வீட்டில் விளக்கு ஏற்றிய பின்பு, பெண்கள் இந்த தவறை செய்தால், வீட்டில் இருக்கும் சுபிட்சம் வீட்டை விட்டு வெளியே சென்று விடும்.

women-hanuman

சுபிட்சம், என்ற இந்த ஒரு வார்த்தை நம்முடைய வீட்டிற்கு நிறைவான அருளாசியை கொடுக்கும். வீடு என்று இருந்தால், அது சுபிட்சம் நிறைந்த வீடாகத் தான் இருக்க வேண்டும். இந்த வார்த்தையை கேட்கும் போதே ஒரு நேர்மறை ஆற்றல் நமக்கு கிடைக்கின்றது. அந்த வார்த்தைக்கு உண்டான பலனை நம்முடைய இல்லறமும், நம்முடைய குடும்பமும் பெற்றுவிட்டால் போதும். விடு, கோவில் ஆகவே இருக்கும். சரி வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டில் சுபிட்சத்தை நிலைநிறுத்த செய்ய வேண்டியவை என்ன, செய்யக் கூடாதவை என்ன, என்பதைப் பற்றிய சில ஆன்மீக ரீதியான தகவல்களை பற்றித் தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

vilakku-pray

வீட்டில் சுபிட்சம் நிலைத்திருக்க முதலில் பெண்கள் செய்ய வேண்டிய விஷயம், பூஜை அறையில் தீப வழிபாடு. விளக்கு ஏற்றி வைத்தால் கஷ்டமும் வீட்டை விட்டு விலகிவிடும். கஷ்டங்களை விளக்கி வைக்கவே, வீட்டில் விளக்கு ஏற்றப்படுகின்றது. வீடு எப்போதும் வாசனையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சுபிட்சம் தானாக நம் வீட்டில் குடி வரும். இது முதல் விஷயம். அடுத்தபடியாக விளக்கு ஏற்றி வைத்த பின்பு, வீட்டில் இருக்கும் சில பெண்கள் செய்யக்கூடிய தவறு இது.

காலை தீபம் ஏற்ற முடியாத பெண்கள் கூட, மாலை 6 மணி அளவில் கட்டாயமாக வீட்டில் தீபம் ஏற்றி வைப்பார்கள். ஆனால் தீபம் ஏற்றி வைத்தவுடன் பூஜை அறையில் அமர்ந்து இறைவனை மனதார வழிபடுவது கிடையாது. இறை மந்திரங்களை உச்சரிப்பது கிடையாது. தீபத்தை ஏற்றி வைத்து விட்டு, தீபத்தை ஏற்றி வைத்த கையோடு வீட்டிற்கு வெளியே சென்றுவிட வேண்டியது.

kamatchi-vilakku

குறிப்பாக, வீட்டு வாசலில் அமர்ந்து, அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களுடன் கூடி தேவையற்ற விஷயங்களைப் பேசுவது, மிக மிக தவறான ஒரு விஷயம். விளக்கு ஏற்றி விட்டு, வீட்டு வாசல் படியில் அமர்ந்து தேவையற்ற விஷயங்களை வீட்டுப் பெண்கள் பேசவே கூடாது. தீபம் ஏற்றி வைத்துவிட்டு நாம் வீட்டிற்கு வெளியே செல்லும்போது, நம்மோடு சேர்ந்து நம் வீட்டு மகாலட்சுமியும், சுபிட்சமும், நம் வீட்டை விட்டு வெளியேறுவதாக சொல்லப்பட்டுள்ளது.

ஏனென்றால் ஒரு வீட்டின் லக்ஷ்மி சொரூபமே அந்த வீட்டுப் பெண்கள்தான். தீபம் ஏற்றி வைத்துவிட்டு அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதே சிறந்தது. அதாவது 6 மணி அளவில் தீபம் ஏற்றி வைத்து விட்டால் ஒரு 6.30 மணி வரைக்குமாவது வீட்டுக்குள் இருங்கள். எல்லா பெண்களும் இதை செய்கிறார்கள் என்று சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த தவறு நடக்கின்றது.

deepam

இறைவழிபாட்டை மனதார செய்து முடித்துவிட்டு, வெளியே செல்வதில் தவறு ஒன்றும் கிடையாது. அப்படியே வெளியே சென்றாலும் அடுத்தவர்களுடைய கஷ்டம், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உடைய கஷ்டம், மற்றவர்களை புறம் பேசுவது, உங்களுடைய கஷ்டங்களை அடுத்தவர்களிடம் கூறி புலம்புவது போன்ற விஷயங்களில் வீட்டுப் பெண்கள் ஈடுபடக் கூடாது. அது அவர்களுடைய வீட்டிற்கு கஷ்டத்தைக் கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.