கண்ணாடி, வெள்ளி பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள், எவர்சில்வரில் உப்புக் கரை நீங்கி அனைத்தையும் பளிச்சிட வைக்கும் வீட்டிலிருக்கும் ஒரு பொருள்! என்ன அது? எப்படி பயன்படுத்துவது?

silver-pithalai-pooja-items
- Advertisement -

வீட்டில் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி முதல் வெள்ளிப் பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள் அனைத்தையும் பளிச்சிட வைக்கும் அற்புதமான ஒரு பொருள் நம் வீட்டில் எப்பொழுதும் இருக்கும் ஒன்று தான். தெய்வீக மணம் கமழும் இந்த ஒரு பொருள் இவற்றை மட்டுமல்லாமல் எவர்சில்வர் பாத்திரங்களை கூட பளிச்சிட வைக்கும். மேலும் உப்பு கரையை அகற்றும் தன்மையும் இதற்கு உண்டு. இப்படி இவ்வளவு விஷயங்களை செய்யும் இந்த ஒரு பொருள் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக வெள்ளிப் பாத்திரங்களைத் தேய்க்கப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இந்த ஒரு பொருள் வேறு எதுவும் இல்லை. நம் வீட்டின் பூஜை அறையில் இருக்கும் விபூதி தான். தெய்வீக மணம் கமழும் இந்த விபூதி சாம்பல் கொண்டு செய்யப்படுகிறது. இந்த விபூதியை ஈரம் இல்லாமல் ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒவ்வொரு வெள்ளிப் பாத்திரங்களையும் தண்ணீரில் முக்கி எடுத்து உதறி கொள்ளுங்கள். பின்னர் விபூதியை தொட்டு கொஞ்சம் அழுத்தம் கொடுத்து தேய்த்தால் போதும் வெள்ளி பாத்திரங்கள் அனைத்தும் கறுத்த தோற்றத்திலிருந்து பளபளவென புதியது போல மின்ன ஆரம்பிக்கும். அல்லது விபூதியை தண்ணீரில் கெட்டியாக குழைத்துக் கொள்ளுங்கள். வெள்ளி பாத்திரங்களை ஈரமில்லாமல் இந்த விபூதியைக் கொண்டு அழுத்தம் கொடுத்து தேய்த்தாலும் இதே போல பளிச்சிடும்.

- Advertisement -

வெள்ளி பாத்திரங்கள் மட்டுமல்லாமல் பித்தளை பாத்திரங்களையும் விபூதி சுத்தம் செய்யும். இதே போல தண்ணீரில் கெட்டியாக விபூதியைக் கொண்டு அழுத்தம் கொடுத்து தேய்த்து பின்னர் 10 நிமிடம் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு பித்தளை பாத்திரங்களை தேய்த்தால் பித்தளை பாத்திரம் ஜொலிக்கும்.

பூஜைக்கு பயன்படுத்தும் வெள்ளி மற்றும் பித்தளை பாத்திரங்கள் மட்டுமல்லாமல், நம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தாத எவர்சில்வர் பாத்திரங்களை மீண்டும் பயன்படுத்த நினைக்கும் பொழுது விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து கழுவி சுத்தம் செய்த பின்பு பயன்படுத்தினால் பளிச்சென இருக்கும்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி பழையதாக இருக்கும் பொழுது அதில் சரியாக முகம் தெரியாது. அதில் பிசுபிசுப்பு தன்மை ஒட்டிக் கொண்டிருக்கும். கண்ணாடியில் கொஞ்சம் விபூதியை தூவி, நியூஸ் பேப்பரைக் கொண்டு துடைத்து எடுத்தால் நீங்கள் புதிதாக வாங்கிய கண்ணாடி போல ஒரு கீறல் கூட இல்லாமல் நன்கு பளிச்சென்று இருக்கும். கண்ணாடி மட்டுமல்லாமல் பூஜைக்கு பயன்படுத்தும் சுவாமி படங்களுக்கு கூட இதே போல விபூதியைக் கொண்டு துடைத்தால் பளிச்சென்று இருக்கும். அதில் இருக்கும் மஞ்சள், குங்குமம் கரை எல்லாம் நீங்கிவிடும்.

எவர்சில்வர் பாத்திரங்களின் அடியில் உப்பு கரை பட்டு நீண்ட நாட்களாக அடிப்பிடித்து போயிருக்கும். இந்த உப்புக் கரை மீது கொஞ்சம் விபூதியை பூசி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இரும்பு நார் கொண்டு அழுத்தம் கொடுத்து தேய்த்தால் உப்பு கரை எல்லாம் தானாக தனியாக வந்துவிடும். இப்படி விபூதியை கொண்டு வீட்டில் நம் பொருட்களை பளிச்சென பளிச்சிட வைக்கும் பொழுது வேறு பொருள் எதற்கு தேடப் போகிறோம்?

- Advertisement -