வெற்றிலையோடு இந்த 3 பொருட்களை சேர்த்து வைத்தால், வீட்டில் வீண் விரையம் குறையும், பணம் நிரம்பி வழியும்.

vinayagar

நம் கைக்கு வரக்கூடிய வருமானம் வீண் விரயம் ஆகாமல், சுப காரியங்களுக்காக செலவாக வேண்டும். நாம் செய்யக்கூடிய செலவின் மூலம், நமக்கு பலன் இருக்க வேண்டும். பலனே இல்லாமல் வீணாக பணம், வீண் விரையம் ஆகிக்கொண்டே இருக்கிறது என்றால், வீட்டில் வாஸ்து ரீதியாகவோ அல்லது ஜாதகக் கட்டத்தில் கிரகங்களினால் ஏதோ ஒரு தோஷம் உள்ளது என்று தான் அர்த்தம். கண்ணுக்குத் தெரியாது இருக்கும் அந்தத் தோஷங்களை எப்படி சரி செய்வது? வரக்கூடிய வருமானம் கொஞ்சமாக இருந்தாலும் அந்த வருமானம் நமக்கு எந்த வழியில் செலவாகிறது, அந்த வருமானத்தில் இருந்து நாம் எவ்வளவு தொகையை சேமித்து வைக்கிறோம் என்பதில்தான் சாமர்த்தியமே அடங்கியுள்ளது.

kadan

நம் கைக்கு வரக்கூடிய பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க நம் வீட்டில், பணம் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்க, தோஷங்கள் விலக தாந்திரீக ரீதியாக என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய ஒரு சிறிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை செய்வதற்கு செலவும் பெரியதாக ஆகாது. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் முயற்சி செய்து பார்க்கலாம்.

நிச்சயம் இதை விநாயகரின் முன்பாக செய்ய வேண்டும். கட்டாயமாக விநாயகரது திருவுருவப்படம் இல்லாத வீடே இருக்காது. ஒரு விநாயகரின் திருவுருவ படத்தை உங்கள் வீட்டு வரவேற்பறையில் கூட வைத்து இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். பூஜை அறையில் சில பேர் சில தாந்த்ரீக பரிகாரங்கள் செய்யக்கூடாது என்று நினைப்பார்கள். ஆனால் இது விநாயகரை வேண்டி செய்யக்கூடிய வழிபாட்டு பரிகாரம் என்பதால் மனநிறைவோடு தாராளமாக பூஜை அறையிலேயே செய்யலாம்.

vinayagar

காம்பும், நுனியும் சரியாக இருக்கும் இரண்டு வெற்றிலைகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வெற்றிலையில் முழு கொட்டை பாக்கு 1, சிறிய துண்டு பச்சை கற்பூரம் 1, ஒரு ரூபாய் நாணயம் 1, இந்த பொருட்களை வைத்து, அந்த வெற்றிலையைச் சுருட்டி மடித்து ஒரு நூலை போட்டு கட்டி, சிறிய தட்டில் வைத்து, விநாயகர் முன்பு வைத்து விட வேண்டும். (உடைத்த கொட்டைப்பாக்கு வைக்கக்கூடாது. முழு கொட்டைப் பாக்கை பயன்படுத்த வேண்டும்.)

- Advertisement -

விநாயகரின் முன்பு இந்த வெற்றிலை மூட்டையை வைத்து, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட இந்த பரிகாரத்திற்க்கு கிடையாது. இருகைகளை ஏந்தி உங்கள் வீட்டிற்குள் பணக் கஷ்டம், வாஸ்து தோஷம் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷம் எல்லாம் நீங்க வேண்டும் என்று மனதார நம்பிக்கையோடு வேண்டிக் கொண்டாலே போதும். கண்ணுக்குத் தெரியாத கஷ்டங்களை போக்க கூடிய சக்தி விநாயகருக்கு தான் உள்ளது.

pakku

சிறிது நேரம் கிண்ணத்தில் இருக்கும் வெற்றிலை முடிச்சு அப்படியே விநாயகரின் பாதங்களில் இருக்கட்டும். அதன் பின்பு இந்த முடிச்சை எடுத்து நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை இரண்டு நாட்கள் அந்த வெற்றிலை வாடாமல் இருக்கும். இரண்டு நாட்கள் கழித்து வெற்றிலையில் வைத்த ஒரு ரூபாய் நாணயத்தை விநாயகரது உண்டியலில் போட்டு விட வேண்டும். விநாயகர் கோவிலுக்கு சென்று தான் போட வேண்டும்.

vetrilai-astrology

வாடிய வெற்றிலைகளை கால் படாத இடத்தில் போட்டுவிடலாம். பாக்கை மட்டும் இப்படி பரிகாரம் செய்யும் போது மீண்டும் பயன் படுத்திக்கொள்ளலாம். புதியதாக கொட்டை பாக்கு மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இப்படி எத்தனை நாட்களுக்கு ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வாரத்தில் ஒரு நாள் செய்தால் போதும். எந்த கிழமை என்று நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பண விஷயத்தில் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் தெரிந்தால், தொடர்ந்து விநாயகரை நம்பி இந்த பரிகாரத்தை செய்து வரவும்.

pachai-karpooram

வீட்டில் பண கஷ்டம் குறைந்து கொண்டே வரும். பண பெட்டியில் வைக்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு பணம் சேரும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ஆனால் பணத்தை சம்பாதிப்பதற்கு நீங்கள்தான் முயற்சி செய்யவேண்டும். பரிகாரத்தை செய்து விட்டு வெறுமனே இருந்தால், பணம் பறந்து வந்து நம் கையில் அமராது. உங்கள் வீட்டில் பணம் சேர தடையாக இருக்கும் தோஷங்களை தான் இந்த பரிகாரம் தடுத்து நிறுத்தும், என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.