விளம்பி வருடத்தில் சுனாமி வரலாம் – பஞ்சாங்கம் கூறுவது என்ன ? ஒரு பார்வை

vilambi panchangam 2018
- Advertisement -

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை காலை 6 மணி 55 நிமிடம் அளவில் கிருஷ்ண பட்சம், திரயோதசி திதியில் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறக்கிறது விளம்பி வருடம். 2018 தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும், என்னென்ன முக்கிய நிகழ்வுகள் நடக்கும் என்று விளம்பி வருட பஞ்சாங்கம் கூறும் சில தகவல்களை சுருக்கமாக இங்கு பார்ப்போம் வாருங்கள்.

vilambi panchangam 2018

விளம்பி வருட பஞ்சாங்கப்படி தமிழகத்தில் நல்லதொரு விளைச்சல் இருக்கும் என்றும் இதன் காரணமாக விவசாய பொருட்களின் விலை குறையும் என்று கூறப்படுகிறது. பால் உற்பத்தி அதிக அளவில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு விளம்பி வருடத்தில் மழை நன்றாக இருக்கும் என்றும் கிட்டத்தட்ட 4 புயல்கள் தமிழகத்தை தாக்கும் என்றும் ஆற்காடு பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 9 புயல்கள் உருவாகும் என்றும் ஆனால் அதில் 5 புயல்கள் பலவீனமடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதிக மழை பொழிவின் காரணமாக அணைகள் மற்றும் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு தமிழகத்திலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மலைகளில் நல்ல மழை இருக்கும் என்றும் குறிப்பாக ஆடி ஆவணி மாதங்களில் தொடர்ச்சியான மழை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. வழக்கம் போல டிசம்பர் மாதத்தில் மிக பெரிய இயற்கை சீற்றம் ஏற்ப்படும் என்றும் இந்த இயற்கை சீற்றமானது உலக அளவில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு இந்திய தேசத்தின் சீரதோசநிலையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

vilambi panchangam 2018

விளம்பி வருடத்தில் மழை எப்படி அதிகமோ அதே போல சூறாவெளி காற்றும் அதிக அளவில் வீசும் என்று கூறப்பட்டுள்ளது. வைகாசி மாதத்தில் இடி மின்னல் அதிகமாக இருக்கும் என்றும் இதனால் மின் காந்த அலைகளில் இயங்கும் பொருட்களில் கோளாறு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் கடல் சீற்றத்தோடு காணப்படுவதோடு கடல் நீர் சிறிதளவு ஊருக்குள் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.புரட்டாசி மாதத்தில் ஏற்படும் சூறாவெளியால் செல்போன் டவர் போன்ற சாதனங்கள் பழுதடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

vilambi panchangam 2018

விளம்பி வருடத்தில் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தமிழகத்தில் உள்ள சில மலைப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. விளம்பி ஆண்டின் இறுதியில், அதோவது 2019 ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் மிக பெரிய நடிகர் ஒருவர் அரசியல் கட்சியை அறிவிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. பஞ்சாங்க குறிப்புகள் சில நேரம் நடப்பது கிடையாது ஆனால் சில நேரம் சொன்னது சொன்னபடியே நடக்கும். 2017 ஆம் ஆண்டில் பஞ்சாங்கத்தில் கூறியது போன்று பல நிகழ்வுகள் நடந்துள்ளதை நாம் பார்த்துள்ளோம். ஆகையால் பஞ்சாங்கத்தை முற்றிலும் புறக்கணிக்காமல் அதையும் கருத்தில் கொள்வது அவசியம்.

2018 தமிழ் புத்தாண்டு ராசி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

English Overview:
Vilambi Tamil panchangam 2018 is explained briefly above. In general there will be good cultivation and increase in milk product during Vilambi year. Apart from that there will be heavy rain and thunderstorm as specified in Vilambi Tamil panchangam 2018

- Advertisement -