தெரிந்தும், தெரியாமலும் கூட இந்த ஒரு விஷயத்தை வெளியில் சொல்லவே கூடாது தெரியுமா? இதை வெளியில் சொன்னால் ஒரு பலனும் இருக்காது!

astro-silent
- Advertisement -

நாம் வாழ்வில் செய்யக்கூடிய தவறுகளில், சிறு சிறு விஷயங்களில் இதுவும் ஒன்று! எந்த சில விஷயங்களை வெளியில் சொல்லக்கூடாதோ, அதை கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில் தம்பட்டம் அடித்து சொல்லி விடுவோம். இதனால் நமக்கு வரவேண்டிய பலன்களும் வராமல் போய்விடும். அப்படியான விஷயங்களில் இது என்ன விஷயம்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த குறிப்புகளின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகின்றோம்.

‘பொதுவாக வலது கை கொடுப்பது, இடது கைக்கு தெரிய கூடாது’ என்று கூறுவார்கள். வலது கையால் தானம் செய்ய வேண்டும், அது நம்முடைய இடது கைக்கு கூட தெரியாமல் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். அப்படி இருக்கும் பொழுது நாம் செய்யும் தானம் அல்லது தர்மங்கள் பற்றிய விஷயங்களை வெளியில் செல்வது எந்த வகையில் சரியானது?

- Advertisement -

நாம் செய்யும் தானம் அல்லது தர்மம் புண்ணியத்தை சேர்ப்பதற்காக செய்யக் கடவது ஆகும். நீங்கள் யாராவது ஒருவருக்கு நன்கொடை கொடுக்கிறீர்கள், கோவிலுக்கு நன்கொடை செய்கிறீர்கள் என்றால் அதை எவ்வளவு செய்கிறீர்கள்? செய்கிறீர்கள் என்பதையே முதலில் நீங்கள் வெளியில் பகிர்ந்து கொள்ள கூடாது! இதை நீங்கள் வெளியில் சொல்வதால் செய்த பலன் பறிபோய்விடும் என்கிறது சாஸ்திரங்கள்!

அதே போல நீங்கள் ஒருவருக்கு உதவி செய்கிறீர்கள் என்றால், அதை எந்த இடத்திலும் சொல்லிக் காட்டக் கூடாது. சொல்லி காட்டினால் அது உதவியே ஆகாது என்பதால் செய்த பலன் அங்கு இருக்காது. இன்றைய காலகட்டங்களில் சொல்லாவிட்டால் யாருக்கும் நம்முடைய அருமை தெரிவதில்லை என்று நினைக்கின்றோம். தெரியாவிட்டால் போகட்டும் ஆனால் நாம் செய்த புண்ணியம் நம்மை ஏழு ஜென்மத்துக்கும் பின் தொடர்வதால் அதைப் பற்றிய கவலையை கொள்ளத் தேவையில்லை.

- Advertisement -

செய்யும் தர்மம், தானம், புண்ணியம் ஆகியவை யாவும் கர்ம பலன்களில் சேர்கிறது. இது நம்மை எப்பொழுதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதனால் செய்தவர்களுக்கு அந்த நன்றி விசுவாசம் இல்லையே என்று கவலைப்படாமல் நம்முடைய மனம் உவந்து நம்மால் முடிந்ததை செய்து கொண்டே இருக்க வேண்டும். இதனால் நமக்கு நன்மைகள் தான் நடக்கும். மேலும் மேலும் அதிர்ஷ்டங்கள் தான் பெருகுமே தவிர பிரச்சனை ஒன்றும் வரப்போவது கிடையாது.

இதையும் படிக்கலாமே:
வடகிழக்கு மூலையில் இந்த ஒரு பொருளை வைத்துப் பாருங்கள். வராத வருமானம், கூட வண்டி நிறைய வீடு தேடி வந்து சேரும்.

யாராவது ஒருவருக்கு பிச்சை இடுகிறீர்கள் என்றால் புண்ணியம் கிடைக்குமே என்று செய்யாமல் அவர் சிரமப்படுகிறார் என்று மனிதாபிமானத்தோடு செய்ய வேண்டுமாம். பணமாக ஒருவருக்கு தானம் செய்வதை விட, அன்னத்தை தானம் செய்து பாருங்கள். அது 100 மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கக்கூடியது. பசி என்று யாராவது வந்தால் அவர்களுக்கு 10 ரூபாய் பிச்சை போடுவது உண்டு. இப்படி செய்யாமல் ஒரு சாப்பாடு பொட்டலத்தை வாங்கி கொடுத்து பாருங்கள், உங்களுக்கு உள்ளேயே ஒரு விதமான நல்ல உணர்வு ஏற்படும். இது தான் புண்ணியத்தின் பலனாக நீங்கள் அடைகிறீர்கள். எனவே இனி செய்த விஷயங்களை வெளியில் தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள். கிடைக்க வேண்டிய பலன்கள் இனி கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்க எதிர்பார்க்காமல் உதவி செய்யுங்கள் போதும்.

- Advertisement -