விநாயகருக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் தெரியுமா ?

vinayagar6

முழு முதற் கடவுளாக இருந்து அனைவரையும் காத்து ரட்சிப்பவர் விநாயக பெருமான். அவருக்கு எதை கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.

vinayagar

தண்ணீர் அபிஷேகம்:
எதையும் வாங்க இயலாதவர்கள் வெறும் தண்ணீரை கொண்டு விநாயகருக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் விலகி மனமானது அமைதி கொள்ளும்.

இளநீர் அபிஷேகம்:
குழப்பமான மனநிலையில் இருந்து விடுபட்டு மனம் அமைதி அடையும். புத்தியில் ஒரு தெளிவு பிறக்கும். துன்பங்கள் பறந்தோடும்.

vinayagar

 

- Advertisement -

சந்தன அபிஷேகம்:
தூய்மையான சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும் அதோடு சூடு சம்மந்தமான உடல் பிணி தீரும்.

நல்லெண்ணெய் அபிஷேகம்:
நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்தால் பக்தி நெறி மேம்படும். மனமானது இறைவனை நாடும்.

vinayagar

தயிர் அபிஷேகம்:
குழந்தை பேரு இல்லாதவர்கள் தயிரை கொண்டு விநாயகருக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

திருநீற்று அபிஷேகம்:
நாம் மிக பெரிய காரியத்தை செய்வதற்கு முன்பு விநாயகருக்கு திருநீறு கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலம் அந்த காரியம் வெற்றி பெரும்.

vinayagar

பால் அபிஷேகம்:
ஜாதக தோஷங்கள் நீங்க விநாயகருக்கு பாலை கொண்டு அபிஷேகம் செய்யலாம்.

மஞ்சள் பொடி அபிஷேகம்:
நம்மை பார்த்து ஒதுங்கிய எதிரிகளை கூட நம் மீது பாசம் கொள்ள செய்யும் மஞ்சள் பொடி அபிஷேகம்.

சொர்ண அபிஷேகம்:
சிறப்பான ஒரு எதிர்காலத்தை தரவல்லது சொர்ண அபிஷேகம்.

vinayagar

அரிசி மாவுப்பொடி அபிஷேகம்:
கடன் தொல்லை உள்ளவர்கள், வீட்டில் பணக்கஷ்டம் உள்ளவர்கள் விநாயகருக்கு அரிசிமாவு கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலம் பணம் சம்மந்தமான தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

இதையும் பார்க்கலாமே:
பக்தர்கள் தீ மிதிக்கும் நேரடி காட்சிகள் – வீடியோ

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், ஆன்மிக கதைகள் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் உரிய பிரத்யேக மந்திரங்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் ஐ டவுன்லோட் செய்யுங்கள்.