வெள்ளி, செவ்வாய், விளக்கு வைத்த பிறகு இதை செய்ய தவறும் வீட்டில் செல்வம் தங்காமல் போவதுடன், குடும்பத்திற்கே தீராத பாவம் வந்து சேரும்.

- Advertisement -

மனிதன் தன் வாழ்நாளில் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கை தெய்வ காரியத்திற்கும் ஒரு பங்கை இல்லாதவர்களுக்கு உணவளிக்கவும் கொடுக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இதை எந்த அளவிற்கு பின்பற்றுகிறோம் என்பது அவரவர் மனதை பொறுத்து, உதவி என்று ஒருவர் நம்மை நாடி வரும் அவர் கேட்கும் அளவிற்கு உதவி செய்ய முடியவில்லை என்றால் நம்மால் இயன்ற சிறு உதவியாவது நிச்சயம் செய்ய வேண்டும். பிறருக்கு உதவி செய்வது என்பது குணம் மட்டுமல்ல இறைவன் நமக்கு அளிக்கும் வரமும் கூட, அப்படி செய்யும் உதவிக்கு நேரம் காலம் பார்க்க கூடாது அதை பற்றி தான் இப்போது இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நாம் எல்லோரும் கடை பிடிக்கும் ஒரு விஷயம் வெள்ளி செவ்வாயில் பணமோ, பொருளோ யாருக்கும் கொடுக்கக் கூடாது. விளக்கு வைத்த பிறகு எதையும் குடுக்க கூடாது ,சில நேரங்களில் கொடுக்கல், வாங்கல் வைக்கக் கூடாது. லட்சுமி நம் வீட்டில் வாசம் செய்ய இது போன்ற சில முறைகளை கடைப்பிடிப்பது வழக்கம் தான் இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் சில உதவிகளுக்கு இந்த விதிமுறைகள் எதுவும் கிடையாது.

- Advertisement -

நமக்குத் தெரிந்தவர் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை, மருத்துவமனை செல்ல உதவி கேட்டு வந்தாலோ, அடுத்த வேலை சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் உங்களிடம் பசி என்று வந்தாலோ, அன்று வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, விளக்கு வைத்த நேரம் என்று இதையெல்லாம் பார்த்து அவர்களுக்கு நாம் உதவி செய்யாமல் இருப்பது தவறை என்பதை விட மிகப்பெரிய பாவம் ஆகும்.

இல்லாதவருக்கு, பசித்தவருக்கு செய்யும் உதவி கடவுளுக்கே நேரடியாக நாம் செய்ததற்கு சமம். இதை தான் நம் சாஸ்திரங்களும் புராணங்களும் கூறுகிறது. இது போன்ற காலங்களில் நாம் அவர்களுக்கு உதவி செய்யாமல் தட்டிக் கழிக்கவே கூடாது. இப்படி உதவி செய்யாமல் இருப்பவர் வீட்டில் நாம் இருக்கவே கூடாது என்று மகாலட்சுமி நிரந்தரமாகவே நம்மை விட்டு நீங்கி விடுவதோடு, எதை நீங்கள் இல்லை என்று சொன்னேர்களோ அது உங்களுக்கே இல்லாமல் போய் விடும். நீங்களே உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் சேர்த்து பாவத்தையும் சம்பாதித்து விடுவீர்கள்.

- Advertisement -

அப்படியானால் வெள்ளிச் செவ்வாயில் விளக்கு வைத்த பிறகு எப்படி வீட்டில் உள்ள பொருட்களை கொடுப்பது பணத்தை கொடுப்பது என்ற கேள்விகள் உங்களுக்கு எழுவது நியாயம் தான். இதற்கும் சாஸ்திரத்தில் சில விதிமுறைகள் வழிகள் உண்டு. இந்த நாட்களில் நீங்கள் ஏதாவது கொடுத்தால் அதாவது அரிசி, பருப்பு என்று எதையாவது கொடுக்கிறீர்கள் என்றால் அவர்களிடம் கொடுத்த பிறகு ஒரு கைப்பிடி அரிசியை மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உதவி செய்தது போலவும் இருக்கும் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் குறையாது. இதே போல தான் பணத்தை கொடுத்த பிறகு அவர்களிடம் இருந்து ஒரு ரூபாய் நீங்கள் திரும்பவும் வாங்கி கொள்ளுங்கள்.

உதவி என்று வந்து நிற்பவரின் சூழ்நிலையை நீங்கள் புரிந்து கொண்டு செய்யுங்கள். எதுவுமே இல்லை நீங்கள் செய்து தான் ஆக வேண்டும் என்று இருக்கும் சமயத்தில் இதை சின்ன விஷயத்தை செய்த பின் தயங்காமல், கொடுக்கலாம். சிலர் வீண் செலவிற்காகவோ, வீண் ஆடம்பரத்திற்காகவோ, தேவையில்லாமலோ வந்து கேட்கும் போது அப்போது நீங்கள் மறுத்து விடலாம் அதில் தவறு ஒன்றும் இல்லை.

இந்த விஷயத்தை கவனத்தில் வைத்து உதவி செய்வதை கடைபிடியுங்கள். தான தர்மங்களும் இயலாதவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி உங்களை மட்டுமல்ல உங்கள் சந்ததியினரை கூட நல்ல நிலைமையில் வாழ வைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

- Advertisement -