சர்ச்சைக்கு உண்டான இந்திய வீரர் அவுட் தவறாக கொடுக்கப்பட்டது அம்பலம் – வீடியோ பதிவு

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல நாள் ஆட்ட வருகிறது. முடிவில் 303 ரன்களை குவித்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று விஹாரி மற்றும் புஜாரா ஆகியோர் ஆட்டத்தினை ஆரம்பித்தனர்.

vihari

நேற்றைய தினத்தினை போன்றே இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை நிதானமாக எதிர்கொண்டு ரன்களை சேகரித்தனர்.அப்போது லயன் பந்து வீச வந்தார். அதனை எதிர்கொண்ட விஹாரி ஸ்வீப் ஷாட் ஆடினார். அதில் எட்ஜ் ஆக அம்பயர் விஹாரி அவுட் என்று அறிவித்தார். இருந்தாலும் விக்கெட் சரியாக விழுந்ததா என்று பெரிய திரையில் மூன்றாவது அம்பயரால் பார்க்கப்பட்டது.

- Advertisement -

அப்போது பந்து பேட்டின் மீது படவில்லை என்பது பேட்டின் மீது இருந்த நிஷல் மூலம் அப்பட்டமாக தெரிந்தது. இருப்பினும், ஸ்னிக்கோ மீட்டரில் கோடுகள் வர மூன்றாவது அம்பயர் விஹாரியை அவுட் என்று அறிவித்தார். இதனால் மிகுந்த ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார் விஹாரி. வீடியோ பதிவு உங்களுக்காக

- Advertisement -

பந்து பேட்டில் படவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தும் அவுட் கொடுக்கப்பட்டது இப்பொது சர்ச்சைக்குரிய விடயமாக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது. நண்பர்களே உங்களது கருத்துக்களையும் நீங்கள் எங்களுடைய கமெண்ட் பகுதியில் பதிவிடலாம்.

இதையும் படிக்கலாமே :

தனது ஸ்டைலில் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பதிலளித்த ஜடேஜா – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -