வீட்டில் இத்தனை விளக்குகள் தான் ஏற்ற வேண்டுமா? எவ்வளவு நேரத்திற்கு மேல் பூஜை அறையில் விளக்கு எரிய கூடாது தெரியுமா?

vilakku-deepam
- Advertisement -

எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடுகள் செய்வது என்பது தொடர்ந்து செய்யப்பட்டு வரும் ஒரு சாஸ்திரம் ஆகும். விளக்கு ஏற்றுவதில் நிறைய சாஸ்திர உண்மைகள் ஒளிந்து கொண்டுள்ளன. எரியும் தீப ஜோதியில் தான் இறைவன் காட்சி தருவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. எந்த ஒரு வீட்டில் தினமும் காலை, மாலை என இருவேளையும் விளக்கு ஏற்றி வைக்கப்படுகிறதோ! அந்த வீட்டில் ஒரு போதும் பிரச்சனைகளும், துன்பங்களும் வருவதில்லை. செல்வ செழிப்பும், பண வரவும் சீராக இருக்கும்.

vilakku

அப்படிப்பட்ட அற்புதமான பலன்களை கொடுக்கும் விளக்கு இவ்வளவு நேரம் தான் எரிய வேண்டும் என்கிற சாஸ்திரமும் உண்டு. நாம் நம் வீட்டு பூஜை அறையில் எவ்வளவு விளக்குகள் ஏற்றலாம்? எவ்வளவு நேரம் எரிய விடலாம்? போன்ற கேள்விகளுக்கும் விடையை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

- Advertisement -

பொதுவாக வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது ஒற்றைப்படை எண்ணிக்கையில் விளக்கு ஏற்றி வைப்பது முறையாகும். அதாவது 1, 3, 5 என்ற எண்ணிக்கையில் வரிசையாக ஏற்றலாம். 2, 4, 6 என்கிற இரட்டைப்படை எண்ணிக்கையில் விளக்கு ஏற்றி வைப்பது முறையானது அல்ல. நீங்கள் காலையில் ஏற்றும் பொழுதும், மாலை வேளையில் ஏற்றும் பொழுதும் இதன் அடிப்படையில் தான் விளக்கு ஏற்ற வேண்டும்.

agal vilakku

விளக்கு ஏற்றும் பொழுது ஒற்றையாக திரியை போடவே கூடாது. இரண்டு திரிகளை ஒன்றாக இணைத்து போட்டு திரித்து தீபம் ஏற்றுவது அதித பலன்களைக் கொடுக்கும். அது எந்த விளக்காக இருந்தாலும் சரி, இரண்டு திரிகளைப் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். முதலில் விளக்கில் எண்ணெய் ஊற்றி விட்டு தான், திரியை நீங்கள் போட வேண்டும். திரியை போட்டு விட்டு, அதன் பிறகு எண்ணெய் ஊற்றக் கூடாது.

- Advertisement -

நீங்கள் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றினாலும், குத்து விளக்கு ஏற்றினாலும் கூடவே சேர்த்து ஒரு அகல் தீபத்தை ஏற்றி வைப்பது விசேஷமான பலன்களை கொடுக்கும். அகல் தீபத்திற்கு மனத் தெளிவை உண்டாக்கும் ஆற்றல்கள் உண்டு. மனதில் குழப்பங்கள் இருக்கும் பொழுது, அகல் தீபத்தை ஏற்றி வைத்து அதன் ஜோதியை சிறிது நேரம் உற்றுப் பார்த்தால் குழம்பிய மனது உடனே தெளிவடையும். வறுமை இல்லாத வாழ்வையும், செல்வ செழிப்பையும் பெற குத்து விளக்கு ஏற்றுவது முறையாகும். குத்து விளக்கு ஏற்றும் பொழுது ஒரு முகம், இரண்டு முகம் அல்லது ஐந்து முகங்களில் தீபம் ஏற்றலாம்.

kamatchi-vilakku

காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் பொழுது அடியில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விட்டு, அதனுடன் சிறிது பச்சரிசியை போட்டுக் கொள்ள வேண்டும். விளக்குகளில் எண்ணெய் ஊற்றிய பின் அதில் நாலைந்து கல்கண்டுகளைப் போட்டு தீபமேற்ற, கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம். இதற்காகவே தனியாக கல்கண்டு பாக்கெட் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

ainthu-muga-vilakku

வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது நல்ல நேரம் பார்த்து ஏற்றுவது அமோகமான பலன்களை கொடுக்கும். மாலை 5:36 மணி முதல் 6:00 மணிக்குள்ளாக தீபத்தை ஏற்றுவது முறையாகும். மற்றபடி ராகு, குளிகை, எமகண்டம் தவிர்த்து தீபம் ஏற்றலாம். ’90 நிமிடங்களுக்கு’ மேல் தீபத்தை எரிய விட வேண்டாம். ஆறு மணிக்கு ஏற்றப்படும் தீபத்தை, ஏழரை மணிக்குள் புஷ்பத்தை கொண்டு மலை ஏற்றி விட வேண்டும். அதற்கு மேல் தீபத்தை எரிய விடக்கூடாது. பரிகாரத்திற்கு அணையா விளக்கு ஏற்றும் பொழுது, நாள் முழுவதும் ஏற்றி வைக்கலாம் அதில் எந்த ஒரு குற்றமும் இல்லை. மற்ற சமயங்களில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் தீபத்தை ஏற்றி வைப்பது நல்லதல்ல.

இதையும் படிக்கலாமே
இந்தக் கதையை நீங்கள் படித்த பின்பு, பணத்தை பதுக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணமே, உங்களுக்கு நிச்சயம் ஒரு துளி அளவும் வராது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -