விளக்கேற்றும் திரியை விளக்கு எரிந்து முடிந்ததும் தூக்கி மட்டும் போட்டு விடாதீர்கள்! பின்னர் அதை என்னதான் செய்வது?

vilakku-thiri
- Advertisement -

தினமும் விளக்கேற்றுபவர்களுக்கு அந்தத் திரியை என்ன செய்ய வேண்டும்? என்கிற சந்தேகம் நிச்சயம் இருக்கும். இதையே வாரம் ஒருமுறை ஏற்றுபவர்கள் ஒரு சிலர் அப்படியே விட்டு விடுவதும் உண்டு. விளக்கு ஏற்றிய திரியை அப்படியே விட்டு விட்டால் அதன் நிறம் பச்சை நிறமாக மாறிவிடும். இது போல் திரி பச்சை நிறமாக மாறினால் வீட்டிற்கு அவ்வளவு நல்லதல்ல. வாரம் ஒருமுறை விளக்கேற்றும் போது கட்டாயம் விளக்கினை தேய்த்து விட்டு ஏற்றுவது நல்லது. இல்லை என்றால் மறுவாரம் நீங்கள் பார்க்கும் பொழுது அந்த எண்ணெய் திரியுடன் சேர்ந்து பச்சை நிறமாக மாறி இருக்கும்.

kuthu-vilakku

இது வீட்டில் பண தடையை உண்டாக்கும் ஒரு செயலாகும். நிறைய பேருக்கு இது தெரிவதில்லை. அதே போல விளக்கு ஏற்றிய திரியை எந்த காரணம் கொண்டும் எரிந்து கருகி விடுமாறு செய்துவிடக் கூடாது. திரி கருகினால் வீட்டில் நிச்சயம் பிரச்சனைகள் வரும் என்பார்கள். பின்னர் அந்த திரியை என்னதான் செய்வது? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

திரி கருகும் முன், எண்ணெய் காலியாகும் முன் மலர்களால் நெருப்பினை அணைத்து விடுவது தான் நல்லது. வாயால் ஊத கூடாது. ஒற்றை திரியாக போடக் கூடாது. எப்போதும் இரண்டு திரிகளை இணைத்து தான் போட வேண்டும். மீண்டும் மறுநாள் விளக்கேற்றும் பொழுது அதே திரியில் ஏற்றலாம் தவறில்லை. திரி கருகி விட்டால் அல்லது நிறம் மாறி விட்டால் மட்டும் அதை மாற்றினால் போதுமானது. தினமும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த திரிகளை குப்பையில் கட்டாயம் வீசக்கூடாது. திரியை குப்பையில் போட்டால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியே சென்று விடுவாள். இந்த தவறையும் ஒருபோதும் செய்யாதீர்கள்.

vilakku1

நம் ஜாதகத்தில் நமக்கு நல்ல நேரம் இருந்தாலும் நம் வீட்டில் நல்லது நடக்கவில்லை என்றால், நீங்கள் செய்யும் இந்த ஒரு சில விஷயங்களும் காரணமாக இருக்கும் என்பதை மறக்காதீர்கள். நம் முன்னோர்கள் ஒவ்வொன்றும் சொல்லி வைத்தது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னாலும் ஆழமான கருத்துகளும், நல்லவைகளும் நிச்சயம் இருக்கும்.

- Advertisement -

தினமும் திரியை மாற்றுபவர்களாக இருந்தாலும், அல்லது வாரம் ஒரு முறை மாற்றினாலும் திரிகளை சேர்த்து வைக்க வேண்டும். தேவையில்லாத ஏதாவது ஒரு பிளாஸ்டிக் பவுலில் சேர்த்து வைத்து வாருங்கள். கொஞ்சம் திரிகள் சேர்ந்ததும் வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு முகமாக பார்த்து உட்கார வையுங்கள். இதனை இரவு சாப்பிட்டு முடித்த பின்னர் தூங்க செல்லும் முன் செய்வது நல்லது. அந்த திரிகளை தூப காலில் போட்டு கொள்ளுங்கள். பின்னர் அப்படியே அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மும்முறை மற்றும் இடமிருந்து வலமாக மும்முறை திருஷ்டி கழித்து விடுங்கள்.

dhupam

திருஷ்டி கழித்து முடிந்ததும் வீட்டு வாசலில் வைத்து அதனை கொளுத்தி விடுங்கள். முழுக்க எரிந்து முடிந்ததும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த நெருப்பில் பஸ்பமாகிவிடும். உங்களை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் எல்லாம் இந்த தீயில் வெந்துவிடும். திரிகள் கருகி கரியாகி முடிந்ததும் அதனை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். அல்லது தண்ணீர் ஊற்றி சமையலறை சிங்கிள் ஓட விட்டு விடுங்கள். இதனால் உங்களுக்கு இருக்கும் அத்தனை கஷ்டங்களும் தீரும். வீட்டில் நேர்மறை ஆற்றல் ஊடுருவும். நல்ல எண்ணங்களும், சிந்தனைகளும் மலரும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். இனி ஒருபோதும் திரியை தூக்கி எறியாதீர்கள் இது போல் செய்து பயனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடலாமா? போடக்கூடாதா? உண்மை என்ன? எந்தெந்த நாளில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -