடுத்தால், உங்களுடைய வண்டி வாகனம் பழுதடையாமலும் விபத்துக்குள்ளாகாமல் இருக்கும். எந்த அம்மன் கோவிலுக்கு வேண்டுமென்றாலும் இந்த தானத்தை கொடுக்கலாம் அது நம்முடைய விருப்பம். உங்கள் வசதிக்கு ஏற்ப எந்த உலோகத்தில் வேண்டுமென்றாலும் இந்த திரிசூல தானம் செய்யலாம். அதுவும் அவரவருடைய விருப்பம் தான். குறிப்பாக டிராவல்ஸ் நடத்துபவர்கள் இந்த பரிகாரத்தை செய்வது அவர்களுக்கு நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேற்சொன்ன பரிகாரங்களை நம்பிக்கையோடு செய்து பலனடையலாம்.

- Advertisement -