ஆஸ்திரேலிய தொடருக்காக தோனியை தொடர்ந்து நியூ லுக்குக்கு மாறிய கிங் கோலி – என்ன ஸ்டைல் அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்

Koli

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக வரும் 24ஆம் தேதி துவங்க இருக்கும் டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது. பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

Krunal

இந்த தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர் கொண்ட இரண்டிற்கும் இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் அணியில் இணைகிறார் கிங் கோலி. ஏற்கனவே பாக்க படு ஸ்மார்ட் ஆக இருக்கும் கோலி தற்போது நடைபெற உள்ள ஆஸ்திரேலிய தொடருக்காக புது லுக்கில் செமையாக இருக்கிறார்.

தாடியின் அளவினை கொஞ்சம் குறைத்தும், தலை முடியினை ஸ்பைக் முறையிலும் அலங்கரித்து டாஷிங் லுக்கில் கோலி இந்த புகைப்படத்தில் இருக்கிறார். இந்த பதிவினை அவரே பதிவிட்டு இருப்பதால் இது தற்போதைய புகைப்படம் என்பதில் சந்தேகமில்லை. இதோ அந்த புகைப்படம் :

இந்த தொடருக்காக இரு அணிவீரர்களும் இன்று ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணிக்கு எதிரான தொடருக்காக தீவிர பயிற்சி எடுத்து வரும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்