மாலையில் வீட்டில் தீபம் ஏற்றுகையில் கூறவேண்டிய மந்திரம்

vilakku

பொதுவாக நமது வீடுகளில் காலை மாலை என இருவேளையும் திருவிளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். வேலை காரணமாக தினமும் இதை செய்ய முடியாவிட்டாலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றுவதை பலர் தவறுவதில்லை. அப்படி மாலை வேலையில் வீட்டில் விளக்கேற்றுகையில் கீழே உள்ள திருவிளக்கு மந்திரம் அதை கூறினால் அனைத்து விதமான நன்மைகளும் வீட்டில் நிலைகொள்ளும்.

vilakku

திருவிளக்கு மந்திரம்:
சிவம் பவது கல்யாணம்
ஆயுராரோக்ய வர்த்தனம்
மம: துக்க வினாசாய
ஸந்த்யா தீபம் நமோ நம:

பொது பொருள்:
மாலை நேரத்தில் நான் வழிபடும் திருவிளக்கே, உந்தன் மகிமையால் எங்கள் வீட்டில் சுப காரியங்கள் அரங்கேறட்டும், நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் நிலைக்கட்டும், இந்த வீட்டில் வசிப்பவர்களை துக்கமும் துன்பமும் அண்டாமல் காத்திட உன்னை வேண்டுகிறேன்.

இதையும் படிக்கலாமே:
நடக்கப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி பெற உதவும் காளி மந்திரம்

English Overview:
Here we have daily vilakku poojai mantra in Tamil. If we chant this mantra during evening time after lightning the lamp then we get grace from of the God in the lamp.