பூனையை மந்திரங்கள் ஓதச் செய்த போகர் சித்தர் – உண்மை சம்பவம்

Bogar-1

சித்தர்கள் என்றாலே பொதுவாக எல்லோருக்கும் முதலில் நினைவிற்கு வருவது, சித்தர்கள் தங்களின் சித்தாற்றல்களால் நிகழ்த்திய அற்புதங்களே. நம் தமிழ் மண்ணில் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்திருந்தாலும் ஒரு சில சித்தர்களை மட்டுமே பெரும்பாலானோர் நன்கு அறிந்துள்ளனர். அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவரான போகர் தமிழ் மக்கள் வழிபட்டு பயன் பெற பழனி மலை முருகன் கோவிலில் நவபாஷாண முருகன் சிலையையும் எண்ணற்ற ஜோதிட, மருத்துவ நூல்களையும் இயற்றியிருக்கிறார். இத்தனை மகத்துவம் கொண்ட போகச் சித்தர் மக்களின் வறுமையைப் போக்க நிகழ்த்திய அற்புதத்தை இங்கு காணலாம்.

bogar-sidhar

சித்தராக பல இடங்களுக்கும் சுற்றித் திரிந்த போகர் ஒரு ஊருக்கு சென்றிருந்த சமயம் அவ்வூர் கடும் பஞ்சத்தில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தது. மக்கள் எல்லோரும் ஏழ்மை நிலை அடைந்து, மழை பொழிவதற்காக வேதியர்களைக் கொண்டு யாகம் செய்துகொண்டிருந்தனர். கடுமையான தாகத்தால் களைப்படைந்த போகர், அம்மக்களிடம் சென்று தன் தாகத்தை தீர்க்க சிறிது தண்ணீர் தருமாறு கேட்டார். இடுப்பில் மட்டுமே ஆடையும், நீண்ட தலைமுடியும், தாடியும் கொண்ட போக சித்தரின் தோற்றத்தைக் கண்டு ஏளனம் செய்த அம்மக்கள், அவருக்கு தண்ணீர் தர முடியாது என்று மறுத்ததோடு, அவரை அங்கிருந்து செல்லுமாறு அதற்றினர்.

இதைக் கேட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டார் போகர். அப்போது அவ்வழியே வந்த ஒரு பூனையை தன் “மிருக வசிய” சித்தாற்றலால் தன்னிடம் வரவழைத்தார் போகர். இவரின் இச்செயல்களை அவ்வூர் மக்களும் பார்த்துக்கொண்டிருந்தனர். பிறகு அப்பூனையின் காதுகளில் போகர் ரகசியமாக ஏதோ ஒன்றைக் கூற, அதைக் கேட்ட அப்பூனையும் அவ்வேதியர்களைப் போலவே வேத மந்திரங்களை கூற ஆரம்பித்தது இதைக் கண்ட அவ்வூர் மக்களும், அவ்வேதியர்களும் திகைத்து நின்றனர். வந்திருப்பவர் சாதாரண மனிதரல்ல ஒரு சித்த புருஷர் என்பதை உணர்ந்த அந்த வேதியர்களும்,அவ்வூர் மக்களும் போகரின் கால்களில் வீழ்ந்து தங்கள் குற்றத்தை மன்னிக்குமாறு வேண்டினர். இதைக்கேட்டு அவர்களை மன்னித்து அவர்களுக்கு ஆசிகளை வழங்கினார் போகர்.

village

அதன் பிறகு அவ்வூர் மக்கள் போகரிடம் தங்களின் வறுமையை போகுமாறு வேண்டினர். அப்போது போகர் அந்த ஊரிலுள்ள அனைவரின் வீட்டிலிருந்தும் உலோக பாத்திரங்களை கொண்டுவந்து, வெட்டவெளியில் தீ வளர்த்து அதில் அப்பத்திரங்களை போட்டு உருக்குமாறு கூறினார். அவர் கூறியபடியே அம்மக்களும் செய்தனர். அப்படி தீயில் உருகிக்கொண்டிருந்த உலோகங்களில் தன் “ரசவாத” திறனால் தயாரித்த ஒரு ரகசிய திரவத்தின் சில துளிகளை அவ்வுலோகங்களின் மீது தெளித்தார் போகர். அத்தீ அணைந்த பின் பார்த்த போது அந்த உலோகங்கள் அனைத்தும் தங்கமாக மாறியிருந்தன. அதோடு மழை பொழிவதற்கான வழியையும் அவர் கண்டறிந்து அதற்கான பூஜை முறையையும் கூறினார். தனது அபார சித்தாற்றலால் தங்களின் வறுமையை போக்கிய போகரை அவ்வூர் மக்கள் அனைவரும் சிரம் தாழ்ந்து வணங்கினர்.

இதையும் படிக்கலாமே:
2000 ஆண்டுகள் பழைமையான கோவிலில் அண்டார்டிகா பனிமலை குறித்த கல்வெட்டு

English Overview:

Here we described about some miracles done by Bogar Siddhar in Tamil. He made a cat to chant mantra, by seeing that people got surprised and touched his feet.