- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவிதியை மாற்றும் வைகாசி விசாக தீபம்

விதியை மாற்றும் வைகாசி விசாக தீபம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கஷ்டத்தில் இருக்கும் பொழுது என்னுடைய தலைவிதி என்ன செய்வது என்று புலம்பி இருப்போம். அந்த பிரம்மன் நம் தலையில் ஒழுங்காக எழுதவில்லை என்று கூட கூறி இருப்போம். இப்படிப்பட்ட விதியை மையப்படுத்தி பலவிதமான பழமொழிகளும் இருக்கிறது. எப்பேர்பட்ட மோசமான தலையெழுத்தாக இருந்தாலும் அந்த தலையெழுத்தை மாற்றி சிறப்பான ஒரு வாழ்க்கையை அமைத்து தருவதற்கு வைகாசி விசாகத்தில் முருக வழிபாடு உதவி செய்யும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வைகாசி விசாக தீபம்

படைத்தல் தொழிலை செய்யக்கூடியவராக திகழ்பவர் தான் பிரம்மதேவர். அப்படிப்பட்ட பிரம்ம தேவரையே சிறையில் அடைத்து படைக்கும் தொழிலை செய்தவராக திகழ்ந்தவர் தான் முருகப்பெருமான். அதனால் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்தோம் என்றால் பிரம்மதேவரால் எழுதப்பட்ட தலைவிதியும் மாறும். அப்படிப்பட்ட முருக பெருமான் பிறந்த தினமான வைகாசி விசாக நாளில் முருகப்பெருமானை எப்படி வழிபாடு செய்யலாம் என்று தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வைகாசி விசாகம் என்பது ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இருந்து மாலை 4 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ராகு காலம் எமகண்ட நேரத்தை தவிர்த்து இந்த தீபத்தை ஏற்றி வைத்து முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யலாம். எப்பொழுதும் போல் வைகாசி விசாக நாளில் எந்த முறையில் வழிபாடு செய்வீர்களோ அந்த முறையில் வழிபாடு செய்து கொள்ளுங்கள். கூடுதலாக இந்த ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக ஒரு வெள்ளை நிற பேப்பரில் சிவப்பு நிற மையைக் கொண்டு வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களின் பெயரையும் நட்சத்திரத்தையும் எழுதிக் கொள்ளுங்கள்.

ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதற்கு மேல் வெற்றிலையை வைத்து வெற்றிலைக்கு மேல் நாம் எழுதிய இந்த பேப்பரை வைக்க வேண்டும். அதற்கு மேல் சிறிது துவரம் பருப்பை எடுத்து வைத்து அந்த துவரம் பருப்பிற்கும் மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக பீட்ரூட் அல்வா நெய்வேத்தியமாக செய்து வைக்க வேண்டும். இயலாதவர்கள் தேன் திணைமாவை கூட வைக்கலாம். இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபரின் தலையெழுத்தும் மாறும் அவர்களின் ஆயுள் விருத்தி அடையும். எப்பேர்ப்பட்ட மோசமான நேரமாக இருந்தாலும் முருகப்பெருமானின் அருளால் நன்மை உண்டாகும். இந்த தீபத்தை பார்த்து முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யலாம். வேல்மாறலை படிக்கலாம். அல்லது “ஓம் சரவணபவ” என்னும் முருகப்பெருமானின் மந்திரத்தை முழுமனதோடு கூறலாம். இந்த தீபத்தை ஏற்றி வைத்து குறைந்தது 48 நிமிடம் முருகப்பெருமானை நினைத்து தீபத்திற்கு முன்பாக அமர்ந்து முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: நாளை வைகாசி விசாகம். முருகன் பால் அபிஷேக வழிபாடு

பிரம்ம தேவருக்கு நிகராக படைக்கும் தொழிலை செய்த முருகப் பெருமானை நினைத்து முருகப்பெருமானுக்குரிய சிறப்பு மிகுந்த நாளான வைகாசி விசாகத்தில் இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய தலையெழுத்து மாறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்