விபத்துகள் ஏற்படாமல் இருக்க வழிபாடு

murugan accident
- Advertisement -

இன்றைய காலத்தில் பயணங்கள் மேற்கொள்வது என்பது தினமும் நடக்கக்கூடிய ஒரு செயலாகவே இருக்கிறது. சாதாரணமாக ரோட்டில் நடந்து செல்பவரும் இருக்கிறார்கள், சைக்கிளில் செல்பவர்களும் இருக்கிறார்கள், இரண்டு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என்று அனைத்து விதமான வாகனங்களிலும் பயணம் செய்பவர்கள் இருக்கிறார்கள். நாம் சரியாக சென்றாலும் நம்முடைய நேரம் காலத்திற்கு ஏற்றவாறு வேறு யாராவது வந்து நம் மீது இடித்து நமக்கு விபத்துகளை ஏற்படுத்தும் சூழ்நிலையும் உண்டாகும். எப்பேர்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அந்த சூழ்நிலையில் விபத்துகள் ஏற்படாமல் அதில் இருந்து நாம் தப்பிக்க செய்ய வேண்டிய எளிமையான வழிபாட்டு முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

வாகனங்களில் பயணங்கள் செய்வது என்பது சர்வசாதாரண விஷயமாக விட்டது. இந்த பயணங்களை பாதுகாப்பான பயணமாக மேற்கொள்வதற்கு விழிப்புணர்வுடன் நாம் பயணம் செய்ய வேண்டும். என்னதான் விழிப்புணர்வுடன் நம் பயணம் செய்தாலும் திடீரென்று எதிர்பாராத விதமாக யாராவது ஒருவர் நம் மீது வந்து இடித்து விபத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகளும் இருக்கிறது.

- Advertisement -

இன்னும் சில இல்லங்களில் தினமும் வண்டியில் செல்லும் பொழுது கீழே விழுந்து அடிபட்டு வருபவர்களும் இருக்கிறார்கள். இப்படி அடிக்கடி விபத்தில் மாட்டிக் கொள்பவர்களாக இருந்தாலும் அந்த விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு செய்யக்கூடிய வழிபாட்டு முறையை பார்ப்போம்.

எந்த ஒரு காரியத்திற்காக நாம் வெளியே கிளம்புவதாக இருந்தாலும் முதலில் “ஹரி ஓம்” என்னும் மந்திரத்தை 12 முறை மனதார கூறிவிட்டு பிறகு வீட்டை விட்டு வெளியே கிளம்ப வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் நம்மை பாதுகாக்கும் கவசமாக முருகப்பெருமான் திகழ்வதற்கு அருணகிரிநாதர் பாடிய கந்தர் அணுகுதியில் உள்ள ஒரு பாடலை பாராயணம் செய்ய வேண்டும்.

- Advertisement -

அதுவும் ஆறு முறை நாம் பாராயணம் செய்தால் அந்த ஆறுமுகனே நம்முடன் வருவார் என்று கூறப்படுகிறது. அந்த பாடல்
“உருவாய் அருவாய் உளதாய் இளதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே”

இதோடு சேர்த்து ஹனுமன் வழிபாடும் நமக்கு விபத்துகள் ஏற்படாமல் பாதுகாக்க உதவும். பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக ராமத்தை உச்சரித்துவிட்டு செல்வதும், பயணங்களை மேற்கொள்ளும் பொழுது ராம நாமத்தை உச்சரிப்பதும் சிறப்பு.

- Advertisement -

தேய்பிறை அஷ்டமி தினங்களில் கால பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலமும் திடீர் விபத்துகள், எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படாமல் காலபைரவர் காப்பாற்றுவார். இப்படி மந்திரங்களை உச்சரித்து விட்டு ஏனோ தானோ என்று வாகனங்களை இயக்காமல் நாமும் பாதுகாப்பாகவும் பிறருக்கும் எந்த வித தீங்கும் விளைவிக்காமல் பயணங்கள் செய்வதன் மூலம் அனைவருக்கும் நன்மையே உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையை வளமாக்கும் கவசம்

மிகவும் எளிமையான இந்த வழிப்பாட்டு முறையோடு சேர்த்து பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வதன் மூலம் எந்த வித விபத்துகளும், நேராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

- Advertisement -