இறப்பிற்கு முன் ஒருமுறையாவது காசி விஸ்வநாதரை சந்தித்து வந்தால் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று மக்கள் அனைவரும் படையெடுத்துச் செல்லும் காசியின் ரகசியம்

kasi-nagar
- Advertisement -

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் தன்னை அறிந்தும், அறியாமலும் செய்கின்ற பாவங்களுக்கு விமோட்சனம் பெற காசி, இராமேஸ்வரம் போன்ற ஸ்தலங்களுக்கு சென்று வருகின்றனர். அதிலும் வயதானவர்கள் எப்படியாவது இந்த ஸ்தலங்களுக்கு சென்று வந்தால் தனது உயிர் முக்தி அடையும் என்று விரும்பி செல்கின்றனர். இப்படி பாவவிமோட்சனம் கிடைக்கவும், முக்தி அடைவதற்கும் காசிக்கு செல்கின்றனர். இப்படி அனைவரும் காசிக்கு செல்வது ஏன்? காசி நகருக்கு சிவபெருமான் வந்ததன் காரணம் என்ன? இவற்றைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kasi

சிவபெருமான் காசிக்கு வருகை புரிந்ததை சொல்லும் வகையில் இரண்டுவித கதைகள் கூறப்படுகின்றன. அவ்வாறு அக்னியில் தனது உயிரை விட்ட சதியின் உடலை விஷ்ணு பகவான் தனது சக்ராயுதத்தால் பல துண்டுகளாக வெட்டி விடுகிறார். சதியின் உடல் துண்டுகளை சேகரித்த சிவபெருமான் அவற்றை மயான பூமியான காசிக்கு கொண்டுவந்து சதியின் காதில் மந்திரம் ஓதி தீயில் எரிய விடுகிறார்.

- Advertisement -

விஷ்ணு தனது தவறை உணர்ந்து சிவபெருமானிடம் மன்னிப்பு பெற தனது சக்ராயுதத்தால் ஒரு குளத்தை உருவாக்கி அதன் முன் தவம் மேற்கொள்ள ஆரம்பிக்கிறார். அந்த நேரம் சதியின் குண்டலங்களை காணாமல் அதனைத் தேடி வந்த சிவன் விஷ்ணுவிடம் அதைப் பற்றி கேட்க, விஷ்ணு குளத்தை காண்பிக்கிறார். சிவபெருமானும் அந்த குளத்தை எட்டிப் பார்க்க அவரது காதில் இருக்கும் குண்டலங்களும் அந்த குளத்தில் விழுந்து விடுகின்றன. இவ்வாறு சிவபெருமானின் குண்டலமும் சனியின் குண்டலமும் ஒன்று சேர்ந்து ஒரு சிவலிங்கம் உருவாகிறது.

sivan-parvathi

தொடர்ந்து தவம் புரிந்து வந்த விஷ்ணுவின் முன் சிவன் விஸ்வரூபமாய் காட்சி அளிக்கிறார். சிவனிடம் விஷ்ணு தன்னால் இங்கு தோன்றிய இந்த சிவலிங்கத்தை வணங்கும் மக்களுக்கு பாவ விமோட்சனம் கிடைக்க வேண்டும் என்றும், சிவனின் தலையில் இருக்கும் கங்கைநீரை பூமியில் ஓடவிட்டு ஜீவராசிகளின் பாவங்களை தீர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இவ்வாறு சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்து விஷ்ணுவிற்கு ஆசி புரிந்ததால் தான் சிவபெருமான் இங்கு காசி விஸ்வநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

- Advertisement -

சிவபெருமான் காசிக்கு வந்ததற்கு இன்னொரு கதையும் கூறப்படுகிறது. அதாவது சனியின் மறு உருவமாய் பார்வதி தேவி அவதாரம் எடுக்கிறார். பார்வதி தேவியை சிவபெருமான் திருமணம் செய்து கொள்வதற்கு பிரம்மதேவன் மந்திரம் ஓதி திருமணம் நடத்தி வைக்கிறார். சிவபெருமான் நான்கு திசையை நோக்கி இருக்கும் பிரம்மாவின் நான்கு தலைக்கு நான்கு விதமான தட்சனைகளை கொடுக்கிறார். தலைகணம் கொண்ட பிரம்ம தேவர் தனது ஐந்தாவது தலைக்கும் தட்சனை வேண்டுமெனக் கேட்டதனால் கோபமடைந்த சிவபெருமான் அவரது ஐந்தாவது தலையை வெட்டி விடுகிறார்.

Sudarshana vishnu

இவ்வாறு வெட்டி எடுத்த பிரம்மதேவனின் தலை சிவனின் கைகளிலேயே நிரந்தரமாக தங்கி சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொள்கிறது. இதனால் பிச்சாண்டியாக மாறிய சிவன் தினமும் பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கையை மேற்கொள்கிறார். ஆனால் அவர் பிச்சை எடுக்கும் அனைத்து உணவையும் அந்த மண்டை ஓட்டில் இருக்கும் சிறு புழுவே உண்டுவிடுமாம். இவ்வாறு பசியால் வாடிய சிவபெருமானுக்கு விமோட்சனம் கொடுக்கவே பார்வதிதேவி அன்னபூரணியாக காசியில் அவதரிக்கிறார்.

sivan2

இப்படி அனைத்து இடங்களிலும் பிச்சை எடுக்கும் சிவபெருமான் ஒரு நாள் அன்னபூரணியிடம் கையேந்தி பிச்சை எடுத்துள்ளார். அப்பொழுது அன்னபூரணி சாதத்தைக் சிவபெருமானின் கைகளில் கொடுக்கும் முன்னர் அதிலிருந்து சிறிதளவு சாதம் கீழே விழுந்துவிடுகிறது. அதனை உண்பதற்காக மண்டை ஓட்டில் இருக்கும் புழு கீழே விழுகிறது. இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷ விமோட்சனம் கிடைக்கிறது. இவ்வாறு சிவன் பாவ விமோட்சனம் பெற்றதால் நிரந்தரமாக காசியில் தங்கி மக்களின் பாவங்களை தீர்த்து வருகிறார் எனவும் நம்பப்படுகிறது.

- Advertisement -