விளக்கேற்றும் பொழுது உங்கள் கை இப்படி இருந்தால் வேண்டிய கோரிக்கை உடனே நிறைவேறுமாம் தெரியுமா? வீட்டில் பெண்கள் தான் விளக்கேற்ற வேண்டுமா என்ன?

- Advertisement -

ஒரு குடும்பத்தில் விளக்கு ஏற்றுபவள் பெண்ணாகவே இருக்கின்றாள். பெண்கள் இல்லாத இல்லங்களில் சில சமயங்களில் மட்டுமே ஆண்கள் விளக்கேற்றுவதை பார்க்க முடிகிறது. விளக்கேற்றும் பொழுது உங்களுடைய கை இப்படி இருந்தால் நீங்கள் வேண்டிய கோரிக்கை உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். நம் முன்னோர்கள் காலம் காலமாக இதைத் தான் கடைப்பிடித்தார்கள். அது என்ன? ஆண்கள் வீட்டில் விளக்கேற்றலாமா? கூடாதா? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

விளக்கேற்றுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சுத்த பத்தமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். குளித்து முடித்து பூஜை அறையை சுத்தமாக வைத்திருந்து விளக்கேற்றினால் பலன்களும் அதிகரிக்கும். ஆண், பெண் என்கிற எந்த பாகுபாடும் கடவுளுக்கு கிடையாது. பெரும்பாலும் பெண்கள் தான் விளக்கேற்றி வழிபடுகின்றனர். அதனால் விளக்கேற்றும் உரிமை அவர்களுக்கே உரியது என்று நினைப்பது தவறு.

- Advertisement -

அதிகாலையே எழுந்து குளித்து முடித்து கைகளில் மஞ்சளுடன் விளக்கேற்றுபவர்கள் வேண்டிய கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அந்த காலங்களில் எல்லாம் மஞ்சள் பூசி குளிக்காத பெண்களே கிடையாது. இவர்களுக்கு நல்ல கைராசி இருக்கும். சமைக்கும் உணவும் ருசிக்கும், செய்யும் செயலும் ஜெயிக்கும். மஞ்சள் பூசின கைக்கு அந்த அளவிற்கு தனி மகத்துவம் வாய்ந்த பலன்கள் உண்டு. அதனால் தான் அந்த காலத்தில் எல்லாம் பெண்கள் தினந்தோறும் மஞ்சளை கைகளால் தேய்த்து முகத்தில் பூசி குளித்து வந்தனர். இதனால் முகமும் இளமையுடன், மாசு, மரு இல்லாமல் ஜொலிக்கும். கைகளில் பதிந்துள்ள இந்த மஞ்சள் புண்ணியத்தை சேர்ப்பவையாக இருக்கும்.

இதே கைகளுடன் பூஜை அறைக்கு சென்று விளக்கில் எண்ணெய் ஊற்றி, திரியை தொட்டு, எண்ணெயில் தோய்த்து நெருப்பினை இட்டு தீப ஜோதியை சுடர் விட்டு எறிய செய்து, அதில் இறைவனை தரிசனம் செய்வார்கள். இப்படி செய்யும் பொழுது அவர்கள் வேண்டிய வேண்டுதல் கண்டிப்பாக பலிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் இன்று பூஜை செய்வது என்பது கடமைக்கு என்று ஆகிவிட்டது. வெள்ளிக்கிழமை வந்துவிட்டது என்று பக்தி மனதில் இல்லாவிட்டால் கூட கடமைக்கே என்று விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் உங்களுக்கு எந்த விதமான பலன்களும் கிடைக்கப் போவது கிடையாது. உண்மையான பக்தியுடன் பூஜித்தால் மட்டுமே நிறைவான பலன்கள் கிடைக்கும்.

- Advertisement -

ஆண், பெண் பாகுப்பாடு விளக்கு ஏற்றும் பொழுது கிடையாது. ஆனால் விளக்கு ஏற்றும் பொழுது எவராக இருந்தாலும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆண்கள் எல்லா நேரங்களிலும் சுத்த பத்தத்துடன் இருப்பார்கள் என்று கூற முடியாது. அவர்கள் வேலை செய்துவிட்டு மிகுந்த சோர்வுடனும் வருவார்கள். இதனால் பக்தி என்பது அவர்களுடைய மனதில் அந்த சமயத்தில் குறைவாகத்தான் இருக்கும் என்கிற காரணத்தினால் மட்டுமே ஆண்கள் விளக்கு ஏற்றுவதை தவிர்க்க சொல்கின்றனர்.

இதையும் படிக்கலாமே:
அதிர்ஷ்ட தேவதை எப்போதும் உங்கள் வசமே இருக்க வேண்டும் என்றால், அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் இந்த பொருட்களை எல்லாம் உங்கள் கையால் பிறருக்கு தருவதோ வாங்குவதோ கூடாது.

இது பெண்களுக்கும் பொருந்தும். முழுமையான பக்தியுடன் இறைவனை உணர்ந்து பூஜை செய்யும் பொழுது பலன்களும் அதிகரிக்கிறது. கை நிறைய வளையல் அணிந்து கொண்டு, சுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு, தலையில் கொஞ்சம் போல பூவை வைத்துக் கொண்டு, மஞ்சள் கைகளுடன் விளக்கேற்றிப் பாருங்கள், வேண்டிய வரம் எல்லாம் உங்களைத் தேடி வந்து சேரும்.

- Advertisement -