விளக்கு ஏற்றிய பிறகு மீதமாகும் எண்ணெயை கீழே ஊற்றி பாவத்தைச் சேர்த்துக் கொள்ளாமல், அதனை இப்படி பயன்படுத்தி புண்ணியம் பெறுங்கள்

poojai
- Advertisement -

அனைவரது வீட்டிலும் தினமும் ஒருமுறை அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது விளக்கு ஏற்றி பூஜை செய்வது வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு இல்லத்திலும் 1, 2, 5, 9 என்ற எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றப்படுகிறது. இந்த தீபங்களில் தீபம் ஏற்றுவதற்காக சேர்க்கப்படும் எண்ணெய் முழுவதுமாக தீர்ந்து போகாமல் சிறிதளவு மீதமாகியிருக்கும். பூஜை பொருட்களை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யும் பொழுது விளக்குகளில் இருக்கும் எண்ணெயை தனியாக எடுத்து வைப்பவர்கள் என்று சிலர் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் இந்த எண்ணெயை கீழே ஊற்றி விடுகின்றனர். இவ்வாறு செய்வது நமக்கான பாவத்தை தான் சேர்க்கிறது. இவ்வாறு செய்வதை தவிர்த்து விட்டு, இந்த எண்ணெயை எப்படி பயன்படுத்தினால் புண்ணியம் பெற முடியும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வீட்டிலுள்ள பெண்கள் காலை எழுந்து விட்டு, முகத்தைக் கழுவி, வீட்டை சுத்தம் செய்த பிறகு, ஒரு அகல் விளக்கு ஏற்றி வைப்பது சிறந்த பலனை கொடுக்கிறது. தினமும் இவ்வாறு செய்து வர வீடு எப்போதும் சுபிட்சமாகவும், ஐஸ்வர்யத்துடனும் இருக்கும். இப்படி பூஜை செய்வதற்காக தினமும் பயன்படுத்தும் விளக்குகளில் இருக்கும் எண்ணெயை முறையாக பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

எடுத்து வைத்த பழைய எண்ணெய்யை மீண்டும் பூஜை அறையில் இருக்கும் விளக்கில் ஊற்றி தீபம் ஏற்றக்கூடாது. அதேசமயம் அதனை கீழே ஊற்றியும் விடக்கூடாது. அப்போது இந்த எண்ணெயை என்ன தான் செய்ய வேண்டும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். இந்த கேள்வி எப்பொழுதும் பல பெண்களின் மனதில் இருந்து கொண்டிருக்கும் ஒரு கேள்வி தான்.

வீடு சுபிட்சமாக இருப்பதற்கு ஒருசில சிறப்பு ஆன்மீக வழிபாடுகளை இல்லங்களில் செய்வதுண்டு. அவ்வாறு காலை எழுந்தவுடன் முதலில் உள்ளங்கையை பார்ப்பது, வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் தூபம் காண்பிப்பது. மாலை நேரத்தில் சரியாக விளக்கு ஏற்றுவது போன்ற செயல்களை செய்யாமல் இருப்பது என ஐஸ்வர்யம் பெருக காரணமாக இருக்கும் பல செயல்களை செய்து வருகிறோம்.

- Advertisement -

அதுபோல பலரது வீடுகளிலும் மாலை நேரத்தில் நிலைவாசல் தீபம் ஏற்றுவார்கள். இதனை செய்வது ஒவ்வொரு வீட்டிற்கும், குடும்பத்திற்கும் மிகுந்த நன்மையை கொடுக்கிறது. அப்படி நிலை வாசலில் தீபம் ஏற்றும் பொழுது அந்த விளக்கில் பயன்படுத்தப்படும் எண்ணெய் இந்த பூஜை அறை விளக்கில் இருந்து எடுத்த எண்ணெயாக இருக்கலாம். இவ்வாறு செய்வது மிகுந்த நன்மையை கொடுக்கிறது.

அதுபோலவே சமையலறையிலும் தினமும் ஒரு பத்து நிமிடமாவது ஒரு அகல் விளக்கை ஏற்றிவைக்க வேண்டும். அதிலும் இந்த பழைய எண்ணெயை பயன்படுத்தி கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் பலரது வீட்டிலும் உருளியில் தண்ணீர் ஊற்றி, பூ வைத்து அலங்காரம் செய்து வைக்கும் பழக்கத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது இந்த உருளியின் அருகாமையில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைக்கலாம். அதிலும் இந்த பழைய எண்ணெயை ஊற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -