பாவங்கள் நீங்கி மகிழ்ச்சி பெற உதவும் ருத்ர காயத்ரி மந்திரம்

sivan-1

மனிதர்கள் செய்யும் பாவ காரிங்களுக்கான வினையை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று இறைவன் விதியை வகுத்துள்ளார். ஆனால் அவ்விதியை வகுத்த இறைவனின் பாதங்களில் சரணாகதி ஆவதன் பயனாக அவர் நமது பாவங்களை மன்னித்து நமக்கு நல்லவாழ்வை அளிக்கிறார் என்பதே உண்மை. அந்த வகையில் நாம் செய்த பாவங்களை நீக்கி இன்பத்தை தரவல்ல சிவன் மந்திரம் அதை பார்ப்போம் வாருங்கள்.

shivan

மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

பொது பொருள்:
மும்மூர்த்திகளில் முதற்கடவுளான மகாதேவா, உங்களது அருட்பார்வை கொண்டு என்னை ஆசிர்வதித்து எனது அறிவுக்கண்ணை திறக்க வேண்டுகிறேன்.

shiva

மேலே உள்ள சம்ஸ்கிருத மந்திரத்தை கூற இயலாதவர்கள் கீழே உள்ள தமிழ் மந்திரத்தை கூறலாம்.

- Advertisement -

சிவன் மந்திரம்:

நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

lingam

மேலே உள்ள ஏதேனும் ஒரு மந்திரத்தை தினம் தோறும் 108 முறை கூறுவதன் பலனாக நமது பாவ வினைகள் தீரும் அதோடு நமது அறிவு மேம்படும். சிவனுக்கு உகந்த நாள் திங்கட்கிழமை என்பதால், ஏதுனும் ஒரு திங்கட்கிழமை அன்று சிவன் சந்நிதிக்கு சென்று மகாதேவரிடம் மனமார பிராத்தனை செய்து பின் இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு அதன் பிறகு தினம் தோறும் சொல்வது சாலச்சிறந்தது.

இதையும் படிக்கலாமே:
வறுமை நீங்கி மங்களம் பெறுக உதவும் மந்திரம்

சிவன் மந்திரங்கள், பெருமாள் மந்திரங்கள், அம்மன் மந்திரங்கள் என பல மந்திரங்களை தினம் தினம் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.