விளக்கில் எரியும் எண்ணெய் வீணாக கூடாது! அப்படின்னா அதை என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

mahalakshmi-vilakku
- Advertisement -

பொதுவாக பூஜை அறையில் ஏற்றும் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டுமே ஊற்றி ஏற்ற வேண்டும் என்பது சாஸ்திரம் ஆகும். ஒரு எண்ணெயுடன் இன்னொரு எண்ணெய் கலந்து அந்த எண்ணெயை, நம் வீட்டுப் பூஜை அறையில் இருக்கும் விளக்கில் ஊற்றி ஏற்றக் கூடாது. பஞ்ச தீப எண்ணெய் கோவிலுக்கு பயன்படுத்தலாம். ஆனால் வீட்டில் நல்லெண்ணெய் மற்றும் நெய் கொண்டு தீபம் ஏற்றினால் சகல, சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பது நியதி. இந்த வகையில் விளக்கில் இருக்கும் எண்ணெய் மீந்து விட்டால் அதை என்ன செய்யலாம்? என்பதை ஆன்மீக ரீதியாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

vilaku

முதலில் விளக்கை ஏற்றும் பொழுது நேரடியாக வத்திப்பெட்டியை திறந்து வத்திக்குச்சியால் பிரதான தீபத்தை ஏற்றக் கூடாது. தீபம் ஏற்றுவதற்கு முன்னர் துணை தீபமாக இன்னொரு ஒரு தீபத்தை வைத்திருக்க வேண்டும். இதற்கென தனியாக ஒரு விளக்கு அல்லது அகல் விளக்கு கூட நீங்கள் பராமரித்து வைக்கலாம். அந்த விளக்கை முதலில் ஏற்றி விட்டு பின்னர் அந்த விளக்கின் ஜோதியை கொண்டே பிரதான தீபத்தை ஏற்ற வேண்டும். பிரதான விளக்கு காமாட்சி அம்மன் விளக்கு அல்லது குத்து விளக்காக இருக்க வேண்டும்.

- Advertisement -

நீங்கள் திரியை சரியாக தீபத்தில் முறுக்கி எரியும் இடத்தை சற்று வளைத்து மேல்நோக்கி விடடால் நன்கு சுடர் விட்டு எரியும். முழு எண்ணெயும் காலியாகும் வரை நின்று எரியும். அதே போல திரியும் கருகி போகாது, அதில் இருக்கும் எண்ணையும் பச்சை நிறத்தில் மாறிப் போகாது. ஆனால் திரியை சரியாக போட தெரியாதவர்களுக்கு இந்த விஷயங்களெல்லாம் கட்டாயம் நடக்கும்.

kamatchi vilakku

விளக்கில் இருக்கும் எண்ணெயானது எக்காரணம் கொண்டும் பச்சை நிறத்தில் மாறக் கூடாது எனவே அதில் சற்று கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். அப்படி நிறம் மாறும் முன்னரே அதனை நன்கு துலக்கி புது எண்ணெய் ஊற்றி தீபமேற்றி விடுங்கள். திரியை சரியாகப் போடவில்லை , தீபத்தில் இருக்கும் எண்ணெய் மீதி ஆகி விட்டது அதற்குள் திரியும் அணைந்து விட்டது என்றால் அந்த எண்ணையை மீண்டும் உபயோகப்படுத்தக் கூடாது.

- Advertisement -

சிலர் அதனை வேறு ஒரு பாட்டிலில் சேகரித்து பின்னர் அதே எண்ணையை திரும்பவும் விளக்கில் ஊற்றி ஏற்றுவார்கள். இது போல் செய்யவே கூடாது. நீங்கள் அந்த எண்ணையை உங்கள் வீட்டில் கதவு, கேட், தாழ்ப்பாள் அல்லது இரும்பு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பொருளுக்கு துரு பிடிக்காமல் இருக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களில் சனீஸ்வர பகவான் செலுத்துகிறார் எனவே இந்த எண்ணெயை அங்கு தாராளமாக பயன்படுத்தலாம் இதனால் நிறைய நன்மைகள் நடக்கும்.

deepam

தீபத்தில் எரியும் ஜோதியை காற்றால் எப்பொழுதும் அணைக்கக் கூடாது. வாயால் ஊதி அணைப்பதும், கையை விசிறி அணைப்பது போன்ற விஷயங்களை செய்தால் தரித்திரம் உண்டாகும் எனவே இது போன்ற செயல்களை தவறியும் செய்யாதீர்கள். விளக்கை அணைக்கும் பொழுது பால், தேன், நெய் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம் அல்லது மலரால் அணைக்கலாம். எந்த காரணம் கொண்டும் விளக்கில் இருக்கும் எண்ணெய் தானாகவே தீர்ந்து அந்த ஜோதியானது துடிதுடித்து அணையக் கூடாது. அதற்கு முன்னரே நீங்கள் மலை ஏற்றி விட வேண்டும். மீந்து போன இந்த எண்ணெயை வேறு வழியில் பயன்படுத்த விரும்பாதவர்கள் அதனை சேகரித்து பாதுகாப்பான ஏதாவது ஒரு இடத்தில் கொண்டு போய் ஊற்றி விடலாம். ஆனால் வீட்டில் எந்த இடங்களிலும் அதனை ஊற்றாதீர்கள்.

- Advertisement -