இந்த கோயிலிற்கு சென்றால் வெளிநாடு செல்வது கண்பார்ம் தெரியுமா ?

Perumall-compressed

“இந்தியா ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அந்நிய நாட்டவருக்கும், மதத்தவருக்கும் அடிமைப்பட்டு கிடந்ததற்கு காரணம் நாம் பிற நாடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் நல்ல விஷயங்களை கற்காதது தான்” என “சுவாமி விவேகானந்தர்” கூறுவார். அவர் அப்படி கூறிய நூறாண்டுகளுக்கும் மேலாகிய காலத்தில், இந்தியர்கள் உலகின் பல நாடுகளுக்கும் கல்விகாவும், தொழில், வியாபாரம் போன்ற காரணங்களுக்காகவும் சென்று, அங்கு பொருளும், புகழும் சம்பாதித்துள்ளனர். பொதுவாக ஒருவர் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் செல்லவிருக்கும் நாட்டின் “விசா” (VISA) எனப்படும் “அனுமதி சான்றை” அந்நாட்டின் அரசு, அவருக்கு வழங்க வேண்டும். சிலசமயம் அப்படியான “அனுமதி சான்றுகளை” சிலருக்கு அந்நாட்டின் அரசு பல்வேறு காரணங்களுக்காக வழங்காமல் நிராகரிக்கக்கூடும். அப்படி வெளிநாடு செல்ல வேண்டி விசா விண்ணப்பித்தவர்கள், அது நிராகரிக்கப்படாமல் இருக்க, சென்று வேண்டிக்கொள்ளும் ஒரு கோவில்தான் இந்த “விசா வெங்கடேஸ்வரர்” கோவில்.

Perumal temple

14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த “ஸ்ரீ பக்த ராமதாஸ்” என்கிற புகழ் பெற்ற ஞானியின் உறவினர்கள் இக்கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இக்கோவிலுள்ள மூலவரான “ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள்” இங்கு சுயம்புவாக கண்டுபிடிக்கப்பட்டது, இக்கோவிலுக்கு மேலும் சிறப்பை ஏற்படுத்துகிறது. வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டி விசாவிற்காக விண்ணப்பித்தவர்கள், அந்த விசா தங்களுக்கு கிடைக்க வேண்டி இக்கோவிலுக்கு வந்து வேண்டிக்கொள்ளும் வழக்கம் கடந்த 25 வருடங்களுக்கு முன்பிருந்து தான் ஏற்பட்டது என ஒரு சிலர் கூறுகின்றனர். இதில் அதிசயம் என்னவென்றால் இக்கோவிலில், தங்களுக்கு விசா கிடைக்க வேண்டும் என்று வேண்டிய பெரும்பாலானோருக்கு அவர்கள் விரும்பிய நாட்டின் விசா கிடைத்ததால், இக்கோவிலின் தெய்வமான “வெங்கடேஸ்வரரோடு” “விசா” சேர்த்து “விசா வெங்கடேஸ்வரர்” என்று அழைக்கத் தொடங்கினர் இங்கு வந்து வழிபட்டு பலனடைந்தவர்கள்.

இக்கோவிலுக்கு வரும் பெரும்பாலானோர் மேலை நாடுகளுக்கு, அதிலும் குறிப்பாக ” அமெரிக்கா” நாட்டுக்கு கல்வி, வேலை நிமித்தமாக விசா விண்ணப்பித்திருப்பவர்கள், அந்நாட்டின் விசா கிடைக்க இந்த விசா வெங்கடேஸ்வரரை வழிபடுகின்றனர். அப்படி வழிபட்ட பெரும்பாலானோருக்கு அந்த அமெரிக்க விசா கிடைத்திருக்கிறது. மேலும் தற்போது அமெரிக்க நாட்டின் விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்ட பிறகு, இங்கு தினமும் வந்து வழிபடும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அரசு கட்டுப்பாட்டில் இயங்காத இந்தியாவின் ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று. இங்கு மற்றொரு ஆச்சர்யமும் உள்ளது அது இக்கோவிலில் உண்டியல் இல்லை என்பதாகும். அதற்கு பதில் விசா கிடைக்க வேண்டுபவர்கள் 11 பிரதிட்சணைகளையும், விரும்பிய விசா கிடைத்தவர்கள் 108 பிரதிட்சணைகளும் இக்கோவிலில் மேற்கொள்ள வேண்டும் என்பதே இக்கோவிலுக்கான காணிக்கையாகும்.

Perumal

இதையும் படிக்கலாமே:
பூனையை மந்திரங்கள் ஓதச் செய்த போகர் சித்தர் – உண்மை சம்பவம்

ஒரு ‘1’ “மனித உடலையும்”, மற்றொரு ‘1’ “மனதையும்” குறிப்பதால் “11 பிரதிட்சணைகளும்”, “108” ல் 1 அந்த “பரம்பொருளையும்”, ” 0 ” நாம் வாழும் இவ்வுலகத்தையும்,” 8 ” “ஜீவாத்மாவையும்” குறிப்பதால் 108 பிரதிட்சணைகளையும் செய்ய வேண்டும் என்பது இக்கோவிலின் ஐதீகம். புகழ் பெற்ற இந்த “விசா வெங்கடேஸ்வரர் கோவில்” தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் “சில்கூர்” பகுதியில் அமைந்துள்ளது