நிமிடத்தில் முகம் பளிச்சென்று மாற பக்காவான ஃபேஸ் பேக்

face badam pisin
- Advertisement -

இப்போதைய காலக்கட்டத்தில் எல்லாமே உடனே நடக்க வேண்டும். எதற்கும் காத்திருக்க கால அவகாசம் கிடையாது என்கிற சூழ்நிலை உருவாகி விட்டது. இது மற்ற விஷயங்களுக்கு மட்டுமல்ல அழகு சார்ந்த விஷயங்களுக்கும் தான். அதிலும் முகம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் உடனே சரியாகி விட வேண்டும் என நினைக்கிறார்கள்.

இதனால் தேவையில்லாத கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தி அழகை அதிகரிப்பதாக நினைத்து கெடுத்துக் கொள்கிறார்கள். டல்லான முகம் கூட உடனே பளிச்சென்று பிரகாசமாக மாற அதிக பணம் கொடுத்து கெமிக்கல் கலந்த கிரீம்களை தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

- Advertisement -

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையான முறையில் செலவே இல்லாமல் நம்முடைய அழகை ஆரோக்கியமாகவே பராமரிக்கலாம். அப்படியான ஒரு எளிய அழகு குறிப்பு பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

முகம் பளிச்சென்று மாற பாதாம் பிசின் ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் தயார் செய்ய நான்கு பாதாம் பீசினை முதல் நாளே தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் இதை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இதில் கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும். இதற்கு முடிந்த அளவிற்கு இயற்கையான கற்றாழை ஜெல்லை சேர்க்க முயற்சி செய்யுங்கள். கற்றாழை மடலை எடுத்து அதின் உள்ளிருக்கும் ஜெல்லை நன்றாக சுத்தம் செய்த பிறகு இந்த பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இவைகளை அரைப்பதற்கு தண்ணீருக்கு பதிலாக கொஞ்சமாக காய்ச்சாத பாலை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இதை நம் முகத்திற்கு பேக்காக போடும் பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை இது மிகவும் கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது பாதாம் பிசினில் இருந்து வடித்து வைத்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். இந்த பேக்கை போடுவதற்கு முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். சோப்பு பயன்படுத்த வேண்டாம். இந்த பேக்கை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

பத்து நிமிடம் கழித்து லேசாக மசாஜ் செய்து விட்டு முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு அலம்பி விட்டு மெல்லிய காட்டன் துணி வைத்து துடைத்து பாருங்கள். முகம் அத்தனை பொலிவாகவும் பிரகாசமாகவும் இருக்கும். பார்லர் சென்று அழகுப்படுத்தினால் கூட உடனே இத்தனை பளபளப்பை பெற முடியாது. இந்த பேக் அனைத்து விட சருமத்தினரும் பயன்படுத்தலாம். இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்துங்கள் போதும்.

இதையும் படிக்கலாமே: சருமம் தங்கம் போல் மின்ன ஃபேஸ் பேக்

முகத்தை அழகுப்படுத்திக் கொள்ள தேவையற்ற கிரீம்களை பயன்படுத்தி பக்க விளைவுகளை ஏற்படுத்திக் கொள்வதை விட, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் எளிமையான இந்த முறை சிறந்தது. உங்களுக்கு இந்த முறை பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -