தினமும் விளக்கேற்றுகையில் இதை கூறினால் அதிஷ்டம் வந்து சேரும்

vilakku

தினமும் நாம் விளக்கேற்றிய பிறகு கீழே உள்ள விளக்கு மந்திரத்தை கூறுவதன் பயனாக அனைத்து விதமான மங்களுங்களும் அதிஷ்டங்களும் நமது இல்லம் தேடி வரும். கோவிலில் நாம் விளக்கேற்றும் சமயத்திலும் இந்த மந்திரத்தை கூறலாம். இதோ அந்த அற்புதமான விளக்கு மந்திரம் உங்களுக்காக.

kamatchi vilakku

விளக்கு மந்திரம்
விளக்கே, திரு விளக்கே, வேந்தன் உடன் பிறப்பே
ஜோதி மணி விளக்கே ஸ்ரீதேவி, பொன்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாட்சி தாயாரே

பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு
குளம் போல எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றினேன்
ஏற்றினேன் திருவிளக்கு எந்தன் குடி விளங்க
வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் ஜோதியுள்ள மாதாவை கண்டு மகிழ்ந்தேன் யான்

மாங்கல்ய பிச்சை மடிபிச்சை தாருமம்மா ,
சந்தான பிச்சையுடன் தனம்களும் தாருமம்மா
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா ,
பட்டி நிறைய பால் பசுவை தாருமம்மா
கொட்டகை நிறைய குதிரைகள் தாருமம்மா

புகழுடம்பை தாருமம்மா , பக்கத்திலே நில்லுமம்மா
சேவித்து எழுந்திருந்தேன் , தேவி வடிவம் கண்டேன் ,
வஜ்ரா கிரீடம் கண்டேன், வைடூர்ய மேனி கண்டேன்
முது பச்சை கண்டேன் முழு பச்சை மாலை கண்டேன் ,
சவுரி முடி கண்டேன் , தாழை மடல் சூடக்கண்டேன்

- Advertisement -

சாந்துடன் நெற்றி கண்டேன் , தாயார் வடிவம் கண்டேன்
கமல திருமுகத்தில் கஸ்தூரி பொட்டு கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலை அசைய கண்டேன்
கை வளையல் கலகலவென கணையாழி மின்ன கண்டேன்
காலிற் சிலம்பு கண்டேன் , காலாயிபீலி கண்டேன்

மங்கள நாயகியை மனம் குளிர கண்டு மகிழ்ந்தேன் நான்
அன்னையே அரும்துனையே , அருகிருந்து காருமம்மா
வந்த வினையகற்றி மஹா பாக்கியம் தாருமம்மா
தாயாரே சரணம் என்றேன் , உன் தாளடியில் நான் பணிந்தேன்

Kamatchi vilakku

இதையும் படிக்கலாமே:
பாவங்கள் நீங்கி மகிழ்ச்சி பெற உதவும் ருத்ர காயத்ரி மந்திரம்

அஷ்ட லட்சுமிகளையும் மனதில் நினைத்தவாறு இந்த மந்திரத்தை கூறுவது சிறந்தது. வீட்டில் விளக்கு பூஜை செய்யும் சமயத்திலும் இந்த மந்திரத்தை கூறலாம்.