திருநீறு பூசிக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

vibudhi

நீரில்லாமல் நெற்றி இருக்கக்கூடாது என்று கூறுவார்கள் நம் முன்னோர்கள். திருநீறின் மகிமைகள் பற்றி வார்த்தையில் சொல்லிவிட முடியாது. ஒரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நமக்கு எவ்வளவு மகிமைகள் கிடைக்கின்றதோ அதே அளவிற்கான மகிமையை திருநீறு வைத்துக் கொள்வதிலும் நம்மால் பெறமுடியும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறுதியில் மிஞ்சுவது ஒரு பிடி சாம்பல் தான் என்பதை நமக்கு உணர்த்துவது இந்த திருநீரு. ‘நீறு’ என்றால் சாம்பல். திருநீறு என்றால் மகிமைகள் அடங்கிய நீறு என்ற பொருளைக் குறிகின்றது. இதற்கு விபூதி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. விபூதி என்றால் ஞானம் ஐஸ்வர்யம் என்ற அர்த்தத்தை தருகிறது. பிறப்பையும் இறப்பையும் இந்த பூமியில் அனுபவித்து கடைசியில் ஈசனை அடையச்செய்வது திருநீறு.

vibudhi

இந்த திருநீறானது நான்காக வகைப்படுத்தப்படுகிறது. கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம். கன்றுடன் இருக்கும் ஆரோக்கியமான பசு சாணத்தை எடுத்து, அக்னியில் எரித்து வரும் சாம்பலை கல்பத் திருநீறு என்று கூறுகிறார்கள். காடுகளில் இருக்கும் பசுக்களின் சாணத்தை எடுத்து எரித்து அணுகல்பத் திருநீரு தயாரிக்கப்படுகிறது. தொழுவங்களில்லிருந்து எடுக்கப்படும் சாணத்தை எரித்து உபகல்பத் திருநீரு தயாரிக்கப்படுகிறது. வீதிகளில் இருக்கும் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு அகல்பம். இதில் உபகல்பத் திருநீறை தான் நாம் பயன்படுத்துகின்றோம். இந்த சாதனங்கள் அனைத்தும் சிவனின் ரூபமான அக்கினியில் எரித்து உருவாக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

நம்முடைய உடலில் நெற்றிப் பகுதி மிகவும் ஒரு முக்கியமான இடம். இந்த இடத்தை வசியப்படுத்தி விட்டால் எதிரிகள் நம்மை என்ன வேண்டுமென்றாலும் செய்துவிடலாம் என்கிறது சித்தர்களின் வாக்கு. ஆகவே நம்மை தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகவே, நமக்காக படைக்கப்பட்ட ஒரு அற்புதமான பொருள் தான் இந்த விபூதி. இந்த விபூதியை நாம் நம்முடைய நெற்றியில் வைத்துக் கொள்ளும் போது ஒரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் இதன் சக்தியானது மேலும் அதிகரிக்கப்படுகிறது. திருநீரை உங்களின் நெற்றியில் பூசிக் கொள்ளும் போது இந்த மந்திரத்தை கட்டாயம் உச்சரிப்பது நன்மைதரும். உங்களுக்கான திருநீறு மந்திரம் இதோ..

viboothi

திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.

- Advertisement -

திருநீறு பூசிக் கொள்ளும் போது இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் அதன் மகிமைகளை நீங்களே காலப்போக்கில் உணர்ந்து கொள்வீர்கள்.

இதையும் படிக்கலாமே
எதிரிகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள சுலபமான சூலினி மந்திரம்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thiruneeru benefits in Tamil. Thiruneeru manthiram. Thiruneer uses in Tamil. Vibhuti mantra in Tamil. Viboothi manthiram.