ஏற்றிய விளக்கை குளிரவைக்க சரியான முறை என்ன?

DEEPAM3
- Advertisement -

காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் நம் வீட்டில் விளக்கினை ஏற்றி இறைவனை வழிபடுவதன் மூலம் நமக்கு தேவையான செல்வங்களும், மன அமைதியையும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். பெண்கள் காலை நேரங்களில் எழுந்தவுடன் விளக்கினை ஏற்றி, தன் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு விட்டு, பின்பு அவர்களது வேலையை தொடங்கும் பொழுது அவர்களுக்கு மனதளவில் உற்சாகம் கிடைக்கின்றது. நம் வீட்டிற்கு வெளிச்சத்தை தந்து, நம் மனதிற்கு உற்சாகத்தை தந்து, நம் வாழ்க்கையை பிரகாசமாக ஒளிரச் செய்வதற்காக நாம் ஏற்றும் விளக்கினை எப்படி பூர்த்தி செய்யவேண்டும். என்பதை பற்றிதான் இந்த பதிவில் காணப் போகின்றோம்.

DEEPAM

இறைவனின் அருளை  பெறுவதற்காக புராண காலங்களில் முனிவர்கள் யாகங்களையும்  ஹோமங்களையும் செய்து இறைவனை வழிபட்டனர். காலப்போக்கில் அது சுலபமான முறையில் விளக்கினை ஏற்றி இறைவனை வழிபட்டால் போதும் என்ற முறையாக மாறிவிட்டது.   நாம் ஏற்றும் விளக்கின் சுடர் ஒளியில் மகாலஷ்மியும், ஒலியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் உள்ளார்கள் என்பது ஐதீகம்.

- Advertisement -

ஆகவேதான் நாம் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று, காலையில் நம் வீட்டு வாசலில் அரிசி மாவில் கோலம் போட்டு, இறைவனுக்கு விளக்கினை ஏற்றி கற்பூர தீபாராதனை காட்டி வழிபடுகின்றோம். விளக்கில் ஏற்றப்படும் ஒளியானது நமக்கு பிரபஞ்சத்திலிருந்து சக்தியையும், முப்பெரும் தேவியரின் அருளையும்  பெற்றுத் தருகின்றது. நாம் ஏற்றும் விளக்கு நெய் தீபமாக இருக்கும் பட்சத்தில் அம்பாளின் அருளையும் பெறலாம்.

deepam

வெள்ளிக்கிழமைகளில் மட்டுமல்லாமல், தினம்தோறும் விளக்கினை ஏற்றி வருவதன் மூலம் நாம் இறைவனின் அருளை முழுமையாகப் பெறமுடியும். இதனால் கண் திருஷ்டியும், கெட்ட சக்திகளும் நம்மை அண்ட முடியாது.

- Advertisement -

deepam

நாம் ஏற்றிய விளக்கு, நம்மால் பூர்த்தி செய்வதற்கு முன்பு, என்னை தீர்ந்து தானாகவே அணைய கூடாது. நாம் விளக்கினை கைகளால் வீசியோ, வாயால் ஊதியோ அணைக்க கூடாது. இது அமங்களத்தைக் குறிக்கும். ஏனென்றால், பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு இவை ஐந்தையும் நாம் வழிபடுவதால் ஒன்றால் ஒன்றை அழிக்கக்க கூடாது. பூக்களால் தான் விளக்கினை குளிர வைக்க வேண்டும். இதுவே சரியான முறையாகும்.

இதையும் படிக்கலாமே:
சஷ்டி விரதம் இருப்பது எப்படி? அதன் பலன்கள் என்ன?

- Advertisement -